அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, அக்டோபர் 17, 2014

அல்லாஹ்விற்கு கடன் வழங்குங்கள் !

அல்லாஹ்விற்கு கடன் வழங்குங்கள் !


அல்லாஹ்வின் திருபெயரால் ........


''அல்லாஹ்வுக்கு அழகிய கடனளிப்பவர் யாருளர் ? [அவ்வாறாயின்] அல்லாஹ் அவருக்கு அதனைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொடுக்கிறான்.''
அல்குர் ஆன் 2..245]


அல்லாஹ்வுக்குக் கடனா!  அவனே அழகிய கடன் மனிதர்களிடம் கேட்கிறான் என்றால், வியப்பாக உள்ளதல்லவா? அவன் மாபெரும் கொடையாளி . அவனிடம் இல்லாததொன்றுமில்லை. அவன் கேட்பதெல்லாம் நல்லறத்தை நிலைநாட்டுவதற்காகத்தான்.

பிரதிபலன் பாராது தூய எண்ணத்துடன் அடியான் தர்மம் செய்வதை, அல்லாஹ் தனக்காக தன் அடியான் வழங்கும் அழகிய கடனாகக் கருதுகிறான் . இணையில்லா மார்க்கத்தை நிலைநாட்டவும் , முஸ்லிம்களைப் பாதுகாக்கவும், அறப்போர் செய்வதற்காகவும், பள்ளி வாயில்களை நிறுவுவதற்காகவும் ஏழை, எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் , அனாதைகளை ஆதரிப்பதற்காகவும் , மதரஸாக்களை , கல்விக் கூடங்களை அமைப்பதற்காகவும், ஏழைக் குமர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காகவும் , இது போன்ற நல்ல காரியங்கள் அனைத்திற்கும் செலவிடுதலே அல்லாஹ்வுக்குக் கொடுக்கப் படும் அழகிய கடனாகும். அத்தகைய மனித உள்ளங்களைக் காணும் அல்லாஹ் உவகைப் பூரிக்கிறான்.

கடனைத் திருப்பித் தர வேண்டியது கடமையல்லவா ? மனிதன் அவனுக்கு நன்றியைத் தெரிவிக்க மறந்துவிட்டாலும், அல்லாஹ் தனது நன்றிக் கடனை மனிதர்களுக்குத் தெரிவிக்கவே விரும்புகிறான் . அல்லாஹ்வின் வழியில் செலவழிப்பவரை  ஒரு வித்திற்கு உவமானமாகக் காட்டுகிறான் . ஒரு வித்து எழு கதிர்களை ஈன்றது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் விளைந்தன . ஒரு நல்ல காரியத்திற்கான அன்பளிப்பு 700 மடங்கு பெருக்கும் . இதுவே அல்லாஹ்வின் அளவற்ற கருணை. அவனுக்கு அழகிய கடன் வழங்கியோருக்கு அவர்தம் செல்வத்தைப் பன்மடங்காகப் பெருகச் செய்து, நன்றிக் கடனை நிறைவு செய்கிறான் . நாமும் அவனுக்கு அழகிய கடன் கொடுத்து அளப்பரிய நன்மைகளை அள்ளிக் கொள்வோம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!

இதுவே அழகிய கடன்
நன்றி நர்கிஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!