அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வியாழன், பிப்ரவரி 13, 2014

ஈமானின் எழுச்சி



அஸ்ஸலாமு அழைக்கும் !
அல்லாஹ்வின் திருபெயரால் ....
வாழ்வதற்காகத்தான் அல்லாஹ் நம்மை படைத்தான். வீணாக அழுவதற்காகவும் , அழிவதற்காகவும் அல்லாஹ் நம்மை படைக்கவில்லை . எல்லாம் என் தலைவிதி ! என்று கடந்த காலத்தை எண்ணி வருந்துவது , என்ன செய்யப் போறமோ ! தெரியலையே ! என்று எதிர் காலத்தை எண்ணி ஏங்குவது நமது பலகீனமாக உள்ளது. வாழ்க்கையை கசப்பாக்குவதும்  இனிப்பாக்குவதும் நமது கையில் அல்லாஹ் தந்துள்ளான் .

நெருப்புக்கு மத்தியிலிருந்து மகிழ்வடைய எப்படி முடியும் ? வெள்ளத்திற்கு நடுவில் எப்படி நிம்மதி கொள்ள முடியும்? அல்லாஹ்வின் அருள் இருந்தால் எல்லாம் முடியும். நெருப்பு குழிக் குள்ளே இருந்து ஹஜ்ரத் இப்ராஹீம் நபி (அலை) அவர்களும், நைல் நதியின் நடுவில் ஹஜ்ரத் மூஸா நபி (அலை) அவர்களும் நிம்மதி பெறவில்லையா ?

ஆக, அல்லாஹ்வை எல்லையாகக் கொண்டு வாழும் மனிதனுக்கு தொல்லையில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்பம் வந்தாலும் அல்ஹம்துலில்லாஹ்  " ! துன்பம் வந்தாலும் அல்ஹம்துலில்லாஹ்! என்று அல்லாஹ்வை  நாவால் புகழ வேண்டும் !

"என்ன பிழைப்பு செத்த பிழைப்பு பிழைப்பா இது ? பேசாம செத்துறலாம். எதோ வண்டி ஓடுது! ச்சே நாய் பிழைப்பா போச்சு " என்று புலம்புபவர்களை  நாம் பார்க்கிறோம். இது இயலாதவர்களின் அடையாளமாகும் . நல்ல வாழ்க்கை அமைந்திட  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நல்ல பல உபதேசங்களை செய்துள்ளார்கள்  .

"உண்மையை மட்டும் பேசு! தேவையானதை மட்டும் பேசு! . பொய் ,கொள் புறம், அவதூறு , இட்டுகட்டுதல் எதையும் பேசவே கூடாது . நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடல் உழைப்பால் நீ சாப்பிடு ! பிறருக்கும் கொடு பிறரிடம் யாசிக்க்காதே ! யாசிப்பவனை நிந்திக்காதே!

ஒன்றும் தெரியாத மக்களாக , ஆடுமாடு ஒட்டகங்களை மேய்ப்பதை மட்டுமே வாழ்வாகக் கொண்டிருந்த மக்களை நேர்வழி காட்டி , மார்க்கத்தின் ஞானங்கலை ஊட்டி  ,நபித்துவ ஒளியான குர் ஆனை காட்டி மனனமிடச் செய்து அல்லாஹ்வால் பொருந்திக் கொண்ட மக்களாக புனிதர்களாக ஆக்கினார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். கண்ணியம் பெற்ற இந்த இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் , உலக மக்களை நன்மையின் பக்கம் அழைத்தார்கள் . யுத்த களங்களில் தன்னுயிர்களை தியாகம் செய்து இஸ்லாத்தை காத்தார்கள் . இறை வணக்கங்களில் ஈடு இணையற்ற திகழ்ந்தார்கள் . கொடுக்கல் வாங்கலில் ஹலாலை பேணி ஹராமை தவிர்த்தார்கள்.

