அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, அக்டோபர் 26, 2014

இன்னா செய்தாரை ஒறுத்தல் ............

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !


தன்னுடைய ஒரு கண் போனாலும் பரவாயில்லை , தன் எதிரிக்கு இருகண்களும் போக வேண்டும் என்கிற மனப்போக்குதான் பெரும்பான்மையான  மக்களிடம் காணப்படுகிற வன்மம், குரோதம், பழிவாங்குதல் போன்ற மனித நேயமற்ற குணங்கள் தான், மனித சமுதாயத்தை அழிவிற்கு ஆட்படுத்திக் கொண்டிருக்கிறது. மன்னிக்கக் கூடிய சிறந்த பண்பை மனிதன் மறந்தே விட்டான் என்று கூறக் கூடிய அளவிற்கு அவனது செயல்கள், இன்று மிருக நிலையில் இருந்துக் கொண்டிருக்கின்ற  ''பழிக்கு பழி , இரத்தத்திற்கு இரத்தம்' என்ற முழக்கங்கலையே எங்கும் கேட்க முடிகிறது. நன்மை செய்வோருக்கு நன்மை செய்வதும் , தீமை செய்வோருக்கு தீமை செய்வதும் உலக நியதியாக்கப்பட்டு விட்டதால் , உயர் குணநலன்களா ன  மன்னித்தல், பொறுத்தல் போன்றவைகளை மனிதகுலம் சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.தீமை செய்வோருக்கும் நன்மை எண்ண  முடியுமா? தீங்கிழைத்தோரை  மன்னிக்க முடியுமா என்று ஒரு கணம் நம்முடையை மனதை சிந்திக்கத் தூண்டினால், இஸ்லாமிய அறிவை பெற்றிருக்கும் ஒருவனின் பதில் ஆம் என்றே இருக்கும். ஏனெனில் இன்னாச் செய்தாரை ஒறுத்தல்  என்கிற இனிய மனிதநேய பண்பை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

திருமறை வசனங்கள் ..
'நன்மையும் , தீமையும் சமமாக மாட்டா . மிகச் சிறந்த நன்மையை கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக!  அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர் கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர். பொறுமை கொள்வோரைத் தவிர , வேறு எவருக்கும் இந்த குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும்பேறு, பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.
[திருக்குர் ஆன் 41..34]


''நீங்கள் அவர்களுடைய [மனைவி பிள்ளைகள்] செயல்களைச் சகித்துப் புறக்கணித்து விடுவீர்களேயானால் - மேலும் அவர்களை மன்னிப்பீர்களேயானால் , திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும் , கருணைமிக்கவனாகவும் இருக்கிறான்.''
[திருக்குர் ஆன் 64..14]

''[தவறு செய்பவர்களை] மன்னித்துவிட வேண்டும் . பொறுத்துக் கொள்ளவும் வேண்டும்  . இறைவன் உங்களை மன்னிக்க வேண்டுமென விரும்புவதில்லையா என்ன?
[திருக்குர் ஆன் 24..22 ]

எத்தகைய  உயர்ந்த இறைவசனங்கள் இவை . பெரும்பேறு பெற்றவர்களாகவும், இறைவனின் மன்னிப்பைப் பெறக் கூடியவர்களாகவும் இறைவனால் நற்செய்தி  சொல்லப்படுவது எத்துணை சிறந்த நற்பேறு என்பதை உணர்ந்து  கொண்டோமென்றால் பிறரை மன்னிப்பதன் மூலம் இச்சிறப்புகளை பெறமுடியுமென்றால் , மன்னித்தல் ஓர் உயர்ந்த, சிறந்த மனிதநேய பண்பு  என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இத்தகையதொரு உயர்ந்த படித்தரம் அனைவருக்கும் நிச்சயம் சாத்தியமில்லை. ஆயினும் பழிவாங்கக் கூடிய மனப்பான்மை உள்ளவனுக்கு இஸ்லாம் ஓர் எல்லையை வகுக்கிறது . எவ்வாறெனில் இறைவன் கூறுகின்றான்.

''நீங்கள் தண்டிக்கக் கருதினால், உங்கள் மீது எந்த அளவிற்கு அக்கிரமம் புரியப்பட்டதோ, அதே  அளவிற்குத் தண்டியுங்கள். ஆயினும் நீங்கள் பொறுமையாக இருப்பீர்களாயினும் , திண்ணமாக இதுவே பொறுமையைக் கடைபிடிப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகும் .''
திருக்குர் ஆன்  16..126]

இஸ்லாமிய நீதி உயர்நீதியாக இருப்பினும், நடுநிலைப் பிறழா நீதியாக இருப்பினும், அந்நீதிக்கு மேலாக இறைவன் பொறுத்துக் கொள்ளக் கூடிய பண்பை வலியுறுத்துகின்றான் என்றால், அதற்கு முழுமுதற் காரணம் இறைவன் உயர்வாக விரும்பும் மனிதநேய பண்பேயாகும் .

அண்ணல்  நபி [ஸல்] அவர்களின் பொன் மொழிகளையும் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

''[தண்டிக்கும்] சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்.''
[நூல் -பைஹகி ]

''ஒரு நாளைக்கு எழுபது முறை பணியாட்களை மன்னியுங்கள்.''
நூல்- அபூதாவூத் , திர்மிதி]

இன்ஷாஅல்லாஹ்  தொடரும் ...........   இதை தொடர்ந்து படியுங்கள் , மற்றவர்களுக்கும்  பகீர் செய்யுங்கள் ! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
நன்றி ..நர்கிஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!