அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, மார்ச் 08, 2014

ஐவேளைத் தொழுகை

''பாருங்கள்! உங்களில் ஒருவர்[வீட்டு] வாயிற்படி , முன் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்க அதில் அவர் தினசரி ஐந்து வேலை குளித்துக் கொண்டிருந்தால் , உங்கள் கருத்தில் அவர் உடல் மீது கொஞ்சாமாவது அழுக்குத் தங்கியிருக்குமென எண்ணுகிறீர்களா? என்று அண்ணல் நபி[ஸல்] அவர்கள் கேட்க , அருகிலிருந்தவர்கள்  ''அவ்வாறிருந்தால் எவ்வித அழுக்கும் இருக்க முடியாது !'' என்றனர் . ''இதே உதாரணம் போன்று தான் . ஐ வேளைத்  தொழுகையாக இருக்கிறது ,, அதாவது அத்தொழுகைகளில் மூலமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை அழித்துவிடுகிறான் '' என்றார்கள் , அண்ணலார்.
ஆதாரம் .. புகாரீ ,முஸ்லிம் திர்மிதி ]


தொழுகை பாவங்களை அழித்து  விடுகிறது ,, தொழக் கூடியவருக்குப் பாவச் சிந்தனை ஏற்படுவதில்லை . தொழுது கொண்டே பாவமும் செய்வது பெரும் குற்றமாகும் .
ஒருவர் தொழுகிறார் , அவரின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் . அப்படி அவரின் வாழ்க்கை சரியாக நல்ல சாலிஹான மனிதர் போன்று இருந்தார் என்றால் . அவரின் தொழுகை  சரியாக இருக்கும் என்று கண்ணித்துக் கொள்ளலாம் .

கவலையைப் போக்கும் அருமருந்து !

அண்ணல் நபி [ஸல்] அவர்களுக்குக் கவலை தரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தால், தொழ ஆரம்பித்துவிடுவார்கள்  .
ஆதாரம் .. அபூதாவூத் ]

நமக்கு ஏதாவது கவலை ஏற்பட்டால் அப்படி செய்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்  ! கவலையைப் போக்கும் அருமருந்து இந்த தொழுகைத் தான்  என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்  .

தொழாத பிள்ளைகளை அடியுங்கள்

சிறுவன் எழு வயது அடைந்து விட்டால், அவனைத் தொழுது கொள்ளுமாறு உத்திரவிடுங்கள் ,, பத்து வயது அடைந்த பிறகு அவன் தொழவில்லை என்றால் , அதற்காக அவனை அடியுங்கள்  .
ஆதாரம் .. அபூதாவூத்,, திர்மிதி

இன்று பள்ளிகூடத்திற்கு  போகவில்லை என்றால் தான் , நம் பிள்ளைகளை அடிப்போம் . அவர்கள் தொழாமல் இருந்தால் கண்டுக்க மாட்டோம் . நாமே தொழ  மாட்டோம்  , பிறகு எங்கே பிள்ளைகளுக்கு தொழும்படி சொல்ல முடியும்? இப்படிதான் பெரும்பாலும் குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

தாமதப்படுத்தக் கூடாத மூன்று விஷயங்கள் !

''ஓ அலீயே ! மூன்று விஷயங்களில் தாமதம் செய்யாதீர்கள் ,, தொழுகை நேரம் வந்ததும் [தொழுது கொள்ளும்] ஜனாஸா அதற்குரிய கிரியைகள் முடிந்ததும் [அடக்கம் செய்வதில்] விதவைக்கு அவளுக்குப் பொருத்தமான ஜோடி கிடைத்து விட்டால்[ அவளைத் திருமணம் செய்து கொடுப்பதில்]
ஆதாரம் .. திர்மிதி ]

தொழுகை நேரம் கழிந்து விட்டால் அதற்குரிய நன்மை போய்விடும் . மரணம் எல்லோருக்கும் உண்டு. எனவே , மரணித்தவரைச் சீக்கிரம் அடக்கம் செய்து துக்கம்  விசாரிக்க வந்தவர்களை விரைவில் விடைகொடுத்து அனுப்பிவிட்டால் , அவர்களுக்குத் தத்தம் வேளைகளில் ஈடுபட்டுக் கொள்ளச் சவுகரியமாக இருக்கும். இதேபோன்று விதவைக்கு தகுதியான மாப்பிளைக் கிடைத்து விட்டால் , உடனடியாகத் திருமணம் செய்து  வைத்து, விதவையின் துயரத்தை துடைக்கவேண்டும்.

