புதன், ஜூன் 04, 2014

மன்னிக்க முடியாத குற்றம்

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்..

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கமாட்டான்.  அது அல்லாதவ்ற்றைத் தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்துவிட்டார் .                                        [அல்குர் ஆன் ]



நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கமாட்டான்.'' என்று கூறுகின்றது. அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த நிலையில் மறுமையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியானின் பாவத்தையும் அவன் மன்னிக்கமாட்டான்.


''[எனினும்] அது அல்லாதவற்றைத் தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான்'' என அடுத்த தொடர் கூறுகின்றது . அதாவது இணை கற்பித்தல் அல்லாத பிற பாவங்களைத் தான் நாடிய அடியார்களுக்கு அல்லாஹ் மன்னிப்பான். இந்த வசனத்தின் கருத்தை வலியுறுத்தும் வகையில் பல நபிமொழிகள் வந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. அநீதி மூன்று வகைப்படும். அவற்றில் ஓர் அநீதியை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான். மற்றோர் அநீதியை அல்லாஹ் மன்னிப்பான். மூன்றாவது அநீதி யில் சிறிதளவுகூட அல்லாஹ் விட்டு வைக்கமாட்டான். அல்லாஹ் மன்னிக்காத அநீதி என்பது அவனுக்கு இணை கற்பிப்பதாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்.. இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும் . [31.13]

அல்லாஹ் மன்னிக்கின்ற அநீதியானது . அடியார்கள் தம் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தமக்குத் தாமே அநீதி இழைப்பதாகும். அல்லாஹ் விட்டுவைக்காத அநீதியானது . மனிதர்களில் சிலர் வேறு சிலருக்கு இழைக்கும் அநீதியாகும். ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கணக்குத் தீர்க்காத வரை அல்லாஹ் விட மாட்டான்.

அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்கள் , அழகாக ,தெளிவாகவும் அநீதிகள் மூன்று வகையாகப் பிரித்துக் காட்டியுள்ளார்கள். ஓர் அநீதியை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான். இந்த அநீதி விஷயத்திலும் சில முஸ்லிம்கள் ரொம்ப கவனமாக இருக்கவும் . இரண்டாவது அநீதி என்பது அது அல்லாஹ் மன்னிப்பான். அந்த அநீதிதான் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல்  , தமக்கு தாமே அநீதி இழைத்தவர் என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். மூன்றாவது அநீதி என்பது ஒருவர் மற்றவருக்கு இழைக்கும் அநீதிதான்  . இந்த விஷயத்தில் பெரும்பாலும் முஸ்லிம்கள் போடுபோக்கியாக இருக்கிறார்கள் , இந்த உலகத்திலேயே அவர்கள் கணக்குத் தீர்க்க பார்க்க வேண்டும். மறுமையில் என்பது வேறுவிதமாக இருக்கும் . நன்மைகள் பிடுங்கப்படும்  , நன்மைகள் இல்லாவிட்டால் அநீதி இழைக்கப்பட்டவரிடம் இருந்து  பாவங்கள் கொடுக்கப்படும் . அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!

முஆவிய ா [ரலி] அவர்கள் கூறியதாவது..   ''எல்லாப் பாவங்களையுமே அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும்  . இறைமருப்பாலனாக இறந்தவன். அல்லது இறைநம்பிக்கையாலனைத் திட்டமிட்டுக் கொலை செய்தவனின் பாவத்தை தவிர!'' என அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அல்லாஹ்வுக்கு இணை கற்ப்பிக்கும் விஷயங்கள் எது எது என்று நாம் நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற தூய எண்ணத்துடன் செய்ய வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்



  

1 கருத்து:

Welcome to your comment!