அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், மே 08, 2014

மறுமை நாளில் பழிதீர்க்கப்படுதல்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

மறுமை நாளுக்கு  'அல்ஹாக்கா' ['நிச்சயமானது'] என்றொரு பெயருண்டு. ஏனெனில் அந்நாளில் பிரதிபலன் கிடைப்பதும், உண்மைகள் [வெளிச்சத்திற்கு ] வருவதும் நிச்சயமாகும். 

அதாவது இம்மையில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக மறுமையில் பழி தீர்த்துக் கொள்ளப்படும். எல்லாக் குற்றவாளிகளும் இம்மையில் தண்டிக்கப்படுவதில்லை. அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றத்திற்கேற்ற தண்டனை அடைந்தார்கள் என்று சொல்லவும் முடியாது. அவ்வாறு இஸ்லாம் கூறியபடி முறையான தண்டனை அடைந்தவர்களில் அனைவரும் தமது குற்றத்திற்காக மனம் வருந்தி திருந்தியவர்கள் என்றும் கூற முடியாது. எனவே, நீதி நிலைநாட்டப்பட்டு , பாதிப்புக்குள்ளானோர் நிவாரணம் பெறவும், குற்றவாளிகள் முறையாகத் தண்டிக்கப்படவும் வேண்டி மறுமையில் பழி  தீர்த்துக்கொள்ளப்படும் . மறுமையில் இறைவனின் சந்நிதானத்தில் விசாரணை நடைபெற்று, தக்க பரிகாரம் காணப்படும்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன்முதலில் தீர்ப்பளிக்கப்படுவது ]உலகில் சிந்தப்பட்ட] இரத்தங்கள் [கொலைகள்] குறித்துதான் .
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்..புகாரீ]

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் [அவருடன் பேசி விமோசனம் கண்டு] அதிலிருந்து அவர் [இவ்வுலகிலேயே] தம்மை விடுவித்துக்கொள்ளட்டும் . ஏனெனில் , அங்கு [மறுமையில் ஈட்டுத்தொகை கொடுக்க] பொற்காசோ வெள்ளிகாசோ இருக்காது. இவர் தம் சகோதரருக்கு [இழைத்த அநீதிக்கு ஈடாக] இவருடைய நன்மைகளிருந்து [தேவையானவை] எடு [த்துக் கொடு] க்கப்படும் ,, இவரிடம் நன்மைகளே இல்லை என்றால் , [அநீதிக்குள்ளான] சகோதரனின் பாவங்களிலிருந்து [விகிதாசாரப்படி] எடுத்து இவர்மீது சுமத்தப் [படும் இந்நிலை ஏற் ] படுவதற்கு முன்பே [இம்மையில் சமரசம் செய்துகொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்..புகாரீ]

மனித உரிமை மீறல்களில் மிகவும் கடுமையான குற்றம் ஒருவரை படுகொலை செய்வதுதான். மனித வாழ்வின் அடிப்படையையே சீரழித்து. குழப்பங்களும் சீற்குளைவுகளும் உண்டாகக் காரணமாக இருப்பது கொலைக் குற்றமாகும். எனவே  , மறுமையில் கொலைக் குற்றம் தொடர்பாகவே முதன்முதலில் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு  வழங்கப்படும். அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸில் , ''[மறுமையில்] மக்கள்டையே முதலில் தீர்ப்பளிக்கப்படுவது கொலைகள் தொடர்பாகத்தான். கொலையுண்ட ஒவ்வொருவரும் தமது  தலையைக் கையிலேந்தியவாறு வந்து  'இறைவா! இவன் என்னை ஏன்  கொலை செய்தான்? என்று கேள் ' என்பார்கள் என நபி [ஸல்] அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .

இரு மனிதர்களுக்கிடையே நடக்கும் குற்றங்களில் முதலில் விசாரிக்கப்படுவது கொலைக் குற்றம் என்றால்  , இறைவன் விஷயத்தில் மனிதன் செய்த குற்றங்களில்  முதன்முதலில் விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றியே ஆகும். ''மறுமை நாளில் ஓர் அடியார் முதலில் விசாரிக்கபடுவது தொழுகை குறித்ததாகும்'' என்ற நபிமொழி இதையே காட்டுகிறது.  [நசாயீ] [ஃபத்ஹுல் பாரீ ]
அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி [ன் பாலத்தி] லிருந்து தப்பி வரும்போது  சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு  பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.  அங்கு உலகில்  [வாழ்ந்தபோது] அவர்களுக்கிடையே நடந்த  அநீதிகளுக்காக சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக்கொள்வார்கள். இறுதியில் அவர்கள் [மாசு] நீங்கித் தூய்மையாகிவிடுமபோது  சொர்க்கத்தில் நுழைய  அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் . முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ  அவன்மீதாணையாக ! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தமது வசிப்பிடத்தை, உலகத்திலிருந்து அவர்களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .    

அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!