அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், மே 29, 2014

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்

அல்லாஹ்வின் திருபெயரால் .......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று இறைவனின் வழி அதுதான் இஸ்லாம்! இரண்டாவது வழி அது ஷைத்தானின் வழி . ஒரு மனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும் , அதற்கு அவன் எதையும் வேண்டுமானாலும் வணங்கி வாழ முடியும் . முடிவில் , அவன் நரகத்தில் விழுவான் . ஒரு மனிதன் இப்படிதான் வாழ வேண்டும் என்று நினைத்து ஒரு வழியை தேர்வுச் செய்கிறான் , அந்த வழி இறைவன் காட்டிய வழியாக இருந்தால் அவன் இஸ்லாத்தை நோக்கி வருவான் , அவன் முஸ்லிமாக மாறுவான் . ஒவ்வொரு மனிதர்களும் இஸ்லாத்தை அறிந்துக் கொண்டு , ஆராயிந்து இஸ்லாத்தில் இணைகிறார்கள். இஸ்லாத்த்தின்ப்படி வாழ்கிறார்கள் . பிறப்பினால் முஸ்லிமாக இருக்கும் நாம் எந்தளவுக்கு இஸ்லாத்தை பின்பற்றுகிறோம் என்பது ஒரு கேள்விகுரியாகதான் இருக்கிறது. சிலர் பெயர் தாங்கி முஸ்லிமாக இருக்கிறார்கள் , இன்னும் சிலர் பெயருக்காக முஸ்லிமாக வாழ்கிறார்கள் , மற்ற சிலர் உண்மையான முஃமினாக இருந்தும் , வாழ்ந்துக் காட்டுகிறார்கள் . மூன்றாவதாக தான் நாம் இருக்க வேண்டும்.


முஸ்லிம் , தனது செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடவேண்டும். அவறது ஒவ்வொரு அடியும் அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும் . மனிதர்களின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளக்கூடாது. அல்லாஹ்வின் நேர்வழியில் செல்லும்போது சில சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு இலக்காக நேரிட்டாலும் சரியே .

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..  ''எவர் மனிதர்களில் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தேடுக்கிராரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிராரோ அவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டிவிடுகிறான்.
ஆதாரம்..ஸூனனுத் திர்மிதி]

இந்நிலையில் , முஸ்லிம் தனது செயல்களை அல்லாஹ்வின் திருப்தி எனும் தராசில் நிறுத்துப் பார்க்கிறார். அல்லாஹ்வின் திருப்தியின் தட்டு கனமானால் அதை ஏற்று திருப்தியடைகிறார். தராசின் தட்டு மறுபக்கம் சாய்ந்தால் அதை அலட்சியப்படுத்தி விடுகிறார். இவ்வாறே அவரது நேர்வழியின் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அவரது பார்வையில் நேரிய , நடுநிலையான பாதை தென்படுகிறது. எனவே அவர் பலவீனமான , பரிகாசத்திற்குரிய முரண்பாடுகளில் வீழ்ந்துவிட மாட்டார். ஒரு விஷயத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, மற்றொரு விஷயத்தில் முரண்படுதல் ,, சில நேரங்களில் ஹலாலாக ஆக்கிக் கொண்டதை மற்றொரு நேரத்தில் ஹராமாக்கிக் கொள்வது போன்ற செயல்கள்  முஸ்லிமிடம் ஏற்படாது. ஏனெனில் , அவர் தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்து உறுதியான கொள்கையைக் கொண்டுள்ள வராவார். எனவே அவரிடம் இவ்வாறான முரண்பாடுகளுக்கு இடமில்லை.

சிலர் மஸ்ஜிதுகளில் இறையச்சத்துடன் தொழுவார்கள். ஆனால் அவர்களை கடைவீதியில் வட்டி வாங்குபவர்களாக காணமுடிகிறது. அல்லது குடும்பம் , கடைவீதி கல்விக் கூடங்கள், சங்கங்கள் இவற்றில் எதிலுமே அல்லாஹ்வின் கட்டளைகளை  நிறைவேற்ற மாட்டார்கள். இதற்கு காரணம் இம்மார்க்கத்தைப் பற்றிய அவர்களின்  அறியாமையே .

அவர்கள் ஒவ்வொரு செயலையும் தங்களது திருப்தியின் தராசைக் கொண்டு அளவிடுகிறார்கள். இதனால்தான் அவர்கள் முஸ்லிம்களிடையே காணப்பட்டாலும் பெயரைத்  தவிர இஸ்லாமில் அவர்களுக்கு எந்தப் பங்குமிருப்பதில்லை. இது தற்காலத்தில் முஸ்லிம்களை எதிர்நோக்கியுள்ள மாபெரும் சோதனையாகும்.

உண்மை முஸ்லிம் , இஸ்லாமின் அனைத்து கடமைகளையும் அலட்சியம், மறதி  மற்றும் குறைபாடுகள் எதுவுமின்றி பூரணமாக அழகிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.

அவர் ஐந்து நேரத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவார். ஏனெனில் தொழுகை மார்க்கத்தின் தூணாகும்,, அமல்களில் மிக உன்னதமானதாகும். அதை நிறைவேற்றுபவர் மார்க்கத்தை நிலை நாட்டுகிறார். அதை வீணடிப்பவர் மார்க்கத்தைத் தகர்த்தவராவார்.

இப்னு மஸ்வூது [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நான் நபி [ஸல்] அவர்களிடம் ,  ''அமல்களில் சிறந்தது எது? என்று கேட்டேன். நபி [ஸல்] அவர்கள் , ''தொழுகை அது உரிய நேரத்தில் [நிறைவேற்றுவது]'' என்று கூறினார்கள்.  'பிறகு என்ன ? என்றேன் . நபி]ஸல்] அவர்கள் ''பெற்றோருக்கு உபகாரம் செய்தல்'' என்று கூறினார்கள். ''பிறகு என்ன? என்றேன். ''அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் ''என்று கூறினார்கள் .
ஆதாரம்.. ஸஹீஹுல் புகாரீ]

தொழுகை சிறப்படையக் காரணம் அது அடியானுக்கும் அவனது இரட்சகனுக்குமிடையே தொடர்ப்பை ஏற்படுத்துகிறது. தொழுபவர் உலகின் அனைத்து ஈடுபாடுகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்கிறார். தனக்குரிய அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பிக்கிறார். தொழுகையி மூலம் நேர்வழியையும் உதிவியையும் பெற்றுக் கொள்கிறார். நேர்வழியின் மீது உறுதியாக நிலைத்திருப்பதை அல்லாஹ்விடம் வேண்டுகிறார்.

அல்லாஹ் மிக அறிந்தவன்
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!