அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், ஜனவரி 08, 2015

காலத்தின் மீது சத்தியமாக

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் .......

காலம் பொன்போன்றது . போன நேரம் திரும்பாது என்று தமிழில் பழமொழி கூறுவார்கள்.   இஸ்லாத்தில் பொருள்களை , உணவுகளை வீண் விரயம் செய்யக் கூடாது, அதுபோன்றுதான் காலமும் . அந்த காலத்தை நாம் வீண் விரயம் செய்யக் கூடாது.  எப்படி காலத்தை வீண் விரயம் செய்வோம் என்பது ஒரு கேள்வி தோன்றும்.?  ஒரு திருமணத்தில் நாம் விருந்துக்கு சாப்பிடுவதற்காக அமர்வோம் . அப்பொழுது உணவு பரிமாறப்படும் . கொடுத்த உணவை நாம் சாப்பிட்டுவிட்டால் , மிச்சம் மீதி இல்லாமல் . அல்ஹம்துலில்லாஹ் !  கொடுத்த உணவை மிச்சம் வைத்து விட்டால் , அது விரயம் .  உண்ணுங்கள் , பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் . வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.  காலம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது . சிலருக்கு நீண்ட காலம் , இன்னும் சிலருக்கு குறைவான காலம்.  கொடுக்கப்பட்ட காலத்தை நாம் எப்படி கழிப்பது என்பது தான் ரொம்ப முக்கியம் .
அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகின்றான்..


காலத்தின் மீது சத்தியமாக . நிச்சயமாக மனிதன் நஷ்ட்டத்தில் இருக்கின்றான் .
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

