அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், பிப்ரவரி 12, 2014

இதய உறுதி கொள்ளுங்கள்!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
உலகில் பிறந்த மனிதரெல்லாம் உலகை பிரியும் மனிதர்களே!
உலகம் உதித்த நாள் முதலாய் உணரும் உண்மை தத்துவமே !
பிறப்பு என்று உண்டானால் பின்னர் இறப்பு உண்டாகும் !
இறப்பு என்ற இயற்கையினை எவரும் வெல்ல முடியாதே!
உடலில் கலந்த உயிரெல்லாம் ஒருநாள் உடலைப் பிரிவதுதான்!
திடமாய் நிலைக்க முடியாதே! திரும்ப  பிறப்பும் கிடையாதே!
எழு ஜென்மம் என்பதெல்லாம் இஸ்லாம் தந்த கொள்கையில்லை !
வாழும் உலகில் ஒருமுறைதான் ! பிறப்பும்,இறப்பும் மாற்றமில்லை!
ஒருமுறை பிறந்து இறப்பவர்கள் இறைவன் அருளால் மறுமையிலே
உருதந்து எழுப்பப் படுவார்கள்! உலகின் வாழ்வை உணர்வார்கள் !
நன்மை செய்தோர் நற்சொர்க்கம் நன்மை செய்யார் துர்நரகம்
தன்னை பெற்றுக் கொள்வார்கள்! தகமை வாழ்வை வெல்வீரே !
ஆதம் நபிகள் முதற்கொண்டு அனைவரும் அழிந்து  போனவரே !
நீதம் கொண்டு நடப்பீரே ! நலமாய் சொர்க்கம் பெறுவீரே!
ஒவ்வொரு செயலும் உளமார உணர்ந்து வாழ்வை வெல்லுங்கள் !
இவ்விதம் ஒவ்வொரு நாட்களிலும் இதயம் உறுதி கொள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!