அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஆகஸ்ட் 16, 2014

உணவின் வீண் விரயம்

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.


இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.

இன்று நாம் அன்றாடம் பார்க்கின்றோம் எதை உண்ணுவது, எதை பருகுவது என்று கூட தெரியாமல் சேற்றிலும், செதும்பிலும் வாழும் பிராணிகளைப் போன்று மனிதனும் உணவுகளை சாப்பிடத் துவங்கி விட்டான். நல்ல உணவா, கெட்ட உணவா, ஆகுமா, ஆகாதா? என்று கூட பார்க்காமல் அவன் பருகும் நிலை சில நேரங்களில் பார்ப்போரை முகம் சுளிக்கும் நிலைமைக்குக் கூடத் தள்ளி விடுகிறது. எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.

வீண் விரையம் என்பது நாம் பயன்படுத்தும் உணவினை யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு

வேண்டுமென்றே ரொட்டிகளை  அதிகப்படுத்தி உண்ண முடியாமல் கொட்டுவது என்பது வேறு.

இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும்) சிறிதை சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம்.

அபூதர்ரே ! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது இதிலிருந்து பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதி

வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்
அல்லாஹ் அந்த சகோதரர்க்கு அருள் புரிவானாக !
உணவின் வீண் விரயம்
இன்று சர்வசாதாரணமாக  உணவுகள் வீணடிக்கப்படுகிறது என்பது உண்மை. பழைய உணவுகளை தான் தர்மமாக கொடுப்பது வழக்கமாக இருப்பது என்பது உண்மை. கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மீதியை வைப்பது சிலர் நாகரிகமாக கருதுகிறார்கள் என்பது உண்மை. ஒரு நாள் உணவு இல்லாமல் பசியுடன் இருந்துப் பார்த்தால் தெரியும்  உண்மை. நிறைய திருமணங்களில் அதிகமாக வகையான உணவுகள்  பெருமைக்காகவும், ஆடாம்பரத்துக்காகவும் செய்கிறார்கள் என்பது உண்மை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!