அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, பிப்ரவரி 15, 2014

அறிஞ்சர்களின் கண்ணோட்டத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்!அல்லாஹ்வின் திருபெயரால் ...

"மனிதன் என்பது உடல் மட்டும் அல்ல , உடலுடன் கூடிய ஆத்மாவும்  இணைந்தால்தான்  மனிதன் . ஆத்மா வளர்ச்சிபெற வேதங்கள், நபிமார்கள் சொன்ன வழிமுறைகளும் , கட்டளைகளும் தாம் உரம் சேர்ப்பவை . அவற்றைப் பின்பற்றி நடக்கவேண்டியது மனிதனின் கடமை.

நம்முடைய வாழ்க்கைக்கு அடிப்படை ஆத்மா (ரூஹ் ) தான் , உடல் என்பது இரண்டாம் பட்சமே ! இப்பொழுது மேலைநாடுகளில் மார்க்க ஆராய்ச்சிகளில் பலர் ஈடுபட்டு இஸ்லாம்  மார்க்கம்தான் சிறந்தது , என முடிவு கண்டு, இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் .

நமக்கு ஆராய்ச்சித் தேவையில்லை . நமக்கு அல்லாஹ் நிஃ மதத்தை தந்துள்ளான் அல்லாஹ் சொன்ன சட்டதிட்டங்களை ஏற்று நடக்க வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய வழியில் நாமும் தியாகம் புருடர்களாக வாழவேண்டும் .

மனிதன் எப்படி வாழவேண்டுமோ அதனைமுரையாக வாழ்வதுதான் இஸ்லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு இஸ்லாத்தைத் தந்தார்கள் .அதில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஐங்காலக் கடமைகளை மட்டும் நிறைவேற்றி விட்டால் மட்டும்போதாது . அதற்கேற்ப தூய்மையாளர்களாகவும் நாம் வாழ வேண்டும்.அகவாழ்வும் நீதியுடனும் நியாயத்துடனும் அமைந்தால்தான் வாழ்க்கை சிறப்பைப் பெற்றதாக அமையமுடியும் .

"குடும்பவாழ்க்கை  சமுதாய வாழ்க்கை , அரசியல் வாழ்க்கை என இந்த மூன்று தன்மைகளிலும் நீதியோடும் நேர்மையோடு சாந்தி சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் வலியுறித்தி கூறுகிறது . அதனை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செயலில் காட்டினார்கள் .

"நிம்மதியான வாழ்க்கையைப் பெற ஒரே வழி, அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய வழி ஒன்றுதான் . அந்த வழியில் உலகம் நடக்கத் துவங்கி விட்டால் அதன்பின் அட்டூழியங்கள் இருக்காது . அன்புதான் (மேலோங்கி ) நிற்கும்  மோசடிகள் நடக்காது ; நேர்மைதான் நிலவும்.

அல்லாஹ் எந்த நிலையிலும் , எந்த இடத்திலும் நம்மைப் பார்த்துக்  கொண்டிருக்கிறான்  என்ற அச்சம் மிகைத்து விட்டால் வியாபாரத்தில் கலப்படங்கள் இருக்காது, ஏமாற்றுதனங்கள் இருக்காது ; லஞ்சம் இருக்காது; கொலை , கொள்ளை , விபச்சாரம் போன்ற சமுதாயச் சீர்கேடுகள் எதுவுமே இருக்காது.

"எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு நாடுகள் கூட இன்று சிக்கல்களிலும் குழப்பங்களிலும் சிக்கிப்போயிருக்கின்றன வென்றால்  அங்கே இறையச்சம் பலவீனமாகிவிட்டது தான் காரணம் , எனவே உள்ளார்ந்த உள்ளச்சத்தோடும் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறைகளோடும் வாழ் முற்பட்டால் , நிச்சயமாக அந்த வாழ்க்கை , சாந்தியும் சமாதானமும் கொண்டதாகவே  அமையும் என்பதில் ஐயமில்லை .

எனவே நாம் உலக இச்சைகளைத் தேடாமல் இறை நம்பிக்கையின் மூலம் நிம்மதியைத் தேட வேண்டும் ".

அல்லாஹ் நம் அனைவருக்கும் இஸ்லாமிய வழிமுறைப்படி வாழச் செய்வானாக !
அல்லாஹ் மிக அறிந்தவன் .
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
சத்திய பாதை இஸ்லாம் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!