நம்மிடத்தில் இருக்கும் ஒரு பெரிய கெட்டபழக்கம் என்னெவென்றால் , இந்த ஜனாச விடயத்தில் நாம்  இன்றுவரை ரொம்ப தாமதப் படுத்துகிறோம் என்பது ஒரு வேதனையாக தான் இருக்கிறது.

நிர்வாணம் கூடாது

ஒரு நாயகத் தோழர், அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் , ''அல்லாஹ்வின் தூதரே! தனது மர்மஸ்தானத்தை யார்  முன்னாள் மறைப்பது ? யார் முன்னால்  மறைக்காமலிருப்பது  ? என்று கேட்டார் . அதற்கு அண்ணலார், ''தன்னுடைய மனைவி  [விலைக்கு வாங்கி] வீட்டிலுள்ள அடிமைப் பெண் ஆகியோரைத் தவிர , மற்ற எல்லாரும்  முன்னாலும் மறைக்க வேண்டும் !'' என்றார்கள் . ''ஒரு மனிதர் மற்றொரு மனிதருடன் [எப்போதுமே] சேர்ந்திருக்கிறார் , அப்பொழுது? என்று கேட்டார்  , அந்த நாயகத் தோழர் , ''அத்தகையச் சமயங்களிலும், முடிந்தவரை உங்கள் மர்மஸ்தானத்தை அவர் பார்க்காதவாறு மறைத்துக் கொள்ளவும்!'' என்றார்கள் அண்ணலார். ''ஒருவர் தனித்திருக்கும் பொழுது? என்று கேட்டார், அந்தநாயகத் தோழர்  , அதற்க்கு அண்ணலார், ''அல்லாஹ்விற்குள்ள உரிமை அதிகமாயிருக்கிறது,, மனிதர்களைவிட அல்லாஹ்விடம் அதிகம் வெட்கப்படும் என்றார்கள்.

ஆதாரம் ..அபூதாவூத்]
 இதன் கருத்து என்னெவென்றால் , ஒரு மனிதன் பிறந்த மேனியாக நிர்வானமாயிருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே  !

ஒரே விரிப்பில் இருவர் படுக்கக்கூடாது

ஓர் ஆண் , இன்னொரு ஆணுடைய மர்மஸ்தானைதைப் பார்க்கக் கூடாது,, ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணுடைய மர்மஸ்தானத்தைப்  பார்க்கக் கூடாது! ஓர் ஆண்  , இன்னொரு ஆணை அணைத்தவாறு ஒரே விரிப்பில் படுக்கக் கூடாது,, ஒரு பெண் இன்னொரு  பெண்ணை அணைத்தவாறு ஒரே விரிப்பில் படுக்கக்கூடாது.
ஆதாரம்.. முஸ்லிம் ,, அபூதாவூத்]

இன்று கல்லூரிகளில் படிக்கும் சில பெண்கள் . அவர்கள் ஹாஸ்ட்டலில் தங்கி இருந்து படிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது தவறான பழக்க, வழக்கங்கள் ஏற்படுகிறது  . விளயாட்டகாவும் , ஒருவரை ஒருவர் தவறான முறையில்  கெட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள் . சில தவர்களும் நடக்கிறது. அப்படி  நம் இஸ்லாமிய பெண்கள் தங்க நேரிட்டால் . அவர்கள் கடமைகளை செய்து முடித்த பிறகு  , அவர்கள் திலாவத் குரான் ஓதுவதும் , மார்க்க கல்வியை கற்பதுமாக அவர்கள் நேரத்தை கழிக்க வேண்டும்  . மாற்றுமத சகோதரிகளின் மனதில் ஈர்க்கும்  வகையாக , இஸ்லாத்தை தழுவும் விதமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் ''ஓர் ஆணின் தொடையையும் மர்மஸ்தானப் பகுதி'' என்று கணித்தார்கள் .
ஆதாரம்.. திர்மிதி]

ஒரு பெண்ணின் எல்லாப் பகுதியும் வசீகரம் நிறைந்தது,, ஓர் ஆணின் முகம் கவர்ச்சி தருவதைப் போல அவனது தொடையும் கவர்ச்சி தரக் கூடியதாயிருக்கிறது. எனவே, அதனை மூடுவதும் அவசியமாகிறது .

அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!