ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

இப்போதே கற்றுக்கொடுங்கள்




அல்லாஹ்வின் திருபெயரால் ...
"என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே ! நிச்சயமாக இணை வைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும்."
அல்குர் ஆன் :31-13

பிள்ளைச் செல்வம் பெருஞ் செல்வம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றேயாகும். எனினும் குழந்தைகளை பேணிப் பாதுகாத்து வளர்ப்பது குடும்ப வியலில் தலையாய கடமை என்பதை மறந்துவிடக் கூடாது .

தனது பிள்ளைகளின் உணவு, உடை மற்றும் அவர்கள் ஆசைகளை பூர்த்தி செய்வதில் காட்டுகிற அதீத அக்கறையில் ஒரு சிறு பங்கையாவது அச்சிறுவர்களில் கல்வி, ஒழுக்கம், மார்க்கப்பற்று போன்ற விஷயங்களில் காட்டுவது இன்றியமையாததாகும் .

நல்ல பண்புகளோடு வாழ்பவர்களே ஈருலகத்தின்  ஈடேற்றத்திற்குரியவர்களாகி  விடுகிறார்கள். எவர் ஒழுக்கம்  நிறைந்த  சூழலில் வளர்க்கப் படுவாரோ அவர் சமுதாயத்தில் ஒப்பற்ற மனிதராகத் திகழ்கிறார் . இதன் காரணத்தினால் தான் ஹஜ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் "ஒரு தந்தை  தன் மகனுக்கு நல்லொழுக்கத்தை விட சிறந்த அன்பளிப்பை வழங்கி விட முடியாது" என்று கூறினார்கள்.

பெற்றோர் கவனத்திற்கு:-
குழந்தை வளர்ப்பு என்பது பிள்ளை பருவம் அடைந்த பின்புதான் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டாலும் கூட அது சாத்தியமில்லை என்பதே உண்மை. கருவுற்றிருக்கும் தாயின் உணர்வுகள் கருவில் உள்ள குழந்த்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற இன்றைய விஞ்சான கூற்றுப்படி குழந்தை வளர்ப்பு கருவுற்றிருக்கும் நிலையிலேயே தொடங்கி விடுகிறது  என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கர்ப்பிணிப் பெண்ணின் காதில் விழும் ஓசைகள் சிசுவை சென்றடையும் என்பதும் , பிறந்த பின் அவ்வோசைகளை கேட்கும்போது அப்பிஞ்சுகல்  அடையாளம் கண்டு கொள்ளும் என்பதும் அறிவியல் கூறும் உண்மைகளாகும். எனவே குர் ஆன் ஓதும் சப்தங்களையும் , நல்லுபதேசங்களையும் , இஸ்லாமியப் பற்று உண்டாக்கும் கல்விகளையும் கேட்கும் சிசுக்கள் பிறந்த பின் இந்த சப்த்தங்களை தெரிந்துகொள்ளவே செய்வார்கள்.

இச்செய்திகளை கவனத்தில் கொண்டு மார்க்கம் தழுவிய சூழலை ஏற்படுத்தி பராமரிப்பது முற்றிலும் பெற்றோரையே சார்ந்ததாகும்.  நல்ல சூழலை அமைக்க தவறிவிடும் போது குழந்தைகளின் மார்க்கமற்ற நிலைக்கு தாய் , தந்தையே காரணமாகிவிடுகிற அபாயம் உள்ளது.

இக்கருத்தையே-
"ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாமிய(ஏற்கும்) தன்மையுடன் பிறக்கின்றன .அவர்களின் பெற்றோர்களே அக்குழந்தைகளை யூதர்களாக , கிருத்துவர்களாக , நெருப்பை வணங்குபவர்களாக மாற்றிவிடுகின்றனர்" என்ற நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது .

'நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளை என்ற சொல் வழக்கும் இக்கருத்திற்கு வலு சேர்பதாகும் . குழந்தையின் வளர்ப்பு முறைகளை வைத்து அது சுல்தானாக இருக்குமா அல்லது ஷைத்தானாக மாறுமா என்பதை யூகித்துவிட முடியும். விளையும் பயிர் முளையிலேயே தெரிந்துவிடும் .

எந்த வயது பொருத்தமானது?

"சிறுவயதில் கற்கும் கல்வி கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைப்போல நிலைத்து நிற்கும்" என்ற அரபு சொல் ஒன்று உண்டு. வயது முதிர்ந்த காலத்திலும் கூட தங்களின் சிஐபிராயத்தில் கற்ற விஷயங்களை நினைவு கூறுபவர்களை நாம் அன்றாட வாழ்வில் கண்டு கொண்டிருப்பதே இதற்கு சான்று . எந்த செய்தியையும் உள்ளத்தில் அழுத்தமாக பதித்து கொள்ளும் இயற்க்கை கொண்டுள்ள அப்பிஞ்சுகலிடம் நல்ல விஷயங்களை விதைப்பதே அனைவருக்கும் நம் பயக்கும்.

"உங்கள் குழந்தைகள் பேச ஆரம்பித்தால் கலிமா (லா இலாஹ இல்லல்லாஹூ ) வை கொண்டு தொடங்குகள் " எனும் ஒரு நபிமொழி  இதையே நமக்கு உணர்த்துகிறது.
அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி)
நூல்: பைஹகீ )

இயல்பாகவே நாம் கூறும் செய்திகளை உள்வாங்கும் தன்மையும் , அதை பற்றிப்பிடிக்கும் சுபாவமும் உள்ளவர்களாகவே குழந்தைகள் திகழ்கின்றனர் . போதிக்கும் விஷயங்களை விலங்கமாட்டார்கல் என்று தவறாக எண்ணி எடுத்துரைக்க வேண்டியவற்றை விட்டுவிடக் கூடாது. பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு கனியை சிறு பிள்ளையான ஹஜ்ரத் ஹசன் (ரலி) அவர்கள் எடுத்து வாயில் போட்டவுடன் நபியவர்கள் "துப்பு என்று மூன்று முறை கூறிவிட்டு அக்குழந்தையிடம் சதக்காவின் பொருளை நாம் சாப்பிடக்கூடாது " என்று அறிவுறுத்தினார்கள் .
அறிவிப்பாளர் :ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி)
நூல் :புகாரி)

நல்ல ஒழுக்கங்கள் கட்டாயம் கற்றுத்தர வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாயிப்பில்லை .  ஹஜ்ரத் லுக்மான் (அலை) அவர்கள் தன் மகனை பார்த்து " என் அருமை மகனே ! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே, நிச்சயமாக இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் ." என்ற அடிப்படை கொள்கையை ஆரம்பமாக போதித்தார்கள்.

இன்பம், துன்பம் என்ற அனைத்து நிலைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன . அதை நாம் முழு மனதோடு ஏற்கவேண்டும் , அவனிடமே குறைகளை களையும்ப்படி மன்றாட வேண்டும் என்ற அடிப்படை செய்திகளை ஆரம்பத்திலேயே குழந்தைகளின் உள்ளத்தில் விதைக்க வேண்டும்.

"நீ உதவி தேட நாடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுங்கள்" என்றும், ஒரு கூட்டத்தினர் இறைநாட்டமின்றி உமக்கு எந்த நலனையும் தர முடியாது, அவனது நாட்டமின்றி உமக்கு எந்த தீங்கையும் தந்து விட முடியாது " என்றும் நபியவர்கள் அன்றைய தினத்தில் பத்துவயது சிறுவரான ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கற்றுத்தந்தார்கள்.
திர்மிதி)

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!