சனி, ஏப்ரல் 05, 2014

நற்பலன்தரும் மனைவி

அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

ஒருவருக்கு ஒரு நல்ல ஸாலிஹான மனைவி கிடைப்பது அவருக்கு வாழ்நாள் முழுதும் சந்தோஷமாக தான் இருக்கும் என்பது ஒரு துளிக் கூட சந்தேகம் இல்லை .அதற்கான நிறைய ஹதீஸ்கள் சான்றாக உள்ளன . மாறாக , அவருக்கு வாழ்நாள் முழுதும் நரக வாழ்க்கைதான் என்று சொல்ல வேண்டும் . கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில் மனைவிக்கு என்ன சிரமம் இருக்க போகிறது? அப்படி கட்டுப்பட்டு நடக்காமல் இருக்கும் பெண்கள் அவர்கள் ஆணவம் கொண்ட பெண்களாக தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை . ஆணவம் உள்ளவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்பது இவர்கள் யோசிக்கவில்லையா ? மறுமையின் நிலைகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லையா? ரொம்ப ஆச்சிரியமாகதான் இருக்கிறது !


அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறிய அழகான பொன்மொழிகள் இதோ..

உலகம் , நற்பலனை அடைவதற்கான ஒரு சாதனமாயிருக்கிறது,, அந்த நற்பலன் , நல்ல குணவதியான மனைவியைக் கொண்டு தான் கிடைக்கும்.
ஆதாரம் .. முஸ்லிம் , நசயீ ]

நல்ல பொக்கிஷம்

நற்செயல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபொழுது, அண்ணல் நபி[ஸல்] அவர்கள், ''எல்லாவற்றையும் விட ஒரு நல்ல பொக்கிஷம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு,  ''அதுதான் நல்ல மனைவி ,, அவளுடைய கணவன் அவள் பக்கம் பார்க்கும் பொழுது  , அவள் அவனைச் சந்தொஷப்படுத்துகிறாள்,, அவன் என்ன வேனை சொன்னாலும் உடனே அதனைச் செய்து முடிக்கிறாள்,, அவன் வெளியில் சென்றிருக்கும் பொழுது, அவள் அவனுடைய வீட்டையும், தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறாள்,'' என்று கூறினார்கள்.
ஆதாரம்.. அபூதாவூத்]

நல்ல மனைவியைக் கொண்டுதான் , குடும்பத்தில் சந்தோஷம் நிலவுகிறது,, அடங்காத மனைவியால் குடும்பமே நாசமாகிவிடுகிறது. சில குடும்பத்தில் எப்பொழுதும் சண்டையும் ,சச்சரவுமாக தான் இருக்கிறது. காரணம் சில அடங்காத மனைவிகளின்  பிரச்சனைகள் தான் . பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்கள்  அவர்கள் அப்படிதான் நடந்து கொள்கிறார்கள் . எதையும் யோசிக்காமல் செய்ய கூடியவர்கள் தான்  இந்த பெண்கள் .அவசரமும் , குறுகிய புத்தியும்  அறிவில் குறைவும் கொண்டவர்கள் தான் இந்த பெண்கள்.

ஒரு பெண்ணை, அவளது நான்கு வகையான காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறது. 1.    அவளுடைய செல்வம் ,, 2. அவளது குடும்பம் அல்லது தகுதி. 3. அவளுடைய அழகு,  4. அவளது மார்க்கப்பெணுதல். எனவே மார்க்கப் பேணுதலுள்ள  பெண்ணை மணமுடித்துக் கொள்ளவும். [இல்லாவிடில்] உன் கரங்களில் மண்தான்!
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்,நசயீ , அபூதாவூத்]

இன்று மார்க்கப்பெணுதல் உள்ள பெண்களை தான் திருமணம் செய்துக் கொள்கிறார்களா?  நிச்சயமாக இல்லை. அவளின் அழகைப் பார்த்து தான் திருமணம் செய்கிறார்கள்  . திருமணத்துக்கு முன்பு அவள் அழகாக இருந்தால் , திருமணம் ஆன  பிறகு சில காலம் கழித்து .அவனுக்கு அவளை பிடிக்காமல் போய்விட்டது.  அவன் விரும்பியது அவளின் அழகை மட்டும் தான் . அழகு போய்விட்டது, அவனுக்கு அவளின் மீது ஆசையும் போய்விட்டது. ஒரு மனைவியிடத்தில்  உடல் சுகத்தை மட்டும் தேடும் சில  ஆண்கள் உண்டு . அன்பு , நேசம் , பாசம்  இவைகளைப் பற்றி அவர்களுக்கு  அக்கறை இல்லை . சிந்திக்க வேண்டும்!

நீங்கள் ஒரு பெண்ணை மணமுடிப்பதற்காக தூது அனுப்பினீர்கள். அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள  முடிவு செய்தபின் சாத்தியமாயின் , அப்பெண்ணின் முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆதாரம்.. அபூதாவூத்]

திருமணத்திற்கு முன்  ஆண் -பெண் இருவரும் மேல் நாடுகள் முறைப்படி கலந்துரவாடுவதை அண்ணலார் தடுத்துள்ளார்கள். திருமணத்திற்கு முன் பெற்றோர்கள் முன்னிலையில் ஒரு முறை  பார்த்துக் கொள்ள இஸ்லாத்தில் அனுமதிஉண்டு  .

அன்று  பெற்றோர்கள் பார்த்து பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள் . இன்று  பெற்றோர்களுக்கு அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது . அவர்களாகவே பார்த்து , பேசிக் கொண்டு . பிறகு பெற்றோர்களிடம் அனுமதி கேட்கிறார்கள் , அனுமதி கிடைத்தால்  பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம். இல்லாவிடில் நண்பர்கள் முன்னிலையில்  இரகசிய திருமணம். இன்று நடக்கும் நடைமுறைகளைத் தான்  சொல்கிறேன் . யாரையும் மனதைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை  . அல்லாஹ் நம்மை மன்னிக்கவும் . அல்லாஹ்வின் அருள் வேண்டும்  , பெற்றோர்களின் துஆ வேண்டும் இவை இரண்டும் இல்லாத திருமணம்  நறுமணம் இல்லாத வாழ்வுதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒரு நல்ல ஸாலிஹான மனைவிக் கிடைக்க அல்லாஹ்விடம் எப்பொழுதும் துஆச் செய்ய வேண்டும்  . அதே போல ஒரு பெண்ணுக்கு  ஒரு நல்ல கணவர் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்ய வேண்டும்  .  மார்க்கப்பெணுதல் உள்ள மனைவி அமைய வேண்டும். மார்க்கப்பெணுதல் உள்ள கணவர் அமைய வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!