அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, பிப்ரவரி 14, 2014

இஸ்லாத்தில்முழுமையாக நுழைவோம்

இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் !

அல்லாஹ்வின் திருபெயரால் ...

''இறை நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் . ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் ! அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி {எதிரி }யாவான் ."
அல்குர் ஆன் [2.208}


"அவன் {ஷைத்தான் }உங்களுக்கு தீமையையும் , வெட்கக் கேடானதையும் , நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் தூண்டுகிறான் ".
அல்குர் ஆன் .2.169}

மேற்கூறப்பட்ட இறைவசனங்களை  சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்  .இவை "இஸ்லாம் " அல்லாத மற்ற சமுதாய மக்களுக்கு இடப்பட்ட கட்டளைகள் அல்ல. மாறாக இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு இடப்பட்ட கட்டளைகளாகும் ."இறை நம்பிக்கை கொண்டோரே " என்று அல்லாஹ் அழைப்பதிலிருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம் .

தொழுகை , நோன்பு , ஜகாத், ஹஜ் போன்ற ஆன்மிக வணக்க வழிபாடுகளை மட்டுமின்றி  திருமணம் , வியாபாரம் , கொடுக்கல்-வாங்கல் , தொழில் , சாப்பிடுதல்  ,குளித்தல், மல-ஜலம்  கழித்தல் ,அரசியல் போன்ற உலக விஷயங்கள் குறித்தும் , அவற்றில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் , கட்டுபாடுகள், தவிர்க்க வேண்டிய  மூட நம்பிக்கைகள்  குறித்தும் "இஸ்லாம் " தெளிவுபடுத்தியுள்ளது . ' நாகரிகம்  " என்ற பெயரிலே "அநாகரீகமான கலாச்சாரங்கள் " உலகலாவிய அளவிற்கு காணப்படுகின்றன .ஆனால் இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ள கலாச்சாரம் " எளிமையாகவும் , எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலும்  , நாகரீகமாகவும் , மக்கள் சமூகத்திற்கு பாதுகாப்பு கவசமாகவும் அமைந்துள்ளது.

பதினைந்து நூற்றாண்டுகளை கடந்தும் எவ்வித மாற்றமும் இன்றி எல்லாக் காலத்திற்கும்  பொருந்தும் அளவிற்கு அது அமைக்கப்பட்டுள்ளது . இன்னும் உலகம் அழியும்  வரையிலும் எவ்வித மாற்றமும் அதற்க்கு தேவைப்படவே செய்யாது  . காரணம் ,அக்கலாச்சாரம் அல்லாஹ்வினாலும் , அவனது இறுதித் தூதர்  அண்ணல் நபி {ஸல் } அவர்களினாலும் வடிவமைக்கப்பட்டதாகும் .

ஆனால், "இஸ்லாமிய கலாச்சாரம் " அல்லாத மற்ற கலாச்சாரங்களினால் ஆபத்துகளும் , விபத்துகளும் , சமூக சீரழிவுகளும், வெட்கங் கெட்ட காரியங்களும் ஒவ்வொருநாளும்  நடைபெறுவதை காணமுடிகிறது .

ஷைத்தானின் அடிச்சுவடுகளே
முன்னேற்றத்தின் பால் அழைத்துச் செல்லாத , அழிவின் பால் ,இழிவின் பால் அழைத்துச் செல்கின்ற , அறிவுக்குப் பொருந்தாத ,நடை முறைக்கு சாத்திய மற்ற எந்த கலாச்சாரமாக இருப்பினும்  அவையாவுமே ஷைத்தானின் அடிச்சுவடுகள் தான்  .

"யார் மாற்றுமத கலாச்சாரத்தை {ஏற்று நடப்பதின் மூலம் } அதற்க்கு ஒப்பாகி விட்டானோ அவன் அந்த  {மாற்று} மதத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டான்' என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மூடநம்பிக்கை கிடையாது.

இஸ்லாத்தில் சாத்திரங்கள் இல்லை.சம்பிரதாயங்கள் இல்லை. மூடநம்பிக்கை இல்லை. யாருக்கும் ,எப்பொழுதும் நம்மால் முடிந்த எந்த ஒரு நல்ல உதவியும் செய்வதற்கு  நேரங்களோ, கிழமைகளோ ,  நாட்களோ கிடையாது .

"தன் சகோதரனுக்கு {பிறருக்கு} உதவி செய்யும் காலமெல்லாம் {உதவி செய்பவனுக்கு  ] அல்லாஹ் உதவி செய்து கொண்டே இருக்கிறான்.
அறிவிப்பாளர் . ஹஜ்ரத் அபூஹுரைரா {ரலி} அவர்கள் .
ஆதாரம் /புஹாரீ }

முஸ்லிம்களில் சிலர் , "தாங்கள் சத்திய மார்க்கத்தில் இருக்கிறோம் " என்பதை உணராமல் அல்லது இஸ்லாமிய  சட்டதிட்டங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமல்  "சடங்கு,சம்பிரதாயம் ,சாத்திரம் , மூடநம்பிக்கை " போன்றவற்றில் மூழ்கிக் கிடப்பதை  காண முடிகிறது . அதிலிருந்து அவர்கள் விலகி கொள்ள வேண்டும் . இல்லையேல்  இஸ்லாம் அவர்களை கழன்று சென்று விடும் .

