அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயமாக குறைவாகச் சிரிப்பீர்கள் ,, அதிகமாக அழுவீர்கள்

 நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயமாக குறைவாகச் சிரிப்பீர்கள்! அதிகமாக அழுவீர்கள் .. அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே !

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..

நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயமாக குறைவாகச் சிரிப்பீர்கள்,, அதிகமாக அழுவீர்கள்.
இதை அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டள்ளது.     சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது .
இதை அபூஹுரைரா [ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் ..புகாரீ]


அல்லாஹ்வின் ஆற்றல் , அவன் தனக்கு மாறுசெய்கின்றவர்களைத் தண்டிக்கும் விதம் , மரணம் , மண்ணறை , மறுமை நாள்  ஆகியவற்றின் பயங்கரம் போன்ற விஷயங்களின் யதார்த்த நிலையை நபி [ஸல்] அவர்கள் அறிந்ததைப் போன்று மற்றவர்களும் அறிந்தால் சிரிப்பே வராது,, அழுகைத்தான்  வரும். அப்படியே சிரித்தாலும் குறைவாகவே சிரிப்பார்கள்,, அதிகமாக அழுவார்கள் . அந்த அளவுக்கு அவற்றின் பயங்கரம் கடுமையானதாக இருக்கும் . [ஃபத்ஹுல் பாரீ ]

அதாவது மன இச்சைகள் என்ற திரைக்கப்பால் இருப்பது நரகம்தான். அல்லது மன இச்சைகள் என்ற மூடியை திறந்துகொண்டு பார்த்தால் அங்கு தெரிவது நரகம்தான் . மன இச்சைகளின்படி வாழ்வது நரகத்திற்குத்தான் வழிவகுக்கும். மன இச்சைகள் என்பது மார்க்கம் தடை செய்துள்ள இம்மைச் சுகங்களைக் குறிக்கும். இந்த மன இச்சைகளின்படி நடந்தால் ஒன்று , தடை செய்யப்பட்டள்ள செயல்களைச் செய்ய வேண்டியது வரும் . அல்லது கடமையானாவற்றைக் கைவிட வேண்டியது வரும். இந்த இரண்டு நிலைகளுமே நரகத்திற்கு வழிவகுத்துவிடும் . இதைப் போன்றே , சிரமங்கள் என்ற திரைக்கப்பால் சொர்க்கம் இருக்கிறது. மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதும், மார்க்கம் தடை செய்துள்ளவற்றிளிருந்து விலகி வாழ்வதும் சுமைகளாகத் தெரியலாம் . ஆனால், அந்தச் சுமைகளைத் தாங்கினால்தான் சொர்க்கம் என்ற சுவை கிடைக்கும். [ஃபத்ஹுல் பாரீ ]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட  உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப் போன்றே [மிக அருகில் உள்ளது]

இதை அப்துல்லாஹ் பன் மஸ்ஊத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் ..புகாரீ]

அதாவது சொர்க்கமும் , நரகமும் நமக்கு அருகிலேயே உள்ளன. நாம் செய்கின்ற ஒரு சிறு நன்மையின் காரணத்தால்கூட இறைவன் நமக்குச் சொர்க்கத்தை வழங்கிவிடலாம்  . இதைப் போன்றே நமது பார்வையில் மலிவாக தெரியும் ஒரு குற்றத்தால் நரக வேதனை அளிக்கப்பட்டுவிடலாம் . ஆகவே  , நன்மை சிறிதே ஆயினும் அதைச் செய்யத் தவறக் கூடாது. சிறிய பாவமாயினும் அதைக் கைவிடத் தவறக் கூடாது. எந்த நன்மையின் மூலம் இறையருளுக்கு இலக்காவோம்,, எந்தப் பாவத்தால் இறைமுனிவுக்கு ஆளாவோம் என்பது யாருக்கும் தெரியாது.[ஃபத்ஹுல் பாரீ ]
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!