சனி, மார்ச் 08, 2014

ஹஜ்செய்யாத ஹாஜி [தொடர்ச்சி]

அல்லாஹ்வின் திருபெயரால்....
எல்லாப் புகழும் ,புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக !

இந்த சம்பவங்கள் நடந்ததா ? அல்லது இல்லையா ? ஆதாரம் உண்டா ? என்று மனத்தை குழப்பிக் கொள்ள அவசியம் இல்லை. இதில் நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கிறது . சில உண்மையான வரலாறுகள் , சம்பவங்கள் நடந்து இருக்கிறது என்பது எதார்த்த உண்மை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஹஜ் செய்யாத ஹாஜி தொடர்கிறது...........

''ஹஜ்ஜூக்கு  செல்ல வேண்டும் என்று மனதில் நிய்யத்தாவது செய்திருந்தீர்களா ? என துன்னான் [ரஹ் ] அவர்கள் கேட்க . ''ஆம்! மனதில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தேன். இறுதில் அது முடியாமல் போய்விட்டது !'' என அஹ்மது அஷ்காக்  அவர்கள் நீண்ட பெருமூச்சொன்றை விடுகின்றனர். ''ஏன் ? முடியாமல் போய்விட்டது ? திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டதா? என துன்னூன் [ரஹ் ] அவர்கள் பரிவோடு விசாரிகின்றனர் . ''இல்லையில்லை . அதுகுறித்து உங்களுக்கு விபரமாகச் சொல்கிறேன்  .'' என்று அஹ்மது அஷ்காக் அவர்கள் சொல்ல ஆரம்பிக்கின்றனர் .

நாற்பது வருட ஏக்கம் 

''நான் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்தும் ஹஜ் செய்ய வேண்டும் என்று சிறுவயது முதலே  எனக்கு ஒரு ஏக்கம் . அதற்காக கடந்த 40 வருடங்களாக செருப்பு தைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து இவ்வருடம் ஹஜ்ஜூக்கு செல்ல முழுமையாக  ஆயத்தமாகி விட்டேன். அப்போது ஒரு நாள் எனது மகனை பக்கத்து வீட்டுக்கு ஒரு வேலையாக  அனுப்பி இருந்தேன் . சிறிது நேரத்தில் எனது மகன் அழுது  கொண்டு வந்தான் . ஏன் ? என்று கேட்டேன் . அதற்க்கு அவன் பக்கத்து வீட்டில் நான் நுழையும்போது உள்ளே எல்லோரும் தட்டு நிறைய இறைச்சி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் உள்ளே நுழைவதைப் பார்த்தவுடன் என்ன? இது? என்று கேட்க்காமல் என்னை வெளியே துரத்தி கதவை சாத்திவிட்டனர் . என் பதில் கூறினான் . அதை கேட்டவுடன் எனக்கு ஆத்திரமாக வந்தது. என்ன மனிதர்கள் வர்கள்?  என் மகன் இறைச்சியாக் கேட்டான்? ஏன் வெளியே தள்ளி கதவை சாத்த வேண்டும் . இதை உடனடியாக கேட்க வேண்டும் என்று எண்ணி கோபத்துடன் பக்கத்து வீட்டுக்குக் போய்  கதவை தட்டினேன். எழும்பும் தோலுமாய் பக்கத்து வீட்டுக்காரர்  கதவை திறந்தார் . அவருடைய சிறியி மகனை பார்த்தேன் . உடலெல்லாம் எலும்பு  துருத்திக் கொண்டு தெரிந்தது . அவர்களை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்  . அவர்களிடம் வறுமை கோரதாண்டவமாடியுள்ளது என்று.

