அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், ஜூன் 19, 2014

மறைவானவற்றை நம்புதல்

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக!


அல்லாஹ்வின் மீதும் மறைவான அனைத்துக் காரியங்களின் மீதும் ஈமான் கொள்வது, ஹஜ்ரத் முஹம்மது [ஸல்] அவர்களது ஒவ்வொரு செய்தியையும் அன்னாரின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் ஏற்றுக்கொள்வது , அவர்களது சொல்லுக்கு புறம்பாக உள்ள அழியும் இன்பங்களையும் கண்ணால் காணும் காட்சிகளையும் , உலக அனுபவங்கள் அனைத்தையும் விட்டுவிடுவது.

அல்லாஹ் , அவனது உயர் பண்புகள், அவனது தூதர் மற்றும் விதியின் மீது நம்பிக்கை கொள்வது.

 மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது செய்துள்ள அருட்கொடையை நினைத்துப்பாருங்கள் ,, அல்லாஹ் அல்லாத [வேறு] படைக்கிறவன் உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்து உணவளிக்கிரானா? அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, எனவே எவ்வாறு நீங்கள்  [அவனை விட்டுத்] திருப்பப்படுகிறீர்கள் ?
[அல்குர் ஆன் ]


மேலும் நீங்கள் பருகுகிறீர்களே அத்தண்ணீரை நீங்கள் கவனித்தீர்களா? அதை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகிறீர்களா ? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால் அதை [க் குடிக்க முடியாத படி] உவர்ப்பாக நாம் ஆக்கிவிடுவோம். எனவே  [இதற்காக] நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? நீங்கள் மூட்டுகின்ற நெருப்பைக் கவனித்தீர்களா? அதனுடைய மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டாக்குகிறோமா ?
[அல்குர் ஆன் ]

வானத்திலும் சரி, பூமியிலும் சரி நிறைய மறைவான விஷயங்கள் இருக்கின்றன. நம்மில் சிலர்கள் இருக்கிறார்கள் பெயரளவில் முஸ்லிமாக இருந்துக் கொண்டு வருகிறார்கள் , அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைய வேண்டும் , அல்லாஹ்வை பரிபூரணமாக நம்ப வேண்டும். எதிலும் குறைப் பாடுகள் வைக்ககூடாது. [பொதுவானக் கருத்து]

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே [அல்லாஹ் ] இருக்கின்றன,, அவற்றை அவனைத் தவிர [வேறு எவரும்] அறியமாட்டார்,, இன்னும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான்,, ஓர் இலை கூட-அதனை அவன் அறியாமல் உதிர்வதில்லை - பூமியின் இருள்களிலுள்ள எந்த விதையும் எந்தப் பசுமையானதும், எந்தக் காய்ந்ததும் [அவனுடைய] தெளிவான பதிவேட்டில் [லவ்ஹுல் மஹ் ஃபூளில் ] இல்லாமலில்லை.
[அல்குர் ஆன்]

நபியே!] நீர் கூறுவீராக ,  'அல்லாஹ்  எதை விதித்துள்ளானோ அதைத் தவிர [வேறொன்றும்] எங்களுக்கு உறுதியாக ஏற்படாது,, அவன் [ தான்] எங்களுடைய பாதுகாவலன் '' நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
அல்குர் ஆன்]

இந்த வசனத்தை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். இன்று பரவலாக முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய  பல கஷ்ட்டங்கள் , துன்பங்கள் , இன்னல்கள் ஆகியவைகள்  அல்லாஹ்வைக் கொண்டுதான் என்பதை நாம் நம்ப வேண்டும். நமக்கு அல்லாஹ்தான் பாதுகாவலன்! அல்லாஹ் நம் ஈமானை சோதிப்பதற்காக இதுவும் ஒரு வகை பரிச்சையாகவும் இருக்கலாம் . அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஹஜ்ரத் ஜிப்ரயீல் [அலை] அவர்கள் நபி [ஸல்]  அவர்களிடம் ,  ''ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார்கள் , ''அல்லாஹூதஆலாவின் மீதும் , மறுமை நாள் மீதும்  , மலக்குகள் மீதும், அல்லாஹ்வின் வேதங்கள் மீதும், நபிமார்கள் மீதும் நீர் [ஈமான்] நம்பிக்கை கொள்வது. இறப்பின் மீதும், இறந்தபின் மீண்டும் எழுப்பப்படுவத்தின் மீதும்  நம்பிக்கை கொள்வது! சொர்க்கம் , நரகம் , கேள்வி கணக்கு இன்னும் அமல்களை எடைபோடும் தராசின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், நல்லவை, தீயவை யாவும் விதிக் கொண்டு ஏற்படும் என்பதன் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்!''  என்று நபி [ஸல்[ அவர்கள் கூறினார்கள், சொல்லப்பட்ட அனைத்து காரியங்களின் மீதும் நம்பிக்கை கொள்வதால் நான் ஈமான் உடையவனாக ஆகிவிடுவேனா?'' என்று ஹஜ்ரத் ஜிப்ரயீல் [அலை] அவர்கள் கேட்க ,  ''இவைகளின் மீது நம்பிக்கை கொள்வீரானால் நீர் ஈமான் உடையவராக ஆகிவிடுவீர்!'' என நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு  அப்பாஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்னத் அஹ்மத் ]

