அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

செம்மல்நபியின் சிறப்புரைகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ...................
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !!!

''சொர்க்கத்தில் ஜனங்களை அதிகளவு பிரவேசிக்கச் செய்வது யாதென்று நீங்கள் அறிவீர்களா?  [என்று கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்]  ' அல்லாஹ்வை அஞ்சுவது, நற்குணம் கொள்வது' ஆக இவ்விரண்டுமாகும் [என்று விடை தந்தார்கள்] நரகத்தில் ஜனங்களை அதிகளவு பிரவேசிக்கச் செய்வது யாதென்று நீங்கள் அறிவீர்களா?  [என்று கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்] தகாதவைகளை மொழியும்]  'வாய், [தீய செயலில் ஈடுபடும் ] மர்ம பாகம் .' ஆக இவ்விரண்டுமாகும், [என்று விடை தந்தார்கள்.]


''நிச்சயமாக மானமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. எனவே , அவ்விரண்டிலொன்று நீக்கப்படுமானால் மற்றொன்றும் நீக்கப்பட்டுவிடும்.

''ஒருவர் தாமும் திருக்குர் ஆனைக் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்போர் உங்களில் மிகச்  சிறந்தவராவார் .''

''எவருடைய இதயத்தில் திருக்குர் ஆனிலிருந்து  [மனப்பாடமாக] எதுவும் இல்லையோ அந்த இதயம்  பாழடைந்த வீடு போன்றதாகும்.''

''நீர் உம்முடைய சகோதரைப்பார்த்துப் புன்னகை புரிதல் உமக்கு ஒரு தர்மம் . நீர் நன்மையைக் கூறி, தீமையை விலகுவது உமக்கு ஒரு தர்மம் . வழி தவறிய இடத்தில் ஒரு  மனிதனுக்கு நீர் வழிக்காட்டுவதால் உமக்கு ஒரு தர்மம். பாதையில் கிடக்கும் கல், முள் எலும்பு ஆகியவைகளை நீர் அகற்றுவது உமக்கு ஒரு தர்மம்.''

'ஒரு பெண் தன்னுடைய கணவனுடைய அனுமதியின்றி தன்  வீட்டை விட்டு வெளிப்படுவாளாயின்  , அவள் தன்  வீட்டுக்குத் திரும்பி வரும்வரை அல்லது அவளை அவன் திருப்தி கொள்ளும் வரை அவள்  அல்லாஹ்வின் கோபத்தில் இருப்பாள்.''

''எந்த ஒரு பெண்ணை , அவளுடைய கணவன் திருப்தி கொண்டிருக்கும் நிலையில் அவள்  மரித்து விடுவாளாயின் , அவள் சொர்க்கம் புகுவாள்.''

''நீர் எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து கொள்வீராக ! ஒரு தீமைக்கு [பகரமாக]  ஒரு நன்மையைத் தொடரும்படிச் செய்வீராக! அதனை [அந்தத் தீமையை]  அந்த நன்மை  அழித்துவிடும் . அழகிய குணம் கொண்டு ஜனங்களோடு
உறவாடுவீராக! ''


அல்லாஹ் மிக அறிந்தவன் .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!