எனது கோபம் சற்று வடிந்து நிலையில் எனது மகனை வெளியே தள்ளி கதவை சாத்திய விஷயம் குறித்துக் கேட்டேன்.  அதற்கு அவர் எனது சகோதரரே! கடந்த பல நாட்களாக எங்கு  தேடியும் எனக்கு வேலையும் கிடைக்கவில்லை . வருமானமும் இல்லை. பசியும் , பட்டினியுமாக நானும் எனது மனைவியும் பல நாட்களை கடத்திவிட்டோம் . நாங்கள் பசியை எப்படியாவது தாங்கிக் கொள்வோம் . எனது மகனால் எப்படி தொடர்ந்து  பசியை தாங்கிக் கொள்ள முடியும்? எனவே வெளியில் சென்று  யாரிடமாவது உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா? என கேட்டேன் . யாரும் தரவில்லை  . அப்போது தெருவில் செத்துக் கிடந்த ஓர் ஆட்டை கண்டேன் . ஆபத்துக்கு பாவமில்லை என்று கருதி அந்த செத்த  ஆட்டை தூக்கிவந்து அதை சமைத்து எனது குழந்தைக்கு கொடுத்து கொண்டிருந்தேன். அப்போதுதான் உங்கள் மகன்  வந்தான். அவன் முன்னால் எப்படி இறந்த ஆட்டின் இறைச்சியை நாங்கள் சாப்பிட முடியும்? அல்லது அந்த இரிச்சியை எப்படி உங்கள் மகனுக்கு நான் கொடுக்க முடியும்? எனவே தான் உங்கள் மகனை வெளியே அனுப்பி கதவி சாத்திவிட்டேன்  என்று கூறினார்.

இதனைக் கேட்ட என் மனம் மிகவும் வேதனையுற்று உள்ளம் எல்லாம் உருகியது. இவரின் நிலையை அறியாது இவரின் மேல் கோபப்பட்டுவிட்டேனே! என வருந்தி நான் என்னை நானே நொந்து கொண்டேன். எனது அண்டை வீட்டில் ஒரு குடும்பம் பசியால்  பட்டினியால் வாடி வதங்கி வருவதை அறியாத குருடனாக இருந்துவிட்டேன் . இப்போது ஹஜ்ஜுக்கு செல்வதற்கு வேறு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். உடனே நான் ஒரு தீர்மானத்துக் வந்தேன். எனது பக்கத்து வீட்டில் இறைவனின் அடியார்கள்  பட்டினியால் துடித்துக் கொண்டிருக்க அவர்களை இந்த நிலையில் பார்த்த பிறகும் ஹஜ்ஜூக்கு நான் செல்லத்தான் வேண்டுமா? ஹஜ்ஜூக்கு சென்று இறைவனின் திருப்தியை பெறுவதை விட பசியால் பட்டினியால்  ஹராமான உணவை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்ட அண்டை வீட்டுக்காரருக்கு உதவி, அதன் மூலம் இறைவனின் திருப்தியை பெறுவதுதான் இப்போது முதன்மையான செயல்   என எண்ணி 40 வருடகாலம் நான் சேமித்து  வைத்திருந்த முழு தொகையை எனது பக்கத்து வீட்டுகாரருக்கு கொடுத்து விட்டேன்  . அதனால் தான் இவ்வருடம் ஹஜ்ஜூக்கு வரமுடியவில்லை'' என அஹ்மது அஷ்காக் சொல்லி முடித்தார். 

நெஞ்சுருக இந்த விஷயத்தை கேட்டு முடித்து ஹஜ்ரத் துன்னூன் [ரஹ் ] அவர்கள் மனம் துடிக்க கண்கள் குளமாக அஹ்மது அஷ்காகை கட்டித் தழுவியவாறு கூறினார்.  ''ஆம் ! சகோதரரே! நீங்கள் அல்லாஹ்வின் அடியாரின் கஷ்ட்டத்தையும் துன்பத்தையும் நீக்கியதின்  காரணமாக ஹஜ் செய்யாமலே அல்லாஹ் உங்கள் ஹஜ்ஜை மக்பூலான ஹஜ்ஜாக முதன்மையான ஹஜ்ஜாக ஏற்றுக் கொண்டான்'' எனக் கூறிவிட்டு அவரிடம்  விடைப் பெற்றுக் கொண்டார் .

