அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

முடிவு நாளின் முக்கிய அடையாளங்கள்
அல்லாஹ்வின் திருபெயரால் ...

"கல்வி அகற்றப்படுவதும் , அறியாமை நிலைத்து விடுவதும் , மது அதிகமாக அருந்தப்படுவதும் , விபச்சாரம் பகிரங்கமாக  நடைபெறுவதும் (யுக ) முடிவு  நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும் " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்)

உலக முடிவு நாள் எப்போது வரும் என்பது யாராலும் அறியப்படாத ஒன்று. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் மறுமையைப் பற்றி கேட்டபோது 'அதன் ஞானம் அல்லாஹ்விடம் மட்டும் தான் உள்ளது' என மொழிந்தார்கள் . கண்மணி நபி (ஸல்) அவர்கள் யுக முடிவின் அடையாளங்களாக பல கூறியிருப்பினும்  இந்த ஹதீஸில் உலக நடப்பிலுள்ள  நான்கு அடையாளங்களை கோடிட்டு காட்டுகிறார்கள். முதலாவது கல்வி அகற்றட்டப்படுவது . இக்காலத்தில் கல்வியறிவு முன்னேற்றத்தை  நோக்கி சென்று கொண்டிருக்கிறதே , கோடிக்கணக்கான தொகை  நாட்டின் வரவு செலவு திட்டத்தில்  அறிவியல் கல்விக்காகவும் , பொதுக்கல்விக்காகவும் ஒதுக்கப்படுகிறதே, பிறகு எப்படி கல்வி அற்றுப் போகும் என்ற எண்ணம் தோன்றலாம் . மெஞ்சானம் ஒழுக்கம் சார்ந்த மார்க்கக் கல்வி அகற்றப்படுவதை நாம் அறிய முடிகிறது . விஞ்ஞான வளர்ச்சியாலும் , அணுகுண்டுகளின் அதிகரிப்பாலும் நித்தம் நித்தம் இஞ்ஞாலம் படும்பாட்டை படித்து பார்த்து வருகிறோம்.. இரண்டாவது அறியாமை நிலைத்துவிடுவது ! மார்க்கக் கல்வியின் மதிப்பு குறையும்போது மனிதன் அறியாமை என்ற அஞ்ஞான இருளில் மூழ்கிவிடுகிறான் . ஒழுக்கத்தின் சிதைவு பலவிதமான  அநியாயங்களுக்கும் , அட்டூழியங்களுக்கும்  காரணமாகி விடுகிறது.
மூன்றாவது மது அருந்துவோரின் எண்ணிக்கை ஏகபோகமாக அதிகரித்து வருவதை எல்லா ஏடுகளும் சாடுகின்றன . எனினும் மதுப் பழக்கம் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திலிருக்கும் மக்கள் வரை புழக்கத்தில் இருப்பதாலும் , அரசுக்கு அதிகமான வருமானம் கிடைப்பதாலும் மது அரக்கனை வேரோடு அழித்தொழிக்க இயலவில்லை  . மதுக்கடைகளும் உரிமம்  வழங்கி ஊக்குவிக்கும் இழிநிலை ஏற்பட்டு விட்டது. குடும்பச் சீரழிவிற்கு  மதுவே முழுமுதற் காரணம் . (அரசுக்கு வருமானம் வருகிறது, குடும்பத்துக்கு மானம் போகிறது .) ஒரு கதை சொல்வார்கள் ; ஷைத்தான் ஒரு மனிதனைப் பார்த்து " நீர் ஒரு கொலை செய் " அந்த மனிதன் கூறுவான் .'இல்லை அது பாவம்! ஷைத்தான் சொல்வான்: ஒரு பெண்ணை கற்பழி ' .அந்த மனிதன் சொல்வான் "இல்லை" அதுவும் பாவம்தான்! ஷைத்தான் சொல்வான் : மது அறுந்து இது தவறு இல்லை " அந்த மனிதன் "மது தானே அது அருந்தலாம் என்று மதுவை அருந்துவான் . பிறகு அவனுக்கு போதை ஏறிப் போய் , ஒரு பெண்ணை கற்பழித்து விடுவான் , அதை மறைக்க அவன் அந்த பெண்ணை கொலையும் செய்து விடுவான் . இதிலிருந்து என்ன புரிகிறது . மது எது வேண்டுமானாலும் செய்யும் .

நான்காவது விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறுவது . விபச்சாரம் ஒரு தொழில் . வசதி இல்லாத பெண்கள் இதில் ஈடுபடுவதில் தவறில்லை . அதற்கும் லைசன்ஸ் தரவேண்டுமென்று  ஒரு சில மகளிர் மன்றங்களே போராடி வருகின்றன. விபச்சாரம் ஒரு நச்சரவம் . பல குடும்பங்களை  உருக்குலைக்கும் சிற்றின்பத்  தொல்லை .(காதல் என்ற பெயரிலே நடக்கவில்லையா இந்த சிற்றின்ப விளையாட்டு . இன்னும் சில நாட்களில் காதலர் தினம் என்ற பெயரில் ஒரு கற்பு பறி போகும் தினம்.)

இவை நான்கும் அம்பலமாக அரங்கேறும்போது அல்லாஹ்வின் கோபப் பார்வையால்  அழிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது பொருள். இத்தகைய அவலங்கலிருந்து விடுபட்டு வாழ அல்லாஹ் நமக்கு பேரருள் புரிவானாக !ஆமீன்.........

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!