அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், மார்ச் 13, 2014

தகுந்த காரணமின்றி மூன்று நாளுக்கு மேல் பேசாதிருப்பது.

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் ,புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!!

அல்லாஹ் காலத்தை சுருக்கிவிட்டான் . சில மனிதர்களின்  ஆயுளையும் சுருக்கிவிட்டான் . மரணத்துக்கு வயது வித்தியாசம்  இல்லை . புது புது நோயிகள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் மனிதர்களாகிய நாம் இன்னும் சண்டையிட்டுக் கொண்டு , ஏசி,பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் . கருத்து வேறுப்பாட்டினால்  முஸ்லிம் சமுதாயம் பிரிந்து கிடக்கிறது . ஒன்று சேருமா ? அல்லாஹ் மிக அறிந்தவன்.


முஸ்லிம் சகோதரர்களிடையே பகைமையை ஏற்படுத்துவது ஷைத்தானின் செயலாகும் . சிலர் ஷைத்தானுக்கு அடிபணிந்து மார்க்கம் அனுமதிக்காத காரணங்களுக்காக வெல்லாம் தங்களது சகோதரர்களை துண்டித்து வாழ்கிறார்கள் . சிலர் பேச மாட்டேன் என சத்தியம் செய்து கொண்டு எதிரில் வருபவர்களிடமிருந்து  முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள் . சபைகளில் முன், பின்  அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஸலாம் கூறிவிட்டு. தான் துண்டித்து வாழும் சகோதரனைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்து கொள்கிறார்கள். இது சமுதாயத்தை பாதித்து வரும் கடுமையான நோயாகும். எனவே இதை மார்க்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

நபி[ஸல்] அவர்கள் அருளியதாக அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ஒரு முஃமின் தன்  சகோதரரை மூன்று நாள்களுக்கு மேல் வெறுத்திடலாகாது . மூன்று நாளைக்கு மேல் தன்  சகோதரரை வெறுத்த நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்.
ஆதாரம்..ஸூன ன் அபூதாவூத்]

நபி [ஸல்]அவர்கள் அபூ கிராஷ் அல் அஸ்லமி [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..ஒருவர் தன்  சகோதரரை ஒரு வருடம் வெருப்பாறேயானால் அவர் தன்  சகோதரரின் இரத்தத்தை ஓட்டியவராவார் .
ஆதாரம்..அல் அதபுல் முஃப்ரத் ]

உறவை துண்டித்து வாழ்பவன் அல்லாஹ்வின் அருளிலிருந்து அகற்றப்படுவான்.

நபி [ஸல்] அவர்கள் அருளியதாக அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .. மனிதர்களின் செயல்கள் ஒவ்வொரு வாரத்திலும் திங்கள் மற்றும் வியாழனன்று இரண்டு  முறை எடுத்துக் காட்டப்படும் . முஃமினான ஒவ்வொரு அடியானின் பாவமும் மன்னிக்கப்படும் . ஆனால் தனது சகோதரரிடம் பகைமை பாராட்டும் அடியானைத் தவிர  . ''இந்த இருவரும் திரும்பும்வரை விட்டுவிடுங்கள் அல்லது தாமதப் படுத்துங்கள் என சொல்லப்படும்.
ஆதாரம் ..ஸஹீஹ் முஸ்லிம்]

அந்த நேரத்தில் ஒருவர் தௌபா செய்ய விரும்பினால் அவர் மற்றவரைச் சந்தித்து ஸலாம்  கூறிவிடவேண்டும். அப்போது அம்மனிதர் ஸலாமுக்கு  பதில் கூரவில்லையென்றால்  தௌபா செய்தவர் தன் குற்றத்திலிருந்து நீங்கி விடுகிறார். பதில் கூற மறுத்தவர் மட்டுமே பாவியாவார்.

நபி [ஸல்] அவர்கள் அருளியதாக அபூ அய்யூப் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..ஒரு மனிதர்  தன்  சகோதரரை மூன்று நாட்களுக்கு மேலாக வெறுத்திருப்பது கூடாது. இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். இவர் அவரையும் அவர் இவரையும்  புறக்கணிக்கிறார்கள். அந்த இருவரில் சிறந்தவர் முந்தி ஸலாம் சொல்பவரே  .
ஆதாரம்..சஹூல் புகாரி]

தீமையில் நிலைத்திருப்பவர் , தொழாதவர் என்ற மார்க்கக் காரணங்களுக்காக வெறுப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அவரி வெறுப்பதால் அவர் தனது தவறை உணர்ந்திடுவார் என்ற நம்பிக்கையிருந்தால் அவரை வெருத்தொதுக்குவது  வாஜிப்  ஆகும்.

ஆனால் தீமைகளை வெறுத்து ஒதுங்கும்போது அவனிடம் தவறுகளும் தீமைகளும்அதிகரித்துவிடும் என்று நம்பினால் அவனை வெறுத்தொதுக்கி விடாமல் அரவணைத்து நேர்வழியின் பால் திருப்பிட வேண்டும். தொடர்ந்து உபதேசித்தும் பயனில்லையென்று புறக்கணித்து விடுவது சமூகத்திற்கு தீங்குதானே ஒழிய  நன்மை எதுவும் கிடையாது.

இன்று எந்த தீமையும் இல்லாத , செய்யாத நிலையில் இருக்கும் நிறைய சகோதரர்களை  சிலர் வெறுத்து ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயம்? தனியாக பிரிந்து சென்று போய் , தனி பள்ளி என்று மற்றவர்களை புறக்கணிப்பது எந்த விதத்தில்  மார்க்கம் அனுமதிக்கிறது? சிலர் சிலருக்கு ஸலாம் கூட சொல்வதில் , முகத்தை திருப்பிக் கொண்டு  செல்வது இது மார்க்கத்தில் கூடுமா ? அன்பு சகோதரரர்களை சிந்திக்க வேண்டும்  ! இந்த பிளவுக்கும் , பிரிவுக்கும் யார் காரணமோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆக வேண்டும்  .
அல்லாஹ் மிக அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!