நாம் எல்லோரும் ஈமான் கொண்டவர்கள் , இருப்பினும் நம்மில் சில பேர்கள் இருக்கிறார்கள் . பெயரளவில் முஸ்லிமாக இருக்கிறார்கள் , இல்லை என்று மறுக்க முடியாது.  இன்ஷாஅல்லாஹ்  நாம் தலைப்புக்குள் நுழைவோம் அதுதான் ரொம்ப முக்கியம். இன்றைய காலத்திற்கு ஏற்ப தலைப்பு என்று கருதுகிறோம் .  யாருக்கு எவ்வளவு காலம் கொடுக்கப்பட்டது என்று  யாரும் சொல்ல முடியாது , இருப்பினும் கொடுக்கப்பட்ட காலத்தை  அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் காட்டி தந்த வழியில் நம் காலத்தைக் கழிப்பது சிறந்ததும்  , புத்திசாலித்தனமும் கூட.  இந்த உலகத்தில் ஏதாவது ஒருவகையில்  நமக்கு நஷ்ட்டம் வந்தால் , பிறகு நாம் சரிசெய்து கொள்ளலாம்.  மறுமையில் நாம் நஷ்ட்டவாளிகளாக ஆகிவிட்டோம் என்றால்  என்ன செய்ய முடியும் ?  [அல்லாஹ் நம் அனைவரையும்  காப்பாற்றுவானாக!]   இன்று பெரும்பாலும்  முஸ்லிம்கள் எப்படி காலத்தை கழிக்கிறார்கள்  என்பது  அவசியம் சொல்லி ஆக வேண்டும்.  இன்று நிறைய பொழுபோக்கு சாதனங்கள் வந்துவிட்டன.   பெரும்பாலும் பெண்கள் அதிகமாக டிவி சீரியல் பார்க்கிறார்கள்  .. அதில் ரொம்ப விரும்பி பார்க்கக்கூடியவர்கள் வயதான பெண்கள்.  வாலிப பெண்கள் [திருமணம் ஆகாதவர்கள்]  அவர்கள் இந்த டிவி நிகழ்ச்சிகள்  [ஆட்டம் , பாட்டம் ,பாடல் சினிமா நிகழ்சிகள் இன்னும் பல]  பார்க்கிறார்கள் . வாலிப பெண்கள் [திருமணம் ஆனவர்கள்]  what 's  up  சாட்டிங் செய்வது அல்லது Facebook  அதில் நேரத்தைக் கழிப்பது . ஆண்கள்  கடைதெருவில் அரட்டை அடிப்பது  ,வீண் பேச்சில் நேரத்தைக் கழிப்பது என்று அவர்கள்  காலத்தை வீண் விரயம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  வாலிப பிள்ளைகள் இன்டர்நெட் , fecabook  என்று இப்படி இவர்கள் பொழுதைக் கழிக்கிறார்கள் . சிறு பிள்ளைகள்   [ விடுமுறை காலங்களிலும் சரி, ஸ்கூல் விட்டு வந்த பிறகும்  சரி] இவர்கள் கேம்ஸ் விளையாடுவது பொழுதுபோக்கு. இப்படி ஒவ்வொருவரும்  காலத்தைக் கழித்து வருகிறார்கள் . அல்லாஹ்வின் கடமைகளை   செய்வதும் , அண்ணல் நபி [ஸல்] அவர்கள்  சுன்னத்தை பின்பற்றுவதும்      மக்கள்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். எத்தனை முஸ்லிம்  குர்ஆனை தினமும் ஓதுகிறார்கள் .? எத்தனை முஸ்லிம் மஸ்ஜிதுக்கு போய்  ஜமாத்தில் சேர்ந்து தொழுகிறார்கள்.?  எத்தனை முஸ்லிம் சுன்னத்தை பேணுதலாக செய்கிறார்கள்.? பள்ளி பணிகள் செய்ய நேரம் இருக்கிறது. இன்டர்நெட் பார்க்க நேரம் இருக்கிறது  . facebook பார்க்க நேரம் இருக்கிறது. what 's up  ல்  பல மணி நேரம் chat பன்ன  நேரம் இருக்கிறது . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...  ஆனால் , குர் ஆன் ஓதுவதற்கு நேரம் இல்லை  . பள்ளிக்கு போய்  தொழுவதற்கு நேரம் இல்லை. மார்க்கத்தை கற்று கொள்வதற்கு நேரம் இல்லை. மறுமையைப் பற்றி  சிந்திப்பதற்கு நேரம் இல்லை. அல்லாஹ்வை நினைவுக் கூறுவதற்கு நேரம் இல்லை.  ஆனால் , உலக காரியத்திற்கு மட்டும் நேரம் இருக்கிறது. உலக காரியத்திற்காக நாம் நேரத்தை ஒதுக்கிகிறோம். அல்லாஹ்வுக்காக நாம் நேரத்தை ஒதுக்ககூடாதா.? நாம் தேவை உள்ளவர்கள் . அல்லாஹ் தேவையற்றவன்  என்பது நமக்கு புரியாதா .? இன்று நீங்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்லிவிடலாம்  . ஆனால் இந்த சாக்குபோக்கு அல்லாஹ்விடம் செல்லாது  என்பதை உங்கள் காதுகளுக்கு  செல்ல வேண்டும். 

இறுதியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் .. இன்ஷாஅல்லாஹ் எல்லோரும் சுவனத்தில் நுழைந்த பிறகு எந்தக் கவலையும் , வருத்தமும் இருக்காது. ஒரே ஒரு வருத்தைதை தவிர அதுதான்  . '' நான் இன்னும் அதிகமாக நல்ல அமல்கள் செய்திருந்தால்  நான் இன்னும் மேலும் உயர்ந்த பதவியில் இருந்திருப்பேன்  அல்லது கிடைத்திருக்கும் என்று சொல்வான். இந்த விஷயத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்!  கொடுக்கப்பட்ட காலத்தை நாம் வீண் விரயம் செய்யாமல் , நல்ல அமல்கள் செய்வதிலும் , அல்லாஹ்வை நினைவுக் கூறுவதிலும் , அண்ணல் நபி [ஸல்] அவர்களின் சுன்னத்தையும் நாம் தினமும் பேணுதலாக கடைபிடிப்போம். அல்லாஹ்  அந்த கூட்டத்தில் சேர்ப்பானாக ! ஆமீன் ......
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
*******************************************************************************************************************************************
******************************************
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!