செவ்வாய், ஜூன் 03, 2014

இந்தியாவில்.. நாம் ஈமான் உறுதியுடன் இருப்போம்

  இந்தியாவில்..நாம் ஈமான் உறுதியுடன் இருப்போம்! அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்..

உங்களுக்கு முன்னே சென்று போன வர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை  [வறுமை, பிணி  போன்ற] கஷட்டங்களும் துன்பங்களும் பீடித்தன ,,  ''அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ,,  ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது'' [என்று நாம் ஆறுதல் கூறினோம்]
அல்குர் ஆன் .. 2.214]

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்..

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள் ,, மேலும், [அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட] முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.                [அல்குர் ஆன் .. 3.102]


இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்,, நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்,, 
அல்குர் ஆன் .. 3.103]

அந்த [மறுமை] நாளில் சில முகங்கள் [மகிழ்ச்சியினால் பிரகாசமாய்] வெண்மையாகவும், சில முகங்கள் [துக்கத்தால்] கருத்தும் இருக்கும்,, கருத்த முகங்களுடையோரைப் பார்த்து.. ''நீங்கள் ஈமான் கொண்டபின் [நிராகரித்து] காஃபிர்களாகி விட்டீர்களா? ]அப்படியானால்] நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்'' [என்று கூறப்படும்]

எவருடைய முகங்கள் [மகிழ்ச்சியினால் பிரகாசமாய்] வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்,, அவர்கள் என்றென்றும் அ [ந்த ரஹமத்]திலேயே தங்கி விடுவார்கள்.
[அல்குர் ஆன் .. 3.106,107]

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்,, நல்லதை [ச் செய்ய] ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள் . மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்,, இவர்களே சாலிஹான [நல்லடியார்களில்] நின்றுமுள்ளவர்கள்.
அல்குர் ஆன்.3.114]

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங் [கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்]களைத் தவிர [வேறெவரையும்] உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்,, ஏனெனில் [பிறர்] உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய  மாட்டார்கள்,, நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்,, அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்து வெளியாகிவிட்டது,, அவர்கள் நெஞ்சங்கள்  மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்,, நிச்சயமாக நாம் [இது பற்றிய] ஆயத்களைத்  தெளிவு படுத்திவிட்டோம்,, நீங்கள் உணர்வுடையோரானால் [இதை அறிந்து கொள்வீர்கள்] 
அல்குர் ஆன். 3.118]

எனவே  நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள் ,, கவலையும் கொள்ளாதீர்கள்,, நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம்  உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
அல்குர் ஆன். 3.139]

மேலும்,  ''எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக!  காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக'' என்பதைத் தவிர [இம்மாதரி சந்தர்ப்பங்களில்] அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
அல்குர் ஆன் .. 3.147]

மார்க்கமென்பது பிறர் நலம் நாடுவதாகும் என நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்  ..
ஆதாரம்.. முஸ்லிம்] 

பிரார்த்தனை வணக்கத்தின் சாரமாகும் என நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்  .
ஆதாரம். திர்மிதி]

நிதானம் இறைவனின் குணமாகும் . அவசரம் ஷைத்தானின் குணமாகும் என நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்.. திர்மிதி]

நிச்சயமாக அல்லாஹ் இந்த தீனை பாவியான மனிதனின் மூலம் பலப்படுத்துகிறான் என நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள் .
ஆதாரம் புகாரீ]

இன்று இந்தியாவில் சில இடங்களில் முஸ்லிம் மக்களுக்கு பல இடையூறுகள், இன்னல்கள், தொல்லைகள் , கவலைகள் தந்துக்கொண்டு இருக்கிறார்கள், நரபலி மோடி ஆட்சிக்கு வந்த பிறகு. சமீபத்தில் தமிழ் நாட்டில் உள்ள ஓர் ஊரில் சில முஸ்லிம்  இளைஞ்சர்கள் வெட்டப்பட்டார்கள் . [அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கத்தை கொடுப்பானாக!]  இன்னும் சில நகரங்களில் சுபுஹ் தொழுகை நேரத்தில்  அதான் சொல்லப்பட்டதை , சில பிஜேபி கயவர்கள் , [கலவரகாரர்கள்] அதான் ஒளிப் பெருக்கி மூலம் சொல்லக் கூடாது என்று பிரச்சனைச் செய்கிறார்கள். நமக்கு தெரியாமல் இன்னும் நிறைய இடங்களில் முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. [அல்லாஹ் நமக்கு போதுமானவன்] 

அல்லாஹ்வின் உதவிக் கொண்டு இந்த கட்டுரையில் மேல் சில குர் ஆன் வசனத்தை  தந்துள்ளேன். சில ஹதீசிகளும் தந்துள்ளேன். இவைகள் நமக்கு பாடமும் , படிப்பினையும் தரும் எனபது மட்டும் அன்றி , ஈமான் உறுதி , இன்னும்  நம் உள்ளத்தில் இறையச்சம் அதிகரிக்கும் என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து  இந்த சிறிய கட்டுரையை எழுதி உள்ளேன்.

இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கிறது , பயங்கரவாதத்தை சொல்கிறது என்று  சிலர் தவறான பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். இருப்பினும்  இஸ்லாம் மேலும் மேலும் வளந்துக் கொண்டுதான் இருக்கும் , அதை யாராலும் வாயால ஊதி அணைக்க முடியாது  . அது அல்லாஹ்வின் பேரொளி ! அல்லாஹ்வின் உதவிக் கொண்டும் அவன் நாட்டப்படி  இஸ்லாத்தை நோக்கி இன்னும் அதிகம் அதிகம் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்  ,இன்ஷாஅல்லாஹ்  இன்னும் வருவார்கள் . இஸ்லாத்தின் மீது தவறான பிரச்சாரம் , பொய்யான  செய்திகள் இவைகளை  அறிந்தும் சில மக்கள்கள் அப்படி என்னதான் இருக்கிறது  இந்த இஸ்லாம் மார்க்கத்தில் என்று ஆராய தொடங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இஸ்லாம் மார்க்கம் ஒரு அற்புதமான புதையல் என்று சிலர்  வர்ணித்துக் கூறுகிறார்கள் . இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும், முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் கூட  அதில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.  அல்ஹம்துலில்லாஹ்!

இந்தியாவில் ஒரு அநியாயக்காரரிடம் அல்லாஹ் ஆட்சி கொடுத்து இருக்கிறான் என்றால்  , நிச்சயமாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு இன்னும் ஈமானை உறுதிப் படுத்தவும் , இஸ்லாத்தில் இன்னும் பற்று அதிகமாக  இருக்கவும் , இந்த சத்தியமான மார்க்கத்தை [இஸ்லாத்தை] பிறருக்கு எத்தி வைக்க வேண்டும் என்று  அல்லாஹ்வின் நாட்டம் இருக்கலாம்.

இன்ஷாஅல்லாஹ் நாம் ஒற்றுமையாக இருந்து , இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும்  . மற்றவர்களுக்கு நாம் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். 

அல்லாஹ்வின் நாட்டப்படி நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தால் , அல்லது சிரமமம் வந்தால் அல்லாஹ்வுக்காக சகித்து போக வேண்டும்.  பிஜேபி மூலமாக  அல்லது rss மூலமாக நமக்கு ஏதாவது இன்னல்கள் வந்தால் , தொல்லைகள் வந்தால் , நிதானமாக செயல்படுவோம் , அவசரம் காட்ட வேண்டாம் . அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்  , ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். 

நம்மில் சிலர் ஈமானின் பலவீனமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களுக்கு  அல்லாஹ் ஈமானின் உறுதியை தர வேண்டும்! 

பத்ரு போர் சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம் . அதில் சில விஷயங்களை  இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன்.. 

அல்லாஹ்வின் தூதர் நபி [ஸல்] அவர்கள் கூடாரத்தில் இருந்து , அவர்கள் அல்லாஹ்விடம்  சஜ்தாவில் அழுதவாறு உதவிக் கோரினார்கள் . செய்ய வேண்டிய அனைத்து முயற்ச்சிகளையும் செய்து விட்டு  , பிறகு அல்லாஹ்விடம் உதவி கோரினார்கள். இதுவும் நமக்கு ஒரு அழகான வழிமுறை!

நபி [ஸல்] சற்று தலையைத் தாழ்த்தி . பின்பு உயர்த்தி  ''அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். இதோ ....ஜிப்ரீல் புளுதிகளுடன் காட்சியளிக்கிறார்'' அல்லது  ''அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள் . அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு  .இதோ ..ஜிப்ரீல் குதிரையின் கடிவாளத்தை இழுத்து வருகிறார். அவர் உடம்பில் புழுதி படிந்திருக்கிறது'' என்று கூறினார்கள் .

கவச ஆடை அணிந்து நபி [ஸல்] தங்களது கூடாரத்திலிருந்து வெளியேறி.

அதிசீகிரத்தில் இக்கூட்டம் தோற்கடிக்கப்படுவார்கள், [பிறகு] புறங்காட்டி ஓடுவார்கள்.                [அல்குர் ஆன் 54..45]

இந்த பத்ரு போரில் நிறைய படிப்பினைகளும் , பாடமும் நமக்கு இருக்கிறது.

மக்கத்துக் குறைஷிகள் ஈமான் கொண்டக் காரணத்திற்காக அவர்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக , சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.

செல்வமும் செல்வக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று  ''உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி  விடுவேன்'' என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான்.

உஸ்மான் [ரலி] அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்த்ங்ககீற்றுப்  பாயில் சுருட்டி வைத்து அதற்க்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர் .

தனது  மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்து முஸ் அப் இப்னு உமைர் [ரலி] அவர்களின்    தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி , பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது.

ஹஜ்ரத் பிலால் [ரலி] அவர்கள் ஈமான் கொண்ட பின் நிறைய வேதனைகள் அனுபவித்தார்கள்.
இப்படியே நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்............................

இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு அல்லாஹ் ஈமான் உறுதியும், இறையச்சமும்  தந்தருள்வானாக! ஆமீன்..........

அல்லாஹ் மிக அறிந்தவன் 
அநியாயக்காரர்கள் யார் என்ற லேபல் .
இது உங்கள் சத்திய பாதைஇஸ்லாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!