அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, மார்ச் 02, 2014

சத்தியத்தை முறிக்காதீர்கள் !அல்லாஹ்வின் திருபெயரால் ...

"அல்லாஹ்வைச் சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதனை உறுதிப்படுத்திய பின்னர் அந்த சத்தியத்தை நீங்கள் முறித்து விடாதீர்கள்."
அல்குர் ஆன் :

முஸ்லிம்களாகிய நாம் கலிமா ஷஹாதத் உரைக்கும் போது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என சாட்சி கூறுகிறோம் .
குடும்பத் தகராறுகள் தீர்க்க , கொடுக்கல் வாங்கல், நிலம் , வீடு வாங்க , பேச்சு வார்த்தைகளை உறுதிப்படுத்த பொருட்களை பிறரிடம் ஒப்படைக்கும்  போது , கற்புக்கு களங்கம் விளைவிக்கும்போது என்று பல்வேறு விஷயங்களில் சாட்சியங்கள் தேவைப்படுகின்றன . நீதிமன்றத்தில் வழக்குகள் அரங்கேறும் போது போதுமான சாட்சியங்கள் தேவைப்படுகின்றன . மறுமை தீர்ப்பு நாளில் அவரவர் காதுகளும் , கண்களும் , தோள்களும் சாட்சியம் கூறும் என அல்லாஹுதஆலா அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறான் .

வழக்காடும்போது பொய் சாட்சிகளைக் கொண்டு உண்மையைத் தலைகீழாக மாற்றி விடும் ஆற்றல் படைத்தவரும் இருக்கவே செய்கிறார்கள் . இவர்கள் பணம் , பதவிகளுக்கு ஆசைப்பட்டு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் . இவர்கள் இவ்வுலகில்  தப்பி விட்டாலும் மறுமையில் பதில் சொல்லியேயாக வேண்டுமென்பதையும் அதற்குரிய தண்டனை இம்மையில் கிடைக்கா விட்டாலும் மறுமையில் நரக நெருப்பு சித்தமாக்கப்பட்டு விட்டது என்பதைப் பற்றி சிந்திக்காதவர்கள் .

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹுதஆலா திருக்குர் ஆன் நஹ்ல் சூராவின் வசனத்தில் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்தவர்கள் உடன்படிக்கைகளை வாக்குறுதியை எந்த காரணத்திற்காகவும் முறித்து விடுவது ஏற்புடையதல்ல  என அறுதியிட்டு அறிவிக்கிறான் . மனிதர்கள் அனைவரைக் காட்டிலும் அல்லாஹ் ஒருவனே நம்பிக்கைக்குரியவன் . ஒவ்வொரு சிறு செயலையும் நன்கறிபவன் . எனவே அவனை முழுமையாக நம்பி, அவனின் கடுமையான தண்டனைக்கு அஞ்சி , சத்தியங்களை முறித்து விடாமல் எச்சரிக்கையாகவும் , கவனமாகவும் இருக்க அனைவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும் . இத்தகையவர்களே நல்லோர் பட்டியலில் இடம் பெறுவார்கள்!

Allah knows best.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!