சனி, மே 31, 2014

இம்மை இன்பம் அற்பமானது

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !

மனிதனுக்கு எதுவாகினாலும் அது அவனுக்கு ஒரு சொர்ப்பக் காலம்தான் . இன்பம் வந்தாலும் சரியே , துன்பம் வந்தாலும் சரியே! எதுவந்தாலும் கொஞ்சம் காலம் தான் அந்த மனிதன் அனுபவிக்க முடியும். ஒரு நேரம் வரும் அந்த நேரம் தான் அந்த மனிதனுக்கு மரணம் வரும் நேரம். அந்த நொடியில் அவனிடத்தில் இருக்கும் அனைத்தையும் விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தாம்! ஆனால் , இந்த மனிதன் மறதியிலும் , உலக இன்பத்திலும் முழ்கி இருக்கும்போது , அவனுக்கு இந்த சிந்தனைகள் வராது. உலகத்தை விட்டு ஒரேடியாக ஒதுங்கியும் இருக்கக்கூடாது , உலகத்தில் ஒரேடியாக முழ்கியும் இருக்க கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும். அதாவது ஒரு வழிப்போக்கனைப் போன்று நாம் வாழ வேண்டும். 

ஒரு கவிஞர் அழகாக பாடுகிறார் அவர்தான் அபூமுஸ்ஹிர் ..

அல்லாஹ்வின் கருணையால் சொர்க்கத்தில் இடம் கிடைக்காதவருக்கு இவ்வுலகத்தில் வாழ்வதால் எப்பலனும் இல்லை.

உலக இன்பம் மனிதர்களைக் கவர்ந்தாலும் அது அற்பமானதே! விரைவில் அது அழிந்துபோகக்கூடியதே! 


''நபியே] நீர் கூறுவீராக.. இவ்வுலக இன்பம் அற்பமானது . இறையச்சம் உடையோருக்கு மறுமையே சிறந்தது'' என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது இவ்வுலக வாழ்க்கையைவிட மறுமை வாழ்க்கையே இறையச்சமுடையோருக்குச் சிறந்தது. 

மேலும்,  ''ஒரு துரும்பலவுகூட நீங்கள் அநீதியிழைக்கப்படமாட்டீர்கள் '' என்று அந்த வசனம் தெரிவிக்கின்றது. அதாவது நீங்கள் புரிந்த நற்செயல்களுக்கான பிரதிபலனில் துரும்பளவும் அநீதியிழைக்கப்படமாட்டீர்கள் . அது முழுமையாக உங்களுக்கு வழங்கப்படும்.

எனவே, இவ்வுலக இன்பங்களைப் புறக்கணித்துவிட்டு மறுமை வாழ்வில் ஆர்வம் காட்ட வேண்டும்,, 

ஹசன் அல்பஸ் ரீ  [ரஹ் ] அவர்கள் ,  ''இவ்வுலக இன்பம் அற்பமானது '' எனும் இந்த வசனத்தை ஓதிக்காட்டி விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்..

இவ்வுலக இன்பம் அற்பமானது என்பதைக் கவனத்தில் கொண்டு உலகத்தில்  வாழ்கின்றவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இவ்வுலகம் தோன்றியது முதல இறுதிவரை  உள்ள இவ்வுலகின் இன்பங்கள் அனைத்தும் சிறிது நேரம் உறங்கி, தான் ஆசைப்பட்டதில் சிலவற்றைக் கனவில் கண்டு எழுந்தவனின் இன்பத்தைப் போன்றவைதான்.

இது உண்மைதானே! அன்பு சகோதர/சகோதரிகளே! இதை ஒவ்வொரு முஸ்லிம் நினைத்து , சிந்தித்து மறுமையின் காரியத்தில் ஆர்வம் கொண்டால்  இன்ஷாஅல்லாஹ் வெற்றிதான் !

அல்லாஹ் மிக அறிந்தவன்
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!