திங்கள், மார்ச் 10, 2014

மறைமுக தர்மமே மேலானது [தொடர்ச்சி ]

அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

அல்லாஹ் கூறுகிறான்..

[இறைவழியில் ] தம் செல்வங்களை இரவிலும், பகலிலும் , இரகசியமாகவும் , வெளிப்படையாகவும் செலவு  செய்வோருக்கு அவர்களின் இறைவனிடம் உரிய பிரதிபலன் உண்டு . அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை . அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள் .  [அல்குர்ஆன் ]


சில முஸ்லிம் பெண்கள் இரவில் எதுவும் கொடுக்கக் கூடாது என்று.பணம் மற்ற ஏதாவது பொருள்கள் கொடுப்பது  விரும்ப மாட்டார்கள் . அல்லாஹ்வின் இந்த வசனம் போதுமான சான்றாக இருக்கிறது. இன்னும் சிலர் அறியாமையில் இருந்துகொண்டுதான் வருகிறார்கள்.

அல்லாஹ்வின் திருப்தியைப் பெருவதற்காகவேயன்றி [வேறு எதற்காகவும்] நீங்கள் செலவு  செய்யாதீர்கள்''  [அல்குர்ஆன் ]

ஹசன் அல்பஸ் ரீ [ரஹ் ] அவர்கள் கூறினார்கள் .. இறைநம்பிக்கையாளர் செய்யும் செலவு அவருக்குரியதே . ஓர் இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே தவிர எந்தச் செலவும்  செய்யமாட்டார் .

அதாவது அல்குராசானீ [ரஹ் ] அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.. அல்லாஹ்வின் முகத்திற்காக நீங்கள் தர்மம் செய்து விட்டால்  . பின்னர் அப்பொருள் எவ்வாறு செலவழிக்கப்படு கிறது என்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை . அதைப் பெற்றவர் எவ்வாறு செலவு செய்கிறார் என்பது  குறித்து நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள் . இதுவே சிறந்த கருத்தாகும்.

ஆக, தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தர்மம் செய்தால் போதும். அல்லாஹ்விடம் அதற்குரிய பிரதிபலன் அவருக்கு நிச்சயமாக கிடைக்கும்  . அவர் அந்தப் பொருளை யாருக்குத் தர்மம் செய்தார் என்று கேள்வி அவருக்கு கிடையாது.    
நல்ல மனிதருக்குக் கொடுத்தாரா, கெட்ட  மனிதருக்குக் கொடுத்தாரா, தர்மம் பெறத் தகுதியானவருக்குக் கொடுத்தாரா, தகுதியில்லாதவருக்குக் கொடுத்தாரா என்பது குறித்து அவர் விசாரிக்கப்படமாட்டார். அவரது எண்ணத்தின் அடிப்படையில் அவருக்கு உரிய பிரதிபலன் வழங்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. [முற்காலத்தில்] ஒருவர் , ''இன்றிரவு நான் தர்மம் செய்யப்போகிறேன்  '' என்று சொல்லிக் கொண்டு  தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். [ யார் என்று தெரியாமல்] அதை ஒரு விபச்சாரியின் கையில் வைத்துவிட்டார். [மறுநாள்] காலையில் ''விபச்சாரிக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது '' என்று மக்கள் பேசிக்கொண்டனர். [இதை கேட்ட ] அவர் , இறைவா! விபச்சாரிகுத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும்'' என்று கூறிவிட்டு , இன்றிரவு நான் தர்மம் செய்வேன்'' என்றார் .

மறுநாள் இரவு] ஒரு செல்வரின் கையில் தர்மத்தைக் கொடுத்துவிட்டார் . காலையில் மக்கள்  ,''செல்வருக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது'' என்று பேசிக்கொண்டனர். [இதைக் கேட்ட] அவர், இறைவா! செல்வருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும்'' என்று கூறிவிட்டு , இன்றிரவும் நான் தர்மம்  செய்வேன் '' என்று சொன்னார் . பின்னர் [இரவில்] வெளியே சென்று ஒரு திருடனின் கையில் தர்மத்தை வைத்துவிட்டார். காலையில் மக்கள், ''திருடனுக்கு தர்மம் வழங்கப்பட்டுள்ளது'' என்று பேசிக்கொண்டனர். அவர், இறைவா! விபச்சாரிக்கும், செல்வருக்கும், திருடனுக்கும் தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப்  புகழும்''. என்று கூறினார்.

அப்போது ஒரு[வான]வர்  அனுப்பப்பட்டு அவரிடம் [பின்வருமாறு] கூறப்பட்டது. .. உமது தர்மம்  [இறைவனால்] ஏற்க்கப்பட்டுவிட்டது . நீர்  விபச்சாரியிடம் கொடுத்த தர்மத்தால் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக்கூடும். செல்வர் ]நீர் செய்த தர்மத்தைப் பார்த்துப்] படிப்பினை பெற்று, தமக்கு அல்லாஹ்  வழங்கிய செல்வத்திலிருந்து அவர் தர்மம்  செய்யக்கூடும் . நீர் திருடனிடம் கொடுத்த தர்மத்தால் அவன் திருடுவதைக் கைவிட்டுத் திருந்தக்கூடும்.

அல்லாஹ் மிக அறிந்தவன் .................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!