அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

வானம், பூமியைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே...

அல்லாஹ்வின் திருபெயரால் ...........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக !

வானம், பூமியைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹூத ஆலா  எல்லாப் படைப்புகளின் விதியையும் எழுதிவிட்டான் . அப்பொழுது அல்லாஹுதஆலாவின் அர்ஷ் நீரின் மீது இருந்தது'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரிப்னு ஆஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்..முஸ்லிம்[


1ஒவ்வொருவருடைய மரண நேரம் , 2. ஒவ்வொருவருடைய செயல் [நல்லதோ அல்லது தீயதோ] , 3. ஒவ்வொருவரையும் புதைக்கப்படும் இடம்,4.ஒவ்வொருவருடைய வயது  5. ஒவ்வொருவருக்கும் கிடைக்க இருக்கும் உலக சாதனங்கள் ஆகிய ஐந்து காரியங்களை ஒவ்வொரு அடியானுக்கும் அல்லாஹுதஆலா எழுதி முடித்துவிட்டான் என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம், முஸ்னத் அஹ்மத் ] 


''நன்மை , தீமை யாவும் அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின் படியே நடக்கின்றன என்பதை நம்பிக்கை கொள்ளாதவரை எவரும் முஃமினாக ஆக முடியாது'' என்று ரசூலுல்லாஹி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு  அம்ருப்னு ஷூஜப் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்.. முஸ்  னத் அஹ்மத் ]

'' தாயின் கர்ப்பப்பையில் அல்லாஹுதஆலா ஒரு மலக்கை நியமித்துள்ளான். அவர், ''இரட்சகனே, இப்பொழுது இது விந்துவாக உள்ளது, இரட்சகனே , இப்போது இது இரத்தக் கட்டியாக உள்ளது, இரட்சகனே, இப்போது இது சதைக் கட்டியாக உள்ளது '' என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பார். [அல்லாஹுதஆலா வுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் அம்மலக்கு அவனிடம் குழந்தையின் பல்வேறு நிலைகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பார்.] அல்லாஹுதஆலா  அதைப் படைக்க நாடும்போது , அம்மலக்கு ''இந்த விந்து பற்றி, ஆண் என்று எழுதவா ? பெண்ணென்று எழுதவா? பாக்கியவான் என்று எழுதவா? அல்லது துர்பாக்கியவான்? என்று எழுதவா ? இவருக்கு கிடைக்க இருக்கும் உலகச் சாதனங்கள் [ரிஸ்க்] எவ்வளவு? எவ்வளவு காலம் உயிர் வாழ்வார் ? [எத்தனை வயது] ஆகிய அனைத்தும் அல்லாஹுதாலாவிடம் கேட்டு தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே எழுதப்பட்டுவிடும்!'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்,, புகாரீ]

''சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ, அதற்குரிய கூலியும் அதேபோன்று அதிகமாக இருக்கும் , ஒரு சமூகத்தாரை அல்லாஹுதஆலா நேசிக்க நாடிவிட்டால் அவர்களை சோதனைக்கு உள்ளாக்குகிறான் . அச்சோதனையைப் பொருந்திக் கொள்பவரை அல்ல்லஹுதாலாவும் பொருந்திக் கொள்கிறான்,  யார் அச்சோதனையை வெறுக்கிறார்களோ அல்லாஹுதாலவும்  அவரை வெறுக்கிறான்'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்,, திர்மிதீ ]

''ஒவ்வொரு காரியமும் தக்தீரில் [விதியில்] எழுதப்பட்டுவிட்டது, [மனிதன்] விளக்கமற்ற தன்மையும், இயலாத தன்மையும் , புத்திசாலித்தனமும், திறமை பெற்றிருப்பது உள்பட எல்லாம் விதிப்படியே நடைபெறுகின்றன'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதை ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்,, முஸ்லிம்[[

''பலம் வாய்ந்த முஃமின் பலவீனமான முஃமினைவிடச் சிறந்தவர்,,  அல்லாஹுதஆலா வுக்கு மிகப் பிரியமானவர் , எனினும் , ஒவ்வொரு முஃமினிடமும்  நன்மை இருக்கத்தான் செய்கிறது. உங்களுக்கு பலன் தரும் காரியத்தில் பேராசை கொள்ளுங்கள் , அதில் அல்லாஹுதஆலாவின் உதவியை தேடுங்கள்  , தைரியம் இழந்துவிடாதீர்கள் , உங்களுக்கு நஷ்டம் ஏற்படும் சமயம் , 'நான் இப்படிச் செய்திருந்தால் காரியங்கள் இப்படி ஆகியிருக்கும் !'' என்று சொல்லாதீர்கள் . மாறாக , அல்லாஹுதஆலாவின் விதியில் இப்படித் தான் இருந்தது,  அவன் நாடியதைச் செய்தான்'' என்று கூறுங்கள். ஏனெனில் , 'இப்படிச் செய்திருந்தால்' அல்லது இதுபோன்ற வார்த்தை ஷைத்தானுடைய காரியங்களுக்கு கதவைத் திறந்துவிடுகிறது'' என்று ரசூலுல்லாஹி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்.. முஸ்லிம்]]]]

தெளிவுரை..- ஒரு மனிதன் , ''நான் இவ்வாறு செய்திருந்தால் இப்படி இப்படியெல்லாம் ஆகியிருக்கும்'' என்று சொல்வது தக்தீர் [விதி] க்கு மாறானது, தக்தீருக்கு மாறாக தமது திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு தக்தீர் என்ற ஒன்று இல்லை  என எண்ணுவது இதன் நோக்கமாக இருந்தால் இவ்வாறான வார்த்தைகளை உபயோகிப்பது தடையாகும். ஏனெனில், இச்சந்தர்ப்பத்தில்  தக்தீரின் மீது அவன் கொண்டுள்ள நம்பிக்கையை அகற்றிவிட ஷைத்தானுக்கு வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது.
[மளாஹிர்ஹக் ]

அல்லாஹ் மிக அறிந்தவன்.
விதியின் பக்கம்......     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!