அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், ஜனவரி 06, 2015

முஸ்லிம்களுக்கு சோதனைக் காலம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் ...

இன்று , இந்தியாவில் நடக்கூடிய அனைத்து பிரச்சனைக்கும் இந்து முன்னணி RSS தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு , காவிகளின் அட்டகாசம் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது.  எங்கும் பார்த்தாலும் கலவரம் , சண்டை , சச்சரவு,  குழப்பம் . அமைதியை குலைக்கும் வகையில் இந்த RSS  பயங்கரவாதிகள் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இதற்கு முற்றுபுள்ளி அல்லாஹ்வின் வேதனைதான் அவர்களை பிடிக்க வேண்டும்.  அல்லாஹ் பொறுமையாளன் , பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் . ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் அல்லாஹ் வகுத்து இருக்கிறான் , அது வந்துவிட்டால் .  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல இந்த சோதனை . உலகத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் சோதனைக் காலம். இன்ஷாஅல்லாஹ் சோதனையை வென்று சாதனைப் படைப்போம்!


இன்று நாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் , நமக்கு வரும் சோதனைகள் . அன்று சகாபாக்கள் காலத்தில் அவர்கள் சந்தித்ததைப் போன்று , அவர்கள் பட்ட கஷட்டங்கள் போன்று , அவர்கள் சோதிக்கப்பட்டதைப் போன்று  இன்று இல்லை.  அவர்கள் ஈமான் உறுதியாக இருந்தது.  அவர்களுக்கு ஈமான் மேலும் மேலும் அதிகரித்தது. அதுவும் இன்று நமக்கு ஒரு அழகான பாடமும், படிப்பினையும் இருக்கிறது.

அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் [ஸல்] அவர்களையும்  ஈமான் கொண்டோம் . சுவனம் எளிதாக நமக்கு கிடைத்து விடும் என்று எண்ணிவிட கூடாது . அல்லாஹ் கூறுகின்றான் ..

2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

குஜராத்தில் நடந்த மிகப் பெரிய இனபடுகொலை . முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் , பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்  , சிசுக்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டார்கள் . இந்த சம்பவம்  மறக்க முடியாது  , மன்னிக்க முடியாது.  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் பெரும் பாக்கியசாலிகள்  . அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் , அவர்கள் அல்லாஹ்விடத்தில் உயிருடன் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்  திருமறையில் கூறுகின்றான். அவர்கள் சோதனையை அடைந்து சாதனை படைத்து விட்டார்கள்.

குஜராத்தில் நடந்த சம்பவத்தில் காரணமானவர்கள் , அதை செய்ய சொன்னவர்கள் , உடந்தையாக இருந்தவர்கள் . இன்று சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்கிரார்கள். பதவியிலும் , செல்வாக்கிலும்  வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எங்கே நியாயம்? எங்கே நீதி?  என்ன  ஆனது? இவர்கள் இந்த கோர்ட்டில்  தப்பித்து விடலாம். அல்லாஹ்வின் கோர்ட் ஒன்று இருக்கிறது அதில் இவர்கள் தப்பிக்க முடியாது என்பது  இவர்கள் அறியமாட்டார்கள். இன்னும் இந்தியாவில் என்னே என்னே  நடக்கும் என்பதை அல்லாஹ் அறிவான்.  நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி அணுக வேண்டும்?  வேகமா அல்லது விவேகமா?   இப்பொழுது நமக்கு தேவை விவேகம்தான்! அறிவுபூர்வமான செயல்கள் தான்  நமக்கு தேவை . நாம் அறிவுபூர்வமாக செய்ய வேண்டும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும்.  பொறுமையாகவும் இருக்க வேண்டும் , நிதானமாகவும் செயல்பட வேண்டும்.  இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை . அவர்கள் ரொம்ப வேகமாக இருக்கிறார்கள். விவேகம் அவர்களிடத்தில் இல்லை. அதற்கு பல உதாரணம் சொல்லலாம்...  நேற்று நடந்த ஒரு சம்பவம்  Facebook மூலமாக அறிந்தது.  சில கயவர்கள் காவிகளின் கூலிப்படைகள்  ஒரு போஸ்டரை அடித்து அதில்  ''சில அசிங்கமான வார்த்தைகளை எழுதி '' முஸ்லிம்களை உசுப்பி விட்டார்கள்.  அதைப் பார்த்தவர்கள் எல்லோரும் கொதித்து எழுந்தார்கள் . அதை எப்படி அணுக வேண்டும் என்று அறியாமல் சில வாலிப பிள்ளைகள் இன்று அந்த போஸ்டர் எதிராக அவர்கள்  பதிலடிக் கொடுத்தார்கள். இது எந்த விதத்திலும் முறை அல்ல , நியாயமும் அல்ல  . அந்த கயவர்கள் செய்ததை நாமும் அப்படி செய்ய வேண்டுமா..??  தேவையில்லாமல்  சில  அய்யர் பெண்களை தவறாக கூறி . அப்படி நடந்துக் கொள்ள வேண்டுமா? இதுதான் சரியான அணுகுமுறையா?  இப்படிதான் பதிலடி கொடுப்பதா?  வேகத்தில் சிந்திக்காமல் சில இளைஞ ர்கள்  இப்படி செய்கிறார்கள் . இது வெறுக்கத்தக்கது . அருவருப்பானது. அந்த போஸ்டர் வாசகத்தை பார்த்து நாம் எல்லோரும் கொதித்து எழுந்தோம்  .  நாம் பட்ட வேதனைப் போல் அவர்கள் அந்த போஸ்டரைப் பார்த்து மன வேதனை படமாட்டார்களா?  சிந்திக்க வேண்டும் ! அல்ஹம்துலில்லாஹ்!   அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும். நாம் இன்னும் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.  சில சகோதரரர்கள் இன்னும் அதிகமாக அந்த போஸ்டரை ஷேர் செய்து  ''பாருங்கள் பாருங்கள்  என்று விளம்பரம் செய்வது போல் இருந்தது.  சிலர் நல்லதை செய்வது போல  தீய காரியங்களுக்கு வழி வகுகிரார்கள்.  தயவு செய்து  இப்படி செய்யாதீர்கள்!   இந்த முகநூளில்  [facebook ] உண்மையாக சில சகோதரர்கள் நல்ல விழிப்புணர்வு செய்கிறார்கள் . நன்மையின் பால் அழைக்கிறார்கள் . சிலர் நல்லது என்று எண்ணி கெட்டதாக ஆக்கிவிடுகிறார்கள்.   isis என்பதை பற்றி யாருக்கும் தெரியாது . அவர்கள் நல்லவர்களா ?  அல்லது பயங்கரவாதீகளா ?  யூதர்களின்  சூழ்ச்சியா? என்ன என்பது யாருக்கும் தெரியாது . அல்லாஹ் ஒருவன் மட்டும் அறிவான் அவர்களைப் பற்றி.  
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
   நாம் இனி எப்படி இருக்க வேண்டும் .?  நம் பெண்களுக்கு எப்படி விழிப்புணர்வு செய்ய வேண்டும்.??  ஒருவொர்கொருவர் அன்பு செலுத்த வேண்டும் , நீர் எந்த அணி ? நீர் எந்த இயக்கம் ? நீர் எந்த ஜமாஅத்? என்று வேறுபாடு காட்டாதீர்கள் !  ஒன்றுபட்டால் தான் எதிரிகளுக்கு அச்சம் ஏற்படும். இது முதல் விஷயம். இரண்டாவது நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் , ஒருவொர்கொருவர்  பாசமாகவும் , பற்றாகவும் பழக வேண்டும். தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்ற நேசித்து,  எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின்  தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ் , அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்தப்பட்ட சங்கிலிப் பிணைப்பாகும் . மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.  


