சனி, டிசம்பர் 06, 2014

நாவினால் சுட்ட புண் !

அல்லாஹ்வின் திருபெயரால்.......

இது என்ன புதுவிதமான தலைப்பாக இருக்கிறதே? என யோசிக்கிரீகளா ? இப்போதுள்ள காலகட்டத்தில் இது அவசியமாகப் பின்பற்றக் கூடியதாகும்.  அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொரு செயலையும் ''இப்படித்தான் செய்திடல் வேண்டும் ' என்ற நெறியினை வகுத்துத் தந்துள்ளது நம் மார்க்கம் இஸ்லாம் . ஃபஜர்  தொழுகையினை நிறைவேற்றித் திரும்புபவர் ஈமானின் கொடியினை ஏந்தியவராக வருகிறார் எனவும், கடைவீதி சென்று விட்டுத் திரும்புபவர் ஷைத்தானின் கொடியினை பிடித்தவராக வருகிறார் என்றும் நாளின் துவக்கத்தினையே மிக அழகாகச் சுட்டிக் காண்பிக்கிறார்  கருணை நபி [ஸல்] அவர்கள். இப்படி ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் என முழுக்க முழுக்க ஒழுக்கத்தையே கற்றுத் தருகிறது இஸ்லாம். நமது பிள்ளைகள் இதனைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாகும் . இத்தகைய இஸ்லாம் காட்டும் நெறி முறையினை எங்கே கற்பது?  ஆண்பிள்ளைகளை பள்ளி விடுமுறை தினங்களில் ஜமாத்தில் அனுப்பி வைக்க வேண்டும். அதுதான் பயிற்சி தரும் பள்ளிக் கூடங்கள் . இஸ்லாமின் அனைத்து பயிற்சிகளும் தரப்படுகிறது .



மனித குலம் வாழ்வாங்கு வாழ வழி சொன்ன இஸ்லாம்  'இன் சொல்லின் சிறப்பை 'யும் அளவுடன் பேசுவதில் உள்ள நன்மையினையும் கூறியிருப்பதை இம்மடலில் தருகிறேன். மனித உறுப்புகளில் நாவு இருக்கிறதே மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய உறுப்பாகும். கடுஞ் சொல்லினை 'நாவினால் சுட்ட புண் ' என்கிறது தமிழ் நூல் .

ஒன்றுமே இல்லாத சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய கலவரத்திற்கு காரணமாகி விடுவது இந்தப் பாழாய் போன நாவின் அசைவினால்தான்! அண்ணல் நபி [ஸல்] அவர்களிடத்தில் ஸூ -ஃப்யான்     இப்னு அப்துல்லாஹ் [ரலி] அவர்கள் வந்து ,  ''நாயகமே! தாங்கள் எது பற்றி என் மீது அதிகமாக அச்சமுருகிறீர்கள் ? என கேட்டார் . தமது நாவைப் பிடித்து [சாடை செய்து]  ''இது பற்றி கவனமாக இரும்'' , என்று சொன்ன சம்பவத்தை சொல்கிறேன். தேவையற்ற கற்பனையான விஷயங்கள் குறித்து பேசி மகிழும் பழக்கத்தை சிலரிடம் காணலாம். தேவையற்ற பேச்சினைப் பேசும் நாக்கை விட்டும், உலோபித்தனம் செய்யத் தூண்டும் நப்சும் நமக்கு எத்தனை பெரிய தீங்கினைச் செய்து வருகிறது என்பதை உணர்த்தவே இந்நிகழ்வு!

சிலர் பேசும்போது நாவினை வெளிக் கொணர்ந்து மாடுகள்  நாவினை [வெளியே] தடவிக் கொள்வது போன்று சுழலவிட்டுப் பேசுவர் . இத்தகையோர் மீதும் அல்லாஹ்  கோபப்படுகிறான்  நபிமொழி. சந்தர்ப்பம் தெரியாமல் பேசப்படும் கேலி பேச்சுக்கள் பகைமையினை ஏற்படுத்தி விடக்கூடும்  . இவற்றினை விட்டும் உங்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்! அளவோடு பேசி நலமாக இருந்து கொள்!  ''இல்லை'' என்பதைக் கூட இன்முகத்துடன் சொல்லப் பழகு !

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி .. நர்கிஸ் 
எம் .சேக் அப்துல்லாஹ் - பெரியகுளம்.
அல்லாஹ் அவர்களுக்கு அருள்  புரிவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!