சுற்றத்தாரிடம் ,அண்டை வீட்டார்களிடம் , ஏழைகளிடம் மிகவும் நேசமுடனும் உதவியும் செய்துவந்தார்கள் . மாநபி (ஸல்) அவர்களுடன் அருமைத் தோழர்களான சஹாபா பெருமக்கள் கலந்துறவாடி கற்றுக் கொண்ட கல்வி ஞானங்கலை உலகெங்கும்  பரப்பிட சென்றுவிட்டார்கள்.

எனவேதான் பலலட்சம் சஹாபாக்கள் வாழ்ந்த புனித மக்காவில் சங்கைமிக்க மதீனாவிலும் சில ஆயிரம் சஹாபாக்களின் மண்ணறைகள் மட்டுமே உள்ளன . மற்றவர்கள் இஸ்லாமிய சுடர் ஏந்தி உலகின் எண் திக்குகளிலும் சென்று அடக்கமாகிவிட்டார்கள். யார்? எந்த மனிதர் அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் பெற வேண்டும் என்று எண்ணுகிறாரோ , நேர்வழியில் தன்னை அல்லாஹ் நடத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அவர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அவனது வழியை பலமாக பற்றிப்பிடித்திர வேண்டும்.

ஹஜ்ரத் அம்ரிப்னு ஆஸ் (ரலி) அவர்களின் மரணநேரத்தில் ஒரு சுவற்றின் பக்கம் முகத்தை திருப்பி அழுது கொண்டிருந்தார்கள் . அருகிலிருந்து அவர்களின் மகன் "தந்தையே! உங்களின் நண்பர் நபி(ஸல்) அவர்கள் உங்களுக்குச் சுபச் செய்தி சொல்லியிருக்கிறார்கள் அல்லவா! பின்பு ஏன் அழுகிறீர்கள் "? என்றார். அதற்க்கு அம்ரிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஒரு காலத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது வெறுப்பு கொண்டவன் என்னைப்போல் யாரும் கிடையாது . அந்த நபியை கொன்று விட பலமுறை சந்தர்பங்களை எதிர்பார்த்து வெறியாக அலைந்தேன் . இது என் வாழ்நாளில்  மோசமான நாளாகும் . இதே நிலையில் நான் மரணித்திருந்தால்  நிச்சயம் நான் நரகவாசியாக ஆகியிருப்பேன் . ஆனால் , அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டினான் . அதன் பின்பே நபியவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது . அவர்களின் அருகில் சென்று " உங்களிடம் பைஅத் செய்திட கரங்களை நீட்டுங்கள் " என்றேன் உடனே நபியவர்கள் நீட்டினார்கள்.

"யா ரசூலல்லாஹ் ! உங்களிடம் சில நிபந்தனைகளிட விரும்புகிறேன் " என்றேன் 'என்ன நிபந்தனை ?' என்றார்கள் . என் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட வேண்டும் அதிகமாக பாவம்தான் செய்துள்ளேன் . என்னை அல்லாஹ் மன்னிப்பானா ? இஸ்லாமை  நீ ஏற்றுக்கொண்டால் பாவம் நீங்கும் , ஹஜ் செய்தால் பாவம் நீங்கும் ' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அதன்பின் இஸ்லாமான எனக்கு நபியைவிட உலகில்  மிக விருப்பமானவராக என் பார்வையில் எவருமில்லை . எழ்மையாக அறிவில்லாதவனாக இருந்த என்னை ஈமான் உயர்வாக்கி செல்வனாக்கியது " என்று ஹஜ்ரத் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறி முடித்தார்கள்.

நமது உயர்வுக்கும் இருலோக வெற்றிக்கும் வழி அல்லாஹ்வை வழிப்படுவதில் மட்டுமே உள்ளது . அல்லாஹ்வுக்கு வழிப்பட்ட நல்லடியார்களில் அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்தருள் புரிவானாக! ஆமீன்.........................

அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!