விசுவாசிகளே  [யாவரும்] நிச்சயமாக சகோதரர்களே! [அல்குர் ஆன் 49.10]

இன்று இப்படி இருக்கிறது ? இஸ்லாத்தை நாங்கள் தூய வடிவில் சொல்கிறோம் என்று வாய் கிழிய பேசுகிறார்கள்  . எங்கே போனது இந்த சகோதரத்துவம்? எதற்கு இந்த பிளவு பிரிவு.?  முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்ட்டம் என்று வந்தால்  அப்போதாவது எல்லோரும் ஒன்று படுவோமா? இல்லையே அப்பொழுதும் தனி தனியாக நின்று  குரல் கொடுக்கிறோம். இது மாற வேண்டும்.  நம் உள்ளத்தில் இருக்கும் கசப்பை வெளியே எரிந்து விடவேண்டும். இன்ஷாஅல்லாஹ்  நமக்கு அல்லாஹ்வின் உதவி  பாதுக்காப்பு கிடைக்கும். எப்பொழுது அந்த பொற்காலம் வரும்..??? 

பெண்களின் நிலை இன்று ரொம்ப மோசமாக போய்கொண்டு இருக்கிறது. எவ்வளவு விழிப்புணர்வு  செய்தாலும் , கிளி பிள்ளைக்கு சொல்வது போல் சொன்னாலும் . அவர்கள் அந்த காதல் என்ற சாக்கடையில் தான் விழுவேன் என்று அடம் பிடித்து , அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே அழித்துக் கொள்கிறார்கள்.  பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது அக்கறை எடுத்து கொள்வதில்லை.  அவர்களை கண்காணிப்பதில்லை . அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களை கேட்பதும் இல்லை.  சதா டிவி சீரியலில் நேரத்தைக் கழிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள்.  வீட்டுக்கு யார் வந்தாலும் கூட தெரிவதில்லை. அந்த அளவுக்கு டிவி முன் லைத்து போகிறார்கள்.  பெற்றோர்கள் மார்க்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் . மறுமையின் சிந்தனை அவர்களுக்கு வர வேண்டும்.  மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இஸ்லாம் சொல்லும் பெற்றோர்களாக மாற வேண்டும்.  அப்பொழுது அவர்களுக்கு பிள்ளைகளின் மீது அக்கறை பொறுப்பு  வரும். 


முஸ்லிம் தெளிவாக அறிய வேண்டியவை **********

கல்வியின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியவைகளில் முதலாவது அல்லாஹ்வின் வேதம் குர்ஆன்  ஆகும். அதை ஓதும் முறைகளையும் மற்றும் அதன் விளக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.  பின்பு  [நபிமொழி] ஹதீஸைப் பற்றிய கல்வி, வரலாறுகள், நபிதோழர்கள் மற்றும் தாபியீன்கலையும்  பற்றிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும். இன்னும் வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல் ஆகியவைகளை சரியாக நிறைவேற்றும் அளவிற்கு மார்க்க சட்டங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.  அல்ஹம்துலில்லாஹ் !!!!!!!


அல்லாஹ் மிக்க அறிந்தவன் .

keywords - முஸ்லிம்களுக்கு சோதனை கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!