அடியார்களின் உரிமை 

அல்லாஹ் நம் மீது கடமையாக்கப்பட்ட இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்த  ஹாஜிகளும் , அனைத்து முஃமினான அடியார்களும் ''அடியார்களின் உரிமை'' விஷயத்தில் முழுகவனம் செலுத்த வேண்டும் . இறை அடியாரின் சிரமத்தையும் கஷ்ட்டத்தையும் நீக்கும் வண்ணமாக அவருக்கு உதவி செய்த அஹ்மது அஷ்காக் என்ற ஏழைத் தொழிலாளி ஹஜ்ஜை செய்யாமலே அல்லாஹ்வின் பட்டியலில் ஹாஜியாக விட்டார். எனவே இதன் மூலம் நாம் உணரக் கடமைப்பட்டுள்ள விஷயம் யாதெனில், அடியார்களின் உரிமை விஷயத்தில் ஒரு முஃமின் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை பொருத்துதான் அவரின் அமல்கள் ஏற்கப்படுகிறது . 

நபி[ஸல்] அவர்கள் சஹாபாக்களிடம் அனைத்தையும் இழந்தவர் யார் தெரியுமா?'' என வினவுகின்றனர். ''எவரிடம் செல்வமோ உலகப் பொருளோ இல்லையோ அவர்தான்[முப்லஸ்] அனைத்தையும் இழந்தவர்'' என தோழர்கள் பதில் பகிர்கின்றனர் . எனது சமுதாயத்தில் ''அனைத்தையும் இழந்தவர்'' யாரெனில் மறுமை நாளன்று ஏராளமான தொழுகை, நோன்பு, ஜகாத்,[இன்ன பிற ஒப்புக் கொள்ளப்பட்ட  வணக்கங்கள்] போன்று நல்ல அமல்களை கொண்டு ஒருவர் வருவார். ஆனால் அவர் எவரையேனும் திட்டியிருப்பார். எவர்மீதாவது பழி  சுமத்தியிருப்பார். எவர் பொருளையாவது சாப்பிட்டியிருப்பார். எவரையேனும் கொலை செய்திருப்பார். எவரையேனும் அடித்திருப்பார். அதனால்  நன்மைகளிருந்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் பாதிக்கப்பட்ட அளவு நன்மைகள் பகிர்ந்து கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் முன்பே  அவரின் நன்மைகள் தீர்ந்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உலகில் செய்த பாவங்களை பெற்று இவர் மீது  போடப்படும் . இறுதியில் நன்மைகளை ஏராளமாக    சுமந்து வந்த இவர் நரகில்  தூக்கி எறியப்படுவார். இவரே எனது சமுதாயத்தில்  ''அனைத்தையும் இழந்தவர்'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்..ஹஜ்ரத் அபூஹூர்ரைரா [ரலி]
நூல் முஸ்லிம் ]

நபி [ஸல்] அவர்களின் இந்த செய்தியை மனதில் கொண்டு அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட  இறுதிக் கடமையை நிறைவேற்றி விட்டு வரும் புனித ஹாஜிகள் அடியார்களின்  உரிமை விஷயத்தில் மிகவும் பேணுதலுடன் இருக்க வேண்டும். ஹாஜிகள் மட்டுமின்றி அனைத்து முஃமின்களும் பிற முஃமின்களின்  , பிற மனிதர்களின்  உரிமை , மானம், மரியாதை ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நம்மால் ஒரு துரும்பளவு கூட பிறருக்கு நமது கையலோ நாவாலோ துன்பம் தந்துவிடக்கூடாது.  நம் வாழ்நாள் முழுவதும் அண்ணலார் [ஸல்] அவர்கள் கூறியுள்ள கீழ்காணும் பொன்மொழியை நம் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்  .

''எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கை விளைவிப்பானோ அவன் எனக்கு தீங்கும்  விளைவித்துவிட்டான்  . எவன் எனக்கு தீங்கு விளைவித்தானோ அவன் உறுதியாக அல்லாஹுத  ஆலாவுக்கு  தீங்கும் விளைவித்துவிட்டான். [அதாவது அல்லாஹுத   ஆலாவை  கோபமடையச் செய்து விட்டான்.]
அறிவிப்பாளர்..அனஸ் [ரலி]
நூல் தப்ரானி ]

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!