அல்லாஹ்வின் மீதும் , கியாமத் நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட நிலையில் எவர் மரணிக்கிறாரோ , அவரிடம்  ''சொர்க்கத்தில் எட்டு வாசல்களில் நீர் விரும்பும் வாசல் வழியாகச் சொர்க்கம் செல்லலாம்!'' என்று சொல்லப்படும் '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உமரிப்னுகத்தாப் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
[முஸ்னத் அஹ்மத்]

''அல்லாஹ்வின் மகத்துவத்தை உங்களுடைய உள்ளங்களில் பதியவையுங்கள் , அல்லாஹ் உங்களை மன்னிப்பான்!'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
[முஸ்னத் அஹ்மத்]

''நீங்கள் செலவு செய்யுங்கள் , நான் உங்களுக்கு தருகிறேன்!' என்று அல்லாஹூதஆலா கூறுவதாக நபி [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள், மேலும் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ,  ''அல்லாஹூதஆலாவின் திருக்கரம் [அவனது கருவூலம்] நிரம்பியுள்ளது, இரவு  பகலாகத் தொடர்ந்து செலவு செய்வது அக்கருவூலத்தைக் குறைய வைக்க முடியாது. அவன் வானம் , பூமியைப் படைத்ததிலிருந்து [அதற்கு முன்பு] அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்த காலத்திலிருந்து  செலவு செய்து வருகிறான். [அவ்வாற்றிருந்தும்] அவனது பொக்கிஷத்தில் ஏதும் குறையவில்லை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? '' மக்களை தாழ்த்த, உயர்த்தக் கூடிய நீதி என்னும் துலாக்கோல் [தராசு] அவனிடமே உள்ளது என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரீ]

''ஆதமுடைய மகன் காலத்தைச் சபித்து என்னைத் துன்புறுத்துகிறான், ஆனால்  நான் தான் காலம், என் கட்டுப்பாட்டில் தான் செயல்கள் அனைத்தும் உள்ளன, என் விருப்பப்படி இரவு , பகலை மாறி, மாறி வரச் செய்கிறேன்'' என்று அல்லாஹூதஆலா கூறியதாக நபி [ஸல்] அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரீ]

''அல்லாஹூதஆலாவுக்கு மாறு செய்பவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கும் தண்டனைகளை ஒரு முஃமின் சரியாகத் தெரிந்து கொண்டால், எவருக்கும் சொர்க்கம் கிடைக்காதோ என்று கருதுவான். மேலும் அல்லாஹூத  ஆலாவின் [ரஹ்மத்] அருளைப் பற்றி ஒரு காஃபிர் சரியாகத் தெரிந்துகொண்டால், எவரும் சுவனம் கிடைப்பதை விட்டும் நிராசை கொள்ளமாட்டான்'' [நம்பிக்கை இழக்கமாட்டான்] என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம்]

அல்லாஹ்வின் நல்லடியார்கள்! அல்லாஹ்வின் மீது ஒருபோதும் நிராசை ஆக வேண்டாம் , அல்லாஹ் எல்லாப் பாவத்தையும் மன்னிப்பான் , அவன் நாடியவர்களுக்கு  இணை வைப்பதை தவிர       . ஒரு முஸ்லீம்க்கு உறுதியான நம்பிக்கையும்  , இறையச்சமும் இருக்க வேண்டும். ஆதரவுக்கும் பயத்துக்கும் மத்தியில் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் ரஹ்மத் மீது நம்பிக்கை இழக்க கூடாது.

அல்லாஹ் மிக அறிந்தவன்
ஈமான்
கண்ணியமிக்க ரமலான் வருகிறது  ... அதிகம் அதிகம் துஆச் செய்வோம் ! அல்லாஹ்வை நெருங்குவோம் ....... அல்லாஹ் நமக்கு தௌபீக் செய்வானாக....ஆமீன்......
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!