அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

செவ்வாய், நவம்பர் 18, 2014

இரட்டை வேடம் வேண்டாம் ! [தொடர்ச்சி...]

அல்லாஹ்வின் திருபெயரால் .....


முஸ்லிம்களுக்கும், ஹவாஜின் கூட்டத்தினருக்குமிடையில் நடந்த ஒரு தற்காப்புப் போரில், முஸ்லிம்கள் வெற்றி பெற்று , அவர்களது கைக்கு ஏராளமான ஓட்டகைகளும் மற்ற சொத்துக்களும் வந்து சேர்ந்தன. நபிகளார் குறைஷிகளில் அப்பொழுதான் இஸ்லாத்தில் வந்து இணைந்தவருக்கு ஏராளமான ஒட்டகைகள் அன்பளிப்புச் செய்தனர். யுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றி கிடைக்கக் காரணமாயிருந்த அன்சாரி தோழர்களில் சிலர் இச்செய்தியை அறிந்து வருத்தப்பட்டு , 'அல்லாஹ்தான் தனது ரசூலை மன்னிக்க வேண்டும் . யார், யாருக்கோ கனீமத்தை  அள்ளி வழங்கும் நபிகள் , போர்க்களத்தில் எங்களது வால்களில் வெற்றிக் கனி ஈட்டித் தந்த எங்களை வெறுமனமே விட்டிருகின்றார்கள்......' என்று ஆதங்கம்ப்பட்டார்கள்.


பெருமானாருக்கு இச்செய்தி எட்டியதும், அந்தக் குறிப்பிட்ட அன்சாரிகளை மட்டும் அழைத்து ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டினார்கள். தாம் கேட்ட செய்தி உண்மை தானா? என்பதை முதலில் விசாரிக்கின்றார்கள்.

அன்சாரிகளில் அறிவிலும் , அனுபவத்திலும் நன்கு பழுத்த அறிஞர்கள் , 'உண்மை தான் நாயகமே  எங்களில் இளைஞ்சர்கள் , தமது இளைமைத் துடிப்பால் அவ்வாறெல்லாம் பேசி விட்டார்கள்....' என்று உண்மையை மறைக்காமல் ஒத்துக் கொள்கிறார்கள் . பெருமானார் [ஸல்] அவர்கள் சொன்னார்கள்.. நண்பர்களே! - நம்மில் இஸ்லாத்தைத் தழுவியவருக்கு, அவர்களது மனம் ஒரு நிலைப்படவே நான் அவர்களுக்கு கனீமத்தை வாரிக் கொடுத்தேன். அவர்கள் தமது இல்லங்களுக்கு இப்படிப்பட்ட செல்வங்களைத் தான் கொண்டு செல்கின்றார்கள். நீங்களோ, உங்களது இருப்பிடங்களுக்கு உங்களது உயிருக்குயிரான நபியையே கொண்டு செல்கின்றீர்களே.... இது உங்களுக்கு திருப்தியைத் தரவில்லையா.....? என்று கேட்கிறார்கள். மனம் தெளிந்த நண்பர்கள் ,  'ஆம் நாயகமே! எங்களுக்கு எங்கள் நபிதான் முக்கியம் ....' என்று கூறி, உண்மையை உவகையுடன் ஏற்கிறார்கள்.

பெருமானாரின் இந்த அணுகு முறை நடைமுறையில் கடைபிடிக்க வேண்டிய ஒன்று . மனம் அலை பாய்ந்த வண்ணமிருக்கம் புது முஸ்லிம் களையும் திருப்திபடுத்தி, ஒரு சாராரை திருப்திபடுத்த முனைந்து , மறுசாரார் வெறுப்புற்று விடாதவாறு அவர்களையும் நாசுக்காக அமைதிப்படுத்தி, மனித சமுதாத்துக்கு மிகப் பெரும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள்.

ஹஜ்ரத் சஃது  பின் முஆது [ரலி] அவர்கள் தீரப் பிரச்சனைகளையும் , தீட்சன்யத்துடன் தீர்த்து வைத்திடும் சீரிய சிந்தனையாளர். அஹ்ஜாப் -போரில் காயம் பட்டிருந்த அவர்,  ஒரு கோவேறு கழுதையில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய வருகையைக் கண்ட நாயகம்[ஸல்] அவர்கள் , அன்சாரிகளை நோக்கி,  'உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்!  எனப் பணிக்கிறார்கள். உடல் சோர்வுடன் திரும்பிய அந்நண்பருக்கு  பெருமானாரின் இந்த உபசரிப்பு மிகவும் உற்சாகமாக அமைந்தது. தமக்குக் கூட தமது நண்பர்கள் எழுந்து நிற்பதை விரும்பாத நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள், தமது நண்பர் களுக்கு எழுந்து நிற்கப் பணிக்கிறார்கள் என்றால், நம்மைச் சூழ உள்ளோரின் உணர்வுகளைப் புரிந்து மதித்து, எவரின் மனமும் சஞ்ச்சலமடையாது நடந்து கொள்ள வேண்டுமென்பதைத்தான்  பெருமானார் நமக்கு உணர்த்துகிறார்கள்.

அதே சமயம் எல்லா தரப்பினரிடத்திலும் நாசூக்காக நடக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் , பிள்ளையைக் கிள்ளிவிட்டு , தொட்டிலையும் ஆட்டி விடுவதை யும் பெருமானார் கண்டித்திருக்கின்றார்கள். 'கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை' என்ற பெயர் எடுத்துவிடும் வகையில், ஒருவரை முன்னால் வைத்துக் கொண்டு , சுய நலத்தினடிப்படையில் அவரை ஆகா! ஓகோ ! என்று புகழ்ந்து தள்ளிவிட்டு, அவரைப் போகவிட்டு விட்டு வசைமாரிபொழிவது கீழ்த்தரமான முறையாகும். அது இரட்டை வேடமாகும். இதைத்தான் அண்ணலாரின் அமுத மொழியும் சுட்டிக்காட்டுகிறது. இதை உணர்ந்து நாம் செயல்படுவோமாக!

அல்லாஹ் மிக அறிந்தவன் .
நன்றி நர்கிஸ்
அல்ஹாஜ் A . முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவீ.
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக......     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!