அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, பிப்ரவரி 01, 2014

மரணம் வந்தால் .......அல்லாஹ்வின் திருபெயரால் ...

"உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னரே உங்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து (நல்வழியில் ) செலவு செய்யுங்கள்.  (அவ்வாறு செலவு செய்யாத ஒருவன் மரண வேளையில் ) என்னுடைய இறைவனே! சிறிது காலம் வரை என்னை நீ பிற்படுத்தி வைக்கக்கூடாதா ? (அவ்வாறு பிற்படுத்தி வைத்தால்) நான் தர்மம் செய்து நல்லோரில் உள்ளவனாக ஆகி விடுவேன் என்று அவன் கூறுவான்".
அல்குர் ஆன் :63-10


"அல்லாஹ் எந்த ஆத்மா வையும் அதனுடைய தவணை வந்து விட்டால் பிற்படுத்தவே மாட்டான். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்".

அல்குர் ஆன்:63-11

இறைறைவன் வழங்கிய பொருள் வளத்தை நல வழியில் செலவு செய்யாத மனிதனின் நிலை மட்டுமல்ல . இறைவன் வழங்கிய மேலான வாழ்க்கையை நல் வழியில் பயன்படுத்தாத நற்செயல்கள் செய்யாத ஒவ்வொரு மனிதனின் நிலையம் இப்படித்தான் இருக்கும்.

மரணம் வரும்போது கத்துவார்கள். கதறுவார்கள் . அழுது புலம்புவார்கள் .மரணத்தைத் தள்ளிப் போடா வேண்டுமென்று கெஞ்சுவார்கள் . ஆனால் ஒரு போதும் அது நடக்கவே நடக்காது. எனவே மரணம் வரும் போது புலம்பக் கூடியவர்களை விட அதற்கு முன்பாகவே தயாராக இருப்பவர்கள் தான் புத்திசாலிகளாக இருக்க முடியும்.

ஒரு தாயின் வயிற்றிலிருந்து இந்த உலகத்துக்கு வரும்போது உயிரற்ற  நிலையில் இறந்தே பிறந்தவர்கள் எத்தனையோ பேர் ...?  பிறந்தவுடன்  உடனடியாக இறந்தவர்கள் எத்தனையோ பேர் ...? பிறந்த சில நாட்களில் இறந்து போன வர்கள் எத்தனையோ பேர்..? இன்னும் எத்தனையோ மக்கள்? பலசாலிகள். இளம் வயதுக்காரர்கள் . எல்லா விதமான வசதி களையும் பெற்றவர்கள் . எந்த விதமான நோயிகளும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தவர்கள் . அவர்களைப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இறந்து போவார்கள் என்று யாராலும் சொல்லவே முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இருந்தவர்கள். ஆனாலும் திடீரன்று இறந்து போயிருக்கிறார்கள் . இப்படிப்பட்ட மக்கள் எத்தனையோ பேர்..

ஒரு மனிதனின் சராசரியான வாழ்க்கை எத்தனை நாட்கள் என்பது யாருக்குமே தெரியாது. கண் சிமிட்டும் நேரமாகவும் இருக்கலாம் . ஒரு சில மணித் துளிகளாகவும் இருக்கலாம். நீண்ட நெடிய காலமாகவும் இருக்கலாம். அதைப் பற்றிய ஞானம் இறைவனிடம் மட்டுமே இருக்கிறது . ஒரு மனிதனின் சராசரியான வாழ்க்கையின் அளவு கூடுதலாக எத்தனை நாட்கள்ளாக இருக்கும் என்பதைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லி இருக்கிறார்கள்:

"எனது சமுதாய மக்களின் (உம்மத்துகளின்) வாழ்நாள் (பெரும்பாலும்) அறுபதுக்கும் எழுபதுக்கும் மத்தியில் உள்ள நிலையாகும் . அதையும் கடந்து வாழ்பவர்கள் மிகவும் குறைவு தான் ".

நூல்: திர்மிதி)

"ஒவ்வொரு மனிதரும் நிச்சயமாக இறந்து போவார்கள் " " மண்ணறை வாழ்வை சந்திப்பார்கள்" " மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள். " இறைவனுக்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள்" " ஒவ்வொரு நி ஃ மத்தைப் பற்றியும் இறைவனால் விசாரணை செய்யப்படுவார்கள் ". நல்லவர்கள் சொர்க்கம் செல்வார்கள். கெட்டவர்கள் நரகம் செல்வார்கள்.  என அல்குர் ஆன் கூறுகிறது. குர் ஆன் கூறும் அனைத்தும் நிச்சயமானது, உறுதியானது. இவற்றில் எதை விட்டும் எந்த மனிதரும் தப்பிக்க முடியாது . அப்படியானால் இவைகள் அனைத்தையும் சந்திப்பதற்கு நாமெல்லாம் தயாராகி விட்டோமா ? அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டோமா ? என்றல்லாம் நமக்கு நாமே கேள்விகள் கேட்டு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு தோழர்  நபி (ஸல்) அவர்களிடம் வந்து " கியாமத் நாள் (இறுதித் தீர்ப்பு நாள் ) எப்போது வரும்? " என்று கேட்டார் . " உமக்கு நன்மை உண்டாகட்டும்! அதற்காக அதிகமாக ஆயத்தம் எதுவும் செய்யவில்லை . எனினும் அல்லாஹ்வையும்  அல்லாஹ்வின் தூதரையும் மிகவும் நேசிக்கிறேன்" என்றார் அந்த தோழர் . " ணீர் யாரை விரும்புகிறீரோ அவருடனே இருப்பீர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி, முஸ்லிம்)

அவர்களைப் போல நாமும் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நேசிக்க வேண்டும். அந்த நேசத்தின் அடிப்படையிலேயே நமது வாழ்க்கையும் இருக்க வேண்டும்.

மரணத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறோமா ? அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டோமா? மரணம் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா ? கவலையை கொடுக்குமா ? மரணம் நம்மை சுவனத்துக்கு அழைத்துச் செல்லுமா ? நரகத்துக்கு அழைத்துச் செல்லுமா ? நமது உயிர் மென்மையாக எடுக்கப்படுமா ? வன்மையாக எடுக்கப்படுமா ? நமது மரணம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் ,? அதற்காக  என்ன செய்ய வேண்டும் ? அதை எல்லாம் நாம் செய்து இட்டோமா ?  எண்ணிப் பார்க்க வேண்டும்!

கடைசியாக ஒரே ஒரு ஹதீஸைக் கொண்டு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நாளில் ) மனிதனிடம் ஐந்து விஷயங்கள்  குறித்து விசாரணை நடத்தபடாத வரை அவன் அந்த இடத்தை விட்டும் கொஞ்சம் கூட நகர முடியாது.

"தனது வயதை எவ்வாறு செலவு செய்தான் ?
தனது இளமையை எவ்வாறு பயன்படுத்தினான் ?
செல்வத்தை எவ்வாறு  சம்பாதித்தான் ?
செல்வத்தை எவ்வாறு செலவு செய்தான் ?
கற்ற கல்வியின்படி எவ்வாறு செயல்பட்டான்?

திர்மிதி என்னும் ஹதீஸில் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கேள்விகளுக்கு மறுமையில் இறைவனிடத்தில் எவ்வாறு பதில் சொல்லப் போகிறோம் ?
நீங்களும் , நாங்களும் சிந்திக்க நேரம் வந்தாச்சு!

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!