திங்கள், டிசம்பர் 29, 2014

நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம்


அல்லாஹ்வின் திருபெயரால் ........

இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். “அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்”.

லுஃக்மான் அவர்களின் சம்பவங்கள் நமக்கு நிறைய பாடமும் , படிப்பினையும் இருக்கிறது.நாம் தாம் தேவை உள்ளவர்கள் . அல்லாஹ் தேவையற்றவன் . நம்மில் சிலர் அல்லாஹ்வுக்கு நன்றி மறந்தவர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் . நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினால் அது நமக்குதான் . நன்றி செலுத்தாமல் இருந்தால் அல்லாஹ்வுக்கு எதுவும் ஆகபோகிறது இல்லை  என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். 

ஒருவர் யாருக்காவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உதவி செய்கிறார் . உதவி செய்யப்பட்டவர் , உதவி செய்தவரைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஏதாவது செய்கிறார் , அல்லது அவரைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார். மாறாக கண்டுக்கொள்ளாமல் அந்த நபர் போனால் என்றால் , நிச்சயமாக உதவி செய்தவர்  ''நன்றி கெட்டவன் போகிறான் என்று மற்றவர்களிடம் சொல்வார் . இது நடைமுறையில் உள்ளது . அல்லாஹ் நமக்கு கொடுத்துள்ள நிஃ க்குமத்துகளை எண்ணிப் பார்க்கவும் . கேட்க்காமலை நம்மை மனிதராக படைத்துள்ளான் , முஸ்லிமாக பிறக்க வைத்துள்ளான் , ஒரு சிறந்த சமுதாயமாக ஆக்கி வைத்துள்ளான் . இவைகள் எல்லாம் அல்லாஹ் நம் மீது அருளிய மிகப் பெரிய அருட்கொடைகள் என்றுதான் சொல்ல வேண்டும். 


31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).

லுஃக்மான் அவர்கள் தனுடைய புதல்வருக்கு அழகான முறையில் உபதேசம் செய்கிறார்கள் . அல்லாஹ் எல்லாப் பாவத்தையும் மன்னிப்பான் என்பது எல்லோருக்கும் தெரியும் . ஆனால் நம்மில் சிலர் அறியாமல் சில சில தவறுகளை செய்கிறார்கள் , அவர்களுக்கு அது இணையாக தெரிவில்லை புரியவில்லை. படைத்தவனிடம் கேட்கவேண்டிய எல்லா விஷயங்களையும் , சிலர் படைப்புகளிடம் கேட்கிறார்கள் , அல்லாஹ்வின் இறைநேசர்கள் அவர்களிடம் சில மக்கள்கள் கேட்கிறார்கள் . அவர்களுக்காக நேர்ச்சைச் செய்கிறார்கள் . இதுவும் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு வகை. இன்னொரு வகை இருக்கிறது . அது மறைமுகமான இணைவைப்பு . ஒருவர் தொழுகிறார் அந்த நேரத்தில் யாரோ ஒருவர் அங்கு வருகிறார். அப்பொழுது தொழும் நபர் அவர் மனதில் நினைக்கிறார் , '' நான் தொழுது கொண்டு இருக்கிறேன்  அவர் என்னைப் பார்க்கிறார் '' இன்னும் அழகான  முறையில் நீளமாக தொழுகிறார் . அவர் மனதில் எண்ணுகிறார் , இவர் ஒரு  பெரிய வணக்கசாலி என்று . இதில் இக்லாஸ் இல்லாமல்  ஆகிவிடுகிறது. இதுப்போன்று இன்னும் பல கடமைகளில் , தர்மம் , ஹஜ் , உம்ரா  போன்ற விடயங்களில் மறைமுகமான இணைவைப்பு சிலரிடம் இருக்கிறது.  அதற்க்கு பெயர் ரியா '' . முகஸ்தூதி , பெருமை , ரியா இவைகளை விட்டு அல்லாஹ்  நம்மை காப்பாற்ற வேண்டும்.


31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

அல்லாஹ்வுக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும் , பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று திருமறை கூறுகிறது.  பெற்றோர்களின் சிறப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் ...............

31:15. ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”

இன்ஷாஅல்லாஹ் 
இன்னும் தொடரும் 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!