அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, பிப்ரவரி 14, 2014

இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் (தொடர்ச்சி )
இஸ்லாம் சத்திய மார்க்கம் நாம் சத்தியத்தில் இருக்கிறோம் . இந்த இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகள் , சடங்கு , சம்பிரதாயம்  இவைகளுக்கு இடம் இல்லை.

விதவைகளைக் கண்டால் :
மூடநம்பிக்கைகளின் பட்டியலை நாம் திறந்து பார்த்தால் அங்கே மிக முக்கியமாகக் காட்சி தருவது விதவைகள்தான்."விதவைகளை கண்டால் காரியம் உருப்படாது . வெற்றி கிடைக்காது " என்றல்லாம் நினைத்து விதவைகளை கேவலப்படுத்துவதை பரவலாகக் காண முடிகிறது . அதுவும் பெண்களே அவர்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர் .

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் விதவை பெண்கள் கலந்து  கொள்ள அனுமதி மறுக்கபடுகிறது . பாதையில் நடந்து செல்லும் சமயம் எதிர் திசையில் விதவைகள் தென்ப்பட்டால்  உடனே வீட்டுற்குள் சென்று விட்டு திரும்ப பாதையில் நடப்பது, விதவைகளை பார்ப்பதையே துர்சகுனமாக கருதுவது. இதுவெல்லாம் மிக மிக முட்டாள்  தனமாக செயல்களாகும். இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு நமது இஸ்லாமிய மார்க்கத்தில் கொஞ்சமும் கூட அனுமதி கிடையவே கிடையாது . இவை எல்லாம் ஷைத்தானின் அடிச்சுவடுகலாகும் .

பூனை குறுக்கே வந்தால் , ஆந்தை கத்தினால் கெட்ட சகுனம் என்பது, "காக்கை கத்தினால் விருந்தினர் வருவார் " என்பது இவையெல்லாம் மூடநம்பிக்கையின் உச்சகட்டங்கலாகும் .

துக்கம்

உறவினர் யார் இறந்தாலும் அவர்களுக்காக மூண்டு தினங்கள் மட்டுமே துக்கம் கடைபிடிக்க அனுமதிஉண்டு . பிறகு சகஜ வாழ்க்கைக்கு வந்திட வேண்டும் . மாதக் கணக்கில் வருடக் கணக்கில் துக்கம் கொண்டாட அனுமதி கிடையாது . (சிலர் வீட்டில் யாரவது ஒருவர் இறந்துவிட்டால் , ஒரு வருடம் கழிக்காமல் அவர்கள் பெருநாள் கொண்டாடமாட்டார்கள் . இப்படியும் சில மக்கள்கள் இருக்க தான் செய்கிறார்கள் .)
ஆனால் , மனைவிக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. கணவன் இறந்துவிட்டால் ஹிஜ்ரி மாதத்தை கணக்கிட்டு "நான்கு மாதங்கள் பத்து தினங்கள் " துக்கம் கடைபிடிக்க வேண்டும் . கணவனால் "விவகாரத்து " செய்யப்பட்ட பெண் (மனைவி) "மூன்று மாதவிடாய் காலங்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும் .இதனையே "இத்தா " என்று சொல்லப்படுகிறது . கணவன் இறந்து அல்லது விவாகரத்து செய்த மறுகணமே "இத்தா " உடைய நேரம் ஆரம்பமாகிவிடுகிறது . இதுதான் மார்க்க சட்டமும் கூட. அல்லாஹ்வின் வரைமுறையும் ஆகும் . இதனை மீறுவது மாபெரும் குற்றமாகும் .

ஆனால், சில ஊர்களில் "இத்தா" விஷயத்தில் சில நடைமுறை மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளனர் . "கம்யூட்டர் இத்தா" என்ற பெயரில் நாற்பது நாட்கள் மட்டும் இத்தா இருப்பது . பின்பு சகஜ வாழ்க்கைக்கு அப்பெண் வந்துவிடுவாள் .
இன்னும் சில ஊர்களில் இறந்தவுடன் இத்தா இருப்பதில்லை இறந்தவருக்காக மூன்றாம் நாள் ஃ பாத்திஹா அல்லது பத்தாம் நாள் ஃ பாத்திஹா அல்லது நாற்பதாம் நாள் ஃ பாத்திஹா ஓதியபின் "இத்தா வைக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் பெண்கள் எல்லாம் ஒன்று கூடி "இத்தா" இருக்க வேண்டிய பெண்ணை பட்டுச் சேலை , வளையல் , பூ போன்ற வற்றை அணியச் செய்து கடைசியில் அங்கு குழுமியுள்ள வயதான பெண்கள் எல்லாம் "புருஷன் இழந்த உனக்கு எதுக் பட்டு , பூ வளையல் ?" என்று சொல்லி ஒவ்வொன்றாக அப்பெண்ணை விட்டும் அகற்றி கடைசியில் வெள்ளை நிறச் சேலையை உடுத்தச் செய்து வெளிச்சம் ,காற்று இல்லாத ஓர் அறையில்  அப்பெண்ணை தள்ளிவிடுகின்றனர் .

இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்றுள்ளது . கணவனை இழந்த துக்கத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் அப்பெண் இதனை எப்படி தாங்கிக் கொள்வாள் ? இப்படியெல்லாம் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தினால்தான் "இறந்து போன (கணவ)ரின் ஆன்மா சாந்தியடையும் என்று ஷைத்தானின் வேதம் வேறு ஒதுக்காட்டுவார் .இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை .

ஆனால், பரவலாக ஒரு எழுதப்படாத சட்டம் இஸ்லாமிய சமூகத்தில் உலா வருகிறது. அதாவது, முஸ்லிம் அல்லாத பெண்கள் , கர்ப்பிணி பெண்கள் இத்தா இருக்கும் பெண்ணை காணக் கூடாது என்று கூறி இவர்களை தடுக்கும் ஒரு செயல் பரவலாக காணப்படுகிறது. இதுவும் மூடநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் . இதற்கும் இஸ்லாத்திருக்கும் எவ்வித சமந்தமும் இல்லை .இன்னும் அடுகிகொண்டே போகலாம்  .

நம் இஸ்லாமிய சமுதாயத்தில் இன்னும் நிறைய மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டுதான் வருகிறது . மக்களின் அறியாமை , மார்க்க கல்வி தெரியாமை , மார்க்கக் கல்வியை அறிந்துகொள்வதற்கு ஆர்வம் இல்லாமை . மக்கள்கள் இன்னும் மூடநம்பிக்கைகளில் முழ்கி தான் இருக்கிறார்கள் என்பதில் ஒரு துளிகூட சந்தேகம் இல்லை .

அல்லாஹ் நமக்கு இஸ்லாத்தை விளங்ககூடிய தன்மையை தருவானாக ! இஸ்லாத்தின் பாதையில் பயணிக்கும்படி செய்வானாக ! முஸ்லிமாக மரணிக்கச் செய்வானாக ! சுவனத்தில் நுழைய கிருபைச் செய்வானாக ! ஆமீன்...............

அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!