அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, மார்ச் 01, 2014

இறை தூதர் சிறப்பித்த ஜனாஸாக்கள் 

அல்லாஹ்வின் திருபெயரால் ........
அன்பு சகோதர /சகோதரிகளே! சஹாபாக்களின் சிறப்புகள் , அவர்கள் வாழ்ந்த வாழ்வு , அவர்கள் அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மீது வைத்திருந்த அளவுகடந்த அன்பு ம் நேசம் ,பாசம் . அவர்களைப் போன்று நாமும் மாற வேண்டும் என்ற ஆசையுடன் இந்த கட்டுரையை எழுதுகிறேன் ........

சஹாபாக்கள் உலகத்தை கையில் வைத்திருந்தார்கள் . தீன் என்னும் இஸ்லாத்தை உள்ளத்தில் வைத்திருந்தார்கள். தீனுக்கு ஆபத்து வந்தால் , கையில்உள்ள உலகத்தை தூக்கி எரிந்து விடுவார்கள் . ஆனால் உங்கள் வாழ்க்கையும் , என் வாழ்க்கையும் எப்படிஇருக்கிறது ? மாற்றமாகத்தான் இருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள் , நானும் அறிவேன்! இந்த வாழ்க்கை மறுமையின் குறிகோளாக வைத்து நாம் சஹாபாக்கள் போல நாம் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்று ஒரு நல்ல எண்ணத்துடன் எழுதுகிறேன் . உங்களின் ஆதரவு என்றும் தேவை ! நீங்கள் பிறருக்கு பகிரவும் என்பதை பணிவுடன் உங்களைக் கேட்டு கொள்கிறேன்  . அல்லாஹ் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்திற்கும் அருள் பாலிப்பானாக  ! ஆமீன் .......................

சஹாபா பெருமக்கள் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் அன்பையும் நேசத்தையும் பெற்று  சிறந்து விளங்கினார்கள் . சஹாபா பெருமக்களின் உயிரை துச்சமாக மதித்து ஜிஹாதில் கலந்துக் கொண்டு ஷஹீதானவர்களும், இவ்வுலக வாழ்க்கையை உதறி விட்டு  , மறு உலகிற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தவர்களும்  , கொடுமைகளையும் வறுமைகளையும் இன்முகத்துடன் சகித்து, கடைசி  வரையில் ஈமானை இழக்காமல் , வாழ்ந்த புனிதர்களும் நாயகம் [ஸல்] அவர்களின்  உள்ளத்தில் நீங்கா இடம் பெற்று இருந்தனர் .

இப்படிப்பட்ட உத்தமர்களின் ஜனாஸாத் தொழுகைகளில் அண்ணல் நாயகம் [ஸல்]  அவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்ததோடல்லாமல்  பிரத்தியேகமான முறையில் நல்லடக்கம் செய்தார்கள். அவைகளில் சிலவற்றை அறிந்துக் கொள்வோம்  .

ஹஜ்ரத் அப்துல்லாஹ் துல்பஜாதீன் [ரலி] அவர்களின் ஆரம்பகால பெயர் ''அப்துல் உஸ்ஸா '' என்பதாகும் . மதீனா விலிருந்து இரண்டு மன்ஸில்  தொலைவில் வசித்து வந்தார்  . இளமைப்பருவத்திலேயே தந்தையை இழந்து விட்டதால் சிறிய தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். ஹஜ்ரத் அப்துல்லாஹ் [ரலி] அவர்களின் பொருள்களும் , சொத்துக்கள் முழுதும், சிறிய தந்தையின் கட்டுபாட்டில் தான் இருந்தன. கட்டிளம் காளையான ஹஜ்ரத் அப்துல்லாஹ்[ரலி] அவர்களின் செவிகளில் , இஸ்லாத்தின் இனிய நாதம் ஒலித்தது. நாயகம்[ஸல்] அவர்களை தரிசிக்க அவர் உள்ளம் துடியாய் துடித்தது  . கொடுங்கோலான சிறிய தந்தையின் அச்சத்தால் , மௌனமாகி விட்டார்கள் .அண்ணலைக் காணும் ஆவலை அடக்க முடியாமல் , துணிந்து ஒரு நாள் தன்சிறிய தந்தையிடம் ''நாயகம் [ஸல்] அவர்களை சந்தித்து விட்டு வருகிறேன்'' என்று அனுமதி கேட்டார் . கடுங்கோபமடைந்த அவர் அப்துல்லாஹ் [ரலி] அவர்களை நைய்யப்புடைத்து விட்டார். 

அத்துடன் நில்லாமல் ஹஜ்ரத் அப்துல்லாஹ் [ரலி] அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் பிடுங்கி கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்தி  விட்டார் . அந்த நிர்வாண கோலத்துடன் ஹஜ்ரத் அப்துல்லாஹ்[ரலி] அவர்கள் நேராக தன்னுடைய தாயாரிடம்  சென்றார் . மகனின் கோலத்தைக் கண்டு பதறிப்போன தாயார் இரு கம்பளியை மகனிடம் கொடுத்தார்  . அதை இரண்டு துண்டுகளாக்கி ஒன்றை இடுப்பில்  கட்டிக் கொண்டு மற்றதை உடலில் போர்த்திக் கொண்டார் . இதே நிலையில் மதீனா மாநகரம் வந்தடைந்தார். இஸ்லாத்தில் இணைந்து ஷஹீதாக வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார் . அன்றிலிருந்து அவருடைய பெயர்  அப்துல்லாஹ் துல் பஜாஜீன் [இரண்டு துண்டு கம்பளி உடையவர் ] என்று வழங்கலாயிற்று .

