அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, மார்ச் 08, 2014

இஸ்லாமும் மனித நேயமும்

அல்லாஹ்வின் திருபெயரால் ....

மனித நேயம் என்றால் மனிதப் பண்பாடு , குணங்கள் மற்றவரைத் தன்னைப் போன்று நினைப்பது . மற்றவரிடம் நீதமாக நடந்து கொள்வது இவைகளுக்கு மனிதநேயம் எனப்படும். மனித இனத்திற்கு நேர்வழி காட்ட வந்த நபியவர்கள் மனித நேயத்துடனும், நீதியுடனும் தாம் வாழ்ந்தது மட்டுமல்லாமல் பிறரையும் அவ்வாறே வாழச் சொன்னார்கள். அனால், இன்று மனிதர்கள் தாமும் தம் குடும்பத்தினரும் நன்றாக இருந்தால் போதும்  பிறர் எக்கேடு கெட்டால் எனக்கென்னவென்று வாழ்கிறார்கள் இதுதான் மனிதநேயமா?


மனித நேயத்தைப் பற்றி நபியவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் .''யார் மனிதர்களுக்கு  இரக்கம்  காட்டவில்லையோ  இறைவன் அவர்கள் மீது இரக்கம்  காட்ட மாட்டான் '' என்றும் , பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம்  காட்டுங்கள். வானத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு இரக்கம்  காட்டுவார்கள்'' என்றும் கூறியுள்ளார்கள்.

நாம் பேருந்தில் பிரயாணம் செய்கின்றோம். உட்கார இடமில்லாமல் நிற்கும் முதியோருகளுக்கு, கை குழந்தை வைத்திருக்கும் தாய்மார்களுக்கும் உட்கார இடமளித்து நமது  சுகத்தை  தியாகம் செய்வதும் , ஏழைகளுக்கு உதவிபுரிவதும், அவர்களின் கஷ்ட்ட நஷட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதும் மனித நேயத்தை தவிர வேறென்ன சொல்ல முடியும். இதற்கு மாறாக பிறர் மனம் புண்படும்படி பேசுவதும், பிறர் பொருளை அபகரிப்பதும், செய்யாத குற்றத்திற்காக பழிசுமத்து வதும்  , அநியாயமான முறையில் பிறரை கொலை செய்வதும் மனிதநேயத்தை தகர்த்தெறியும் செயலல்லவா ? சிந்திப்பீர்களாக! இன்று உலகில் மனிதனுடைய உயிரின் மதிப்பு மிருகத்தை விட கேடு கெட்ட  தாகிவிட்டது . ஆனால் திருமறையில் இறைவன்  மனித உயிரின் மதிப்பை கூறும்போது ''ஒரு உயிரை அநியாயமாக அழிப்பவன்  ஒரு சமுதாயத்தையே அழிப்பவனாவான் . ஒரு உயிரை வாழவைப்பவன் ஒரு சமுதாயத்தையே  வாழ வைப்பவனாவான் ''
[அல்குர் ஆன் /5..32]

இது மனித நேயத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது .
அண்ணல் நபியவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொண்ட சில நிகழ்ச்சிகளையும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம். நபியவர்கள் தம் தோழர்களுடன் மஸ்ஜிதுன்னபவியில்  அமர்ந்திருக்கும் வேளையில் ஒரு காட்டரபி அங்கு சிறுநீர் கழிக்கிறார் . அதைக்கண்ட சஹாபாக்கள் அவரை அடிக்க முற்படும்போது  நபியவர்கள் அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை அமைதியாக இருக்கும்படி கூறி, பிறகு அவருக்கு இனிமேல் இப்படி செய்யாதே என்று உபதேசம் கூறினார்கள். சஹாபாக்களிடம் சொல்லி அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றச் சொன்னார்கள் . இது மனிதநேயத்தைக் காட்டுகிறது  . அல்லாஹ் தன்  நபியை திருமறையில் குறிப்பிடும்போது  ''ரஹ்மத்துல் ஆலமீன் ' '

மனித நேயத்தை இஸ்லாம் தான் கற்றுக் கொடுக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும்  இல்லை . அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் காட்டி தந்த வழிமுறைகளை விட்டு விட்டு  இன்று நாம் இஸ்லாத்தில் இல்லாத புது புது நூதனங்களை  நாம் பின்பற்றி செல்கிறோம் என்பது ஒரு மிக பெரிய வேதனை என்றுதான் சொல்ல வேண்டும்  .

நபி[ஸல்] அவர்கள் ''யார் உன்னைத் துண்டித்து வாழ்கிறானோ அவனிடத்தில் சேர்ந்து வாழ்,, யார் அநீதம் இழைக்கிறானோ அவனை மன்னித்து விடு ,, யார் உனக்கு தீங்கு  செய்கிறானோ அவனுக்கு நீ உபகாரம் செய் '' என கூறிய மனித நேயத்தை பலப்படுத்தினார்கள். நமக்கு எதிரிகள் இருப்பார்கள். அவர்களின் மீது போட்டியும் பொறாமையும்  ஏற்படும்,, அவர்களை அழிக்க வேண்டுமென்று மனம் தூண்டும்  . இது மனித நேயமாக கருதப்பட மாட்டாது. பகைவனுக்கு உதவும் பண்பு தான் இஸ்லாம்  காட்டும் மனிதநேயமாகும் . ஒருவர் நம்மை ஏசினால் , பதிலுக்கு நாம் அவரை  ஏசுவது .இதை இஸ்லாம் காட்டித் தரவில்லை என்பதை முஸ்லிமாகிய நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

''உங்களில் ஒருவர் தொழ வைத்தால் சுருக்கமாக தொழ  வைக்கட்டும் . ஏனென்றால் வயோதிகர்களும், ஊனமுற்றோர்களும் , வியாதியஸ்தர்களும் பின்பற்றுகிறார்கள் ''எனக் கூறி தொழுகையிலும் நபியவர்கள் மனித நேயத்தை போதிக்கிறார்கள். எனவே இஸ்லாம் கூறும் மனித நேயத்துடன் நாம் வாழ்வதற்கு எல்லாம் வல்ல  அல்லாஹ் அருள்புரிவானாக!
இறுதியாக ஒன்று /
அல்லாஹ் கூறுகிறான் .. நான் ரஹ்மான் [அளவற்ற அருளாளன்] ஆவேன். நானே 'ரஹிம் ' எனும் இரத்த உறவைப் படைத்து அதற்கு [ரஹ்மான் எனும்] என் பெயரிலிருந்து ஒரு பெயரை [ரஹிம் ' என்பதை]த் தேர்ந்தெடுத்தேன் . ஆகவே யார் இரத்த உறவை  பேணி வாழ்கிறாரோ அவருடன் நானும் உறவாடுவேன். யார் இரத்த உறவை முறிக்கிராரோ  அவருடன் நானும் உறவை முறித்துக் கொள்வேன் .

அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!