அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஜூன் 01, 2014

இம்மை மறுமையின் வெற்றி

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அதன்படி செயலாற்றி, மேலும் நாயகம் சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடபதற்கு தீன், தீனுடைய வாழ்க்கை- மார்க்கம் என்று கூறப்படும். எனவே யார் தீனுடைய வாழ்க்கையை பின்பற்றுவாரோ அவர் இரு உலகிலும் எல்லா நிலைமைகளிலும் மனநிம்மதியை அடைவார். சிலர் வருடத்தில் இரு பெருநாள் தொழுகைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு தங்களை தீன்தாரிகள் என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலரிடம் ஹஜ்ஜூ இருந்தால் தொழுகை இல்லை, தொழுகை இருந்தால் ஜக்காத்து இல்லை, ஜக்காத்து இருந்தால் தொழுகை இல்லை, ஆனால் தங்களையும் தீன்தாரிகலென்று கூறுகின்றனர். இவை ஒவ்வொன்றும் தீனுடைய ஒரு பகுதியாகும்.


ஒருவர் தம்மிடம் கார் இருப்பதாகக் கூறினார் . ஆனால், அவரிடம் சென்று பார்த்தால் காருடைய ஹாரன் மட்டும்தான் இருந்தது. இன்னும் சில தங்களிடமும் கார் இருக்கிறது என்று கூறினார்கள். அதைப் பார்க்க சென்ற சமயம் சிலரிடம் காருடைய கியரும், சிலரிடம் காருடைய டாப்பும் , ஸ்டேரிங்கும் இருந்தது. இவை யாவும் காருடைய ஒவ்வொரு பகுதியாகும் . இவற்றை ஒன்று சேர்த்தால்தான் கார் என்று கூற முடியும் . இதைப் போன்றுதான் தீனின் ஒவ்வோர் அமலையும் ஒன்று சேர்க்கும் பொழுதுதான் முழுமையான தீன் என்று கூற முடியும்.

மன சஞ்சலத்திற்குக் காரணமென்ன?

சிலரிடம் நிறைய செல்வங்கள் , பங்களாக்கள் ஏர் கண்டிஷன் ரூம் , வாகன வசதி வேலையாட்கள் பதவிகள் ஆகியவை இருந்தும் அவர்களுக்கு அடிக்கடி மன சஞ்சலம் , நிம்மதியற்ற தன்மை , பயம் , திடுக்கம்  ஆகியவை ஏற்படுவதாகக் கூறுகின்றார்கள். இந்த வியாதிக்குக் காரணம் என்ன? இந்த வியாதிக்கு  'ஆத்மீக வியாதி' என்று கூறப்படும் இந்த வியாதி ஏற்படுவதற்குக் காரணம் மார்க்கப் புறம்பான காரியங்களைத் தன்னுடைய அவயவங்களினால் செய்வதன் மூலம் இந்த வியாதி சிறிது சிறிதாக ஆரம்பித்து கடைசியாக மன வியாதியாக மாறி மனதில் சஞ்சலங்களும் கஷட்டங்களும் உண்டாக மனதில் நிம்மதி என்பதே இல்லாமலாகி விடுகிறது. கண்களின் மூலமாக சினிமா , சீரியல் , டெலிவிஷன், அருவருப்பான உருவப் படங்கள், அந்நிய பெண்களைப் பார்த்தல் [தவறான எண்ணத்துடன்] இவற்றின் மூலமும் , நாவின் மூலமாக புறம் பேசுதல் , பொய் பேசுதல், கொள் மூட்டுதல் , வீண் பேச்சுக்களைப் பேசுதல் ஆகியவற்றின் மூலமாகவும், மேலும் நாவினால் பேசக் கூடாத விஷயங்களைக் காதுகளினால் கேட்பதின் மூலமும் இந்த மன வியாதி ஏற்படுகிறது. மேலும் சினிமாப் பாடல்களையும் , வீணை  வாத்தியங்களையும் [இசை] கேட்பதின் மூலமும் இந்த மனவியாதி ஏற்படுகிறது. மேலும் ஹராமான வழியில் சம்பாதிப்பதின்  மூலமும் இந்த வியாதி ஏற்படுகிறது.

மன வியாதி நீங்க வழி என்ன? ம்

மேற்கண்ட கெட்ட பழக்கங்களை விட்டு விட்டு அல்லாஹ்வின் திக்ரை அதிகமாக செய்து வந்தால்  இன்ஷாஅல்லாஹ் இந்த வியாதி நீங்கி விடும். திக்ர் என்பது  தஸ்மணியை வைத்துக் கொண்டு உருட்டிக் கொண்டு இருப்பது அல்ல  , அதுவும் ஒரு வகை வணக்கம்தான் . திக்ரு எனபது திருக்குர் ஆன் ஓதுதல், தொழுகை, நோன்பு , ஜக்காத்து ஹஜ் [வசதி உள்ளவர்கள், உடல் சக்தி உள்ளவர்கள்] அல்லாஹ்வைப் பற்றி பிறருக்கு சொல்லுவது, அல்லாஹ்வைப் பற்றி பேசுவது  , நன்மையான காரியங்களை ஏவுதல் , இன்னும் இதுப் போன்ற  நிறைய விஷயங்கள் தான் திக்ரு அல்லாஹ்வை நினைவு கூறுதல் என்று பொருள் கொள்ளலாம். மேலும் மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுவதை விட்டும்  நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஹிதாயத் என்றால் என்ன ?

''ஹிதாயத் '' என்பது உள்ளத்தில் உண்டாகும் ஒரு வெளிச்சத்திற்குக் கூறப்படும்  . அந்த வெளிச்சம் இருந்தால்தான் அல்லாஹ்வின் பயமும் மறுமையின் சிந்தனையும் உண்டாகி மரணத்திற்குப் பின்னுள்ள  வாழ்க்கைக்கு வேண்டிய சாதனங்களைத் தேடுவதற்கு ஆர்வமுண்டாக்கும்.

''ஹிதாயத்' என்ற செல்வம் இவ்வுலகிலுள்ள அனைத்துச் செல்வங்களைவிட மிகவும் உயர்ந்த செல்வம்  .  ''யார் நம்முடைய பாதையில் முயற்ச்சி செய்வார்களோ அவர்களுக்கு நாம் ஹிதாயத்[ என்னும் பேரொளியைக்] தைக் கொடுப்போம்'' என்பது குர் ஆனின் கட்டளை.
அல்லாஹ் மிக அறிந்தவன்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!