ஹஜ்ரத் அப்துல்லாஹ்[ரலி] அவர்கள் திண்ணை தோழர்கள் குழுவில் சேர்ந்து கொண்டார்கள். மார்க்கக் கல்வி கற்பதில் இரவு பகல் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்  . இளம் வயதினராக இருந்ததால் குர் ஆனை  சத்தமிட்டு ஓதிக் கொண்டிருப்பார்கள். இதை செவியுற்ற ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள் நாயகம்  [ஸல்]அவர்களிடம் , அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ் உடைய சத்தத்தினால், தொழுபவர்களின் தொழுகையில் குழப்பம் ஏற்படுகிறது என்று முறையிட்டார்கள். இதைக் கேட்ட 'ரஹ்மதே ஆலம் 'நபி[ஸல்] அவர்கள் ''அவரை தடுக்காதீர்கள்  ,, அவர் தனக்கென்று இருந்த அனைத்தையும் இறை வழியில்  தியாகம் செய்து விட்டு வந்துள்ளார் '' என்று சமாதானம் கூறி முற்றுப் புள்ளி வைத்து விட்டார்கள். இந்த சமயத்தில் தான் தபூக் யுத்தத்திற்கு படை ஒன்று புறப்பட்டுச் சென்றது. அப்போது நாயகம்[ஸல்] அவர்களிடம் என் உயிரை தியாகம் செய்ய  வேண்டும் என்பதே என் இலட்சியம். எனக்கு ஷஹீதாகும் பாக்கியம் கிட்ட வேண்டும் என்று துஆ செய்யுங்கள்'' என்று வேண்டி  நின்றார்கள் . இதனைக் கேட்ட நாயகம் [ஸல்] அவர்கள் ஒருவேளை உமக்கு போருக்கு செல்லும் வழியிலேயே மரணம் நேர்ந்து விட்டாலும்  நீர் ஷஹீதுகளின் புனித பட்டியலில் சேர்ந்து விடுவீர்'' என்று பதிலளித்தார்கள் . இதன் பிறகு இஸ்லாமியப் படை புறப்பட்டுச் சென்றது. இறைவனின் நாட்டம் வழியிலேயே அப்துல்லாஹ் [ரலி]அவர்களுக்கு கடுமையான ஜூரம் கண்டு விட்டது. அதன் விளைவாக அவர் இறந்து விட்டார்.

அவருடைய உயிர் பிரியும் நேரத்தில் , நாயகம் [ஸல்] அவர்கள், அப்துல்லாஹ் [ரலி] அவர்களின்  தலைமாட்டில் இருந்தார்கள் . பெருமானாரின், புனித நிலவு முகத்தை தரிசித்தபடியே , அவர்களின் ஆவி உடலிருந்து விடை பெற்றது .''ஹஜ்ரத் அப்துல்லாஹ்  [ரலி] அவர்களின் ஜனாஸா அடக்கம் செய்வதற்கு நாயகம் [ஸல்] அவர்கள் தன்னுடைய புனித போர்வையை அளித்தார்கள் என்று சில ரிவாயத்துக்களில் வந்துள்ளது  . அப்துல்லாஹ் [ரலி] அவர்கள் அல்லாஹ் மற்றும் நபி[ஸல்] அவர்களுடைய பாதையில் அடி எடுத்து வைக்க நிர்வாணமாக வீட்டை விட்டு புறப்படுவதற்கும் தயங்காததே இந்த சிறப்புக்கு காரணமாகும். அப்துல்லாஹ்[ரலி] அவர்களின் ஜனாஸா அடக்கம் வினோதமான முறையில் சிறப்பாக அமைந்தது.!

புகழ்மிக்க நபித்தோழர்கள் கபர் குழியை தோண்டினார். புதைகுழி தயாரானதும் , நாயகம்[ஸல்] அவர்களே குழியில் இறங்கினார்கள் . சிறிது நேரம் அதில் படுத்துக் கொண்டார்கள்! பிறகு எழுந்து ''நம் சகோதரரை கொண்டு வாருங்கள் '' என்று கூறினார்கள். உடனே ஹஜ்ரத் அபூபக்கர் [ரலி] அவர்களும் , ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்களும்  அந்த புனித உடலை தாங்கியபடியே எடுத்து கப்ரில் இறக்கினார்கள். அப்போது நாயகம்[சல்] ''அப்துல்லாஹ் மற்றவர்களைப் போன்றவர் அல்ல . அவரை நிதானத்துடன், தக்க மரியாதையுடன் மெதுவாக இறக்கவும்'' என்று தெரிவித்தனர். இப்படிப்பட்ட உயர்வான சிறப்பு  ஒரு சிலருக்கு மட்டும்தான் கிடைக்கப் பெற்றது !

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும் ......................................
அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!