அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஜூன் 15, 2014

நபி [ஸல்] அவர்களின் பொன்மொழிகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !

அண்ணல் நபி [ஸல்] அவர்களின் பொன்மொழிகள் , அவைகளை நாம் அறிந்துக் கொண்டு நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் . இந்த சமுதாயம் எப்படி ஆரம்பம்மானது ?


''இந்த சமுதாயத்தின் சீர்திருத்தம் யகீன் [இறையச்சம்] மற்றும் உலகப் பற்றற்ற தன்மையைக் கொண்டு ஆரம்பமானது . இந்த சமுதாயத்தின் சீரழிவு , கருமித்தனம் , உலக பேராசைகளைக் கொண்டு ஆரம்பமாகும்'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ்ஹிப்னு அம்ரிப்னுல் ஆஸ் [ரலி] அவர்களின் பேரனார் ஹஜ்ரத் அம்ருப்னு ஷூஜப் [ரஹ் ] தன் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்.


பைஹகீ ]


''நீங்கள் அல்லாஹ்வின் மீது முறையாக [தவக்குல்] பரஞ்சாட்டுவீர்களாயின் அல்லாஹ் பறவைகளுடைய [ரிஸ்க்] தேவையை நிறைவேற்றுவது போல் , உங்களுடைய தேவையை நிறைவேற்றுவான், அப்பறவைகள் அதிகாலையில் பசித்த நிலையில் வெளியேறுகின்றன, மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னுகத்தாப் [ரலி] அறிவிக்கிறார்கள்.
[திர்மிதி]


''ஒரு நாள் நபி [ஸல்] அவர்களின் சபையில் சஹாபாக்கள் உலகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் , ''நன்றாகக் கேளுங்கள்! கவனமாகக் கேளுங்கள்! நிச்சயமாக எளிமை ஈமானின் ஒரு பகுதி , நிச்சயமாக எளிமை ஈமானின் ஒரு பகுதி '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஉமாமா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூதாவூத் ]

தெளிவுரை..- தன் வாழ்க்கையில் பகட்டையும், அலங்கார, ஆடம்பரத்தையும் விட்டு விட்டு சிரமமான கடினமான வாழ்க்கையை மேற்கொள்வதால் காய்ந்து விடுவது என்பதாம், தகஹ்ஹூல் என்பது பசுமையான பொருள் காய்ந்து சருகாக ஆகுவதற்கு சொல்லப்படும். [பத்லுல் மஜ்ஹூத்]


[உலகம் பசுமையானதாகவும் , செழிப்பானதாகவும் உள்ளது அது ஒரு நாள் காய்ந்து சருகாக ஆகிவிடும். ]


''துணிகள் பழையதாவது போல உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி [பலவீனமடைந்து] விடுகிறது , எனவே உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானைப்  புதுபிக்க அல்லாஹ்விடம் துஆச் செய்து வாருங்கள்'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாகஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ்  [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்தத்ரக் ஹாகிம் ]

''எனது சமுதாய மக்களின் உள்ளங்களில் ஈமானுக்குப் புறம்பாகவும் பாவங்கள் பற்றியும் ஏற்படும் ஊசலாட்டங்களைப்  அல்லாஹுதஆலா மன்னித்துவிடுவான், அந்த ஊசலாட்டங்களைப் பற்றிப் பேசாமலும் அதனைச் செயல்படுத்தாமலும் இருக்கும்வரை!'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரீ]

அல்லாஹ் மிக அறிந்தவன்
ஈமான் என்ற பகுதி 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!