மறுமையை மறுப்போர் .

மறுமைநாளை, அதன் சோதனைகளை மறுப்போர் யார் ? என்பதை அல்குர் ஆன் பல இடங்களில்  கூறியுள்ளது . அவர்களின் அடையாளங்களில் சிலவற்றை அல்லாஹ்  கூறியுள்ளான் .

"தீர்ப்பு {மறுமை } நாளை பொய்யெனக் கருதியவனை பார்த்தீரா ? அவனே அனாதைகளை  விரட்டுகிறான் . ஏழைகளுக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோர்க்கு கேடுதான் . அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகத்  தொழுகின்றனர் . அற்பமானதையும் {கொடுக்க}  மறுகின்றனர் ."
அல்குர் ஆன் /107/1-7}

அற்பமானவை ?
107 வது அத்தியாயத்தில் ஏழாவது வசனத்தில் "அற்பமானதையும் கொடுக்க மறுகின்றனர்  " என்று அல்லாஹ்  குறிப்பிடுகின்றான் . ஏன்  மறுகின்றனர் ? மறுபதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா  ? என்றால் அப்படி ஓர் ஆதாரமும் இஸ்லாத்தில் சத்தியமாக கிடையாது. பிறகு ஏன்  மறுக்க வேண்டும் ? மாற்றுமத சகோதரர்களில்  சிலர் " கொடுக்க கூடாது " என்று மறுகின்றனர் . சாத்திரம் பார்கின்றனர் . எனவே , நாங்களும் கொடுக்க மாட்டோம் என்று ஒரு சில முஸ்லிம்கள்  சாத்திரம் பார்ப்பதை காண முடிகிறது.

அற்பமானவை ' என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன .

*அல்லாஹ்வை வணங்குவதில் குறை வைப்பர் .
*மனித சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் குறை வைப்பர் .
*சாதாரண தேவைகளுக்கான பொருட்களை கூட கொடுக்க மாட்டார்கள்.

உதாரணமாக *
"மக்ரிப் " நேரம் {இரவின் ஆரம்ப நேரம் } வந்துவிட்டால் , இருட்ட ஆரம்பித்துவிட்டால் , "கத்தி , வாளி , தராசு , தண்ணீர் உப்பு , நெருப்பு , தீப்பெட்டி , ஊசி  மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பிறருக்கு கொடுக்க மாட்டார்கள் . கேட்டால் " அது தரித்திரம்  " என்று சொல்வார்கள். ஆனால் இது சமந்தமாக நம்முடைய ஆன்மிக தலைவர் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் என்ன கூறுகிறார்கள் ? என்பதை காணுவோம்  .

ஹஜ்ரத் ஆயிஷா {ரலி} அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் கேட்டார்கள் .
அல்லாஹ்வின் தூதரே ! பிறர் கேட்டு எதனை நாங்கள் மறுக்காமல் கொடுக்க வேண்டும் " ?
தண்ணீர், உப்பு , நெருப்பு ".

"அல்லாஹ்வின் தூதரே ! தண்ணீர் {சரி தான் } அது தாகத்தை தணிக்கும் . நெருப்பு, உப்பு  ஏன் ?

''ஹூமைராவே ! {ஆயிஷா {ரலி} யின் பட்டபெயர் } ஒருவன் நெருப்பு கொடுப்பானேயானால்  அந்த நெருப்பின் வாயிலாக எவ்வளவு உணவு தயாரிக்கப்படுமோ  அவை அனைத்தையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்த நன்மையை பெறுவான் . ஒருவன் உப்பை கொடுப்பானேயானால்  அந்த உப்பின் வாயிலாக எவ்வளவு உணவு ருசியாக்கப்படுகிறதோ  அவை அனைத்தையும் தர்மம் செய்த நன்மையை அவன் பெறுவான் .தண்ணீர்  தாராளமாகக் கிடைக்கும் பருவத்தில்  ஒருவரின் தாகத்தை தீர்க்க தண்ணீர் கொடுத்தால் அறுபது அடிமைகளை உரிமை விட்ட  நன்மையும் , தண்ணீர் பஞ்சமான காலத்தில் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்தால் ஒரு மனித உயிரை காப்பாற்றிய நன்மையும் வழங்கப்படுவான் .

விதவைகளை கண்டால் *
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும் மூடநம்பிக்கைகளின் பட்டியல் ................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!