வெள்ளி, ஜனவரி 02, 2015

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மீது ஸலவாத் கூறுவதால்

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மீது ஸலவாத் கூறுவதால்  நபி{ஸல்} அவர்கள்  மீது  ஸலவாத்து  கூறுவதற்கு  மிகுந்த  சிறப்புண்டு.


விசுவாசிகளே,  நபி  அவர்களின்  மீது   ஸலவாத்தும்,  சலாமும்   கூறுங்கள்
என  அல்லாஹ்  கூறுகிறான்.

யார்   ஒருவர்  என்  மீது   ஒரு  முறை  ஸலவாத்து   கூறுகிறாரோ
அவர்  மீது  பத்து   அருட்களை  அல்லாஹ்  இறக்கிவைக்கிறான்.
இன்னும் அவரது  பத்து  பாவங்கள்  மன்னிக்கப்படுகின்றன. அவரது
பத்து  அந்தஸ்துகள்  உயர்தபடுகின்றன. யார்  என்  மீது  அதிகமாக
ஸலவாத்து   ஓதுகின்றாரோ  அவர்  எனக்கு  நெருக்கமானவர்   ஆவார்.{நபி
மொழி}நூல்  முஸ்லீம்



நபி{ஸல் }அவர்களின்  பெயரை   படித்தாலும்  செவியுற்றாலும்
அவசியம்   அன்னாரின்  மீது  ஸலவாத்து  கூறவேண்டும்,காரணம்
யாரிடம்   என்  பெயர்  கூறப்பட்டு   என்  மீது   ஸலவாத்து   கூறவில்லையோ
அவரது  மூக்கு  மண்ணைத்   தொடட்டும். இழிவு
அவருக்கு  உண்டாகட்டும்  எனக்  கூறியுள்ளார்கள்.நூல்  திர்மிதி
யாருக்கு   முன்   என்  பெயர்  கூறப்பட்டு   அவர்  என்  மீது   ஸலவாத்து
கூறவில்லையோ  அவர்தான்  கருமி,கஞ்சன்   எனக்   கூறியுள்ளார்கள்.


எப்பொழுதெல்லாம்    அல்லாஹ்விடம்   துஆ   செய்கிறோமோ,
அப்பொழுதெல்லாம்    அல்லாஹ்வை   புகழ்ந்து   போற்றிய   பிறகு
ஸலவாத்து   கூறி   துஆச்   செய்யவேண்டும். துஆவை   முடிக்கும்
பொழுது    அல்லாஹ்வை   புகழ்ந்து   நபியின்   மீது   ஸலவாத்து   கூறுவது
 முக்கியம்.


துஆவில்   எதுவரை   நபி [ஸல்] அவர்கள்   மீது   நீங்கள்   ஸலவாத்து
கூறவில்லையோ   அது   வரை   உங்களது   துஆக்கள்   வானத்திற்கும்
பூமிக்கும்   மத்தியில்   தொங்கி  கொண்டிருக்கும்.  ஸலவாத்து   கூறுவதால்
  துஆ   அங்கீகாரம்   பெறுகிறது  என   உமர்[ரலி]  அவர்கள்
கூறுகிறார்கள்.



ஜூம்ஆ   நாளன்று   அதிகமாக   ஸலவாத்து   கூறுமாறு  நபி[ஸல்]
அவர்கள்   கட்டளையிட்டார்கள்.பள்ளியில் {நுழைய}  அருகாமையில்
சென்றாலும், பள்ளியை  விட்டு   வெளியேறினாலும்   ஸலவாத்து  கூறுவது
சிறந்ததாகும்.



ஸல்லலாஹு அலா முஹம்மத்
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்


                                                            முஹம்மது
நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்தமான ஸலாவத்


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா
இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.
அல்லாஹீம்மா(B)பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்
கமா(B)பாரக்(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க
ஹமீது(ன்)ம் மஜீத்


நாம்  அனைவரும்  நபி{ஸல் }அவர்களின்  பெயரை   படித்தாலும்
செவியுற்றாலும்  ஸலவாத்து   கூறி,  அதன்  நன்மையை   பெற்று
வாழ்வோமாக ! ஆமீன் !


ரபிஉல் அவ்வல் தொடங்கிவிட்டது  . எல்லாப் பள்ளிகளிலும் மௌளது ஓதப்படும் , சீரனிகள் வழங்கப்படும்  . பிறகு மிலாது விழா நடைபெறும் . அப்பொழுது அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களைப் பற்றி பேசப்படும் . மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்  , அன்று ஊரவலமாக செல்வார்கள் . இது வழமையாக நடக்கூடிய  செயல்கள் தான்!  அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அந்த தினத்தில் பிறந்தார்களா என்பது  ஒரு விடயம் . திங்கள் தினத்தில் தான் அண்ணல் நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்தார்கள்  என்பது எல்லோரும்  அறிந்த விடயம் ! அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  அண்ணல் நபிகள்  நாயகம் [ஸல்] அவர்கள் பிறந்த தினம் அல்லாஹ் மட்டுதான் அறிவான் .  அந்த தினத்தில் தான் பிறந்தார்கள் என்று சொல்லக் கூடியவர்கள் , அண்ணல் நபிகள் நாயகம்  [ஸல்] அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஏதாவது  ஆதாரம் உண்டா ?? அல்லது  இது சத்திய சகாபாக்களின் வழிமுறையா? அவர்கள் இதை  செய்து வந்தார்களா?  நிச்சயமாக இல்லை என்று ஆணித்தரமாக கூறலாம் .  இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாதவர்கள் , எதிர்ப்பவர்கள் , இப்படி செய்ய கூடாது என்று சொல்பவர்கள்  , இது ஒரு பித் அத்தான செயல் என்று கூறுபவர்கள்  இவர்கள் எல்லாம் வஹ்ஹாபிகள் அல்லது மோசமான வார்த்தைகளை  சொல்கிறார்கள்  '' முஃனாபிக் '' என்று  கூறக்கூடிய நிலைகளையும் பார்க்கிறோம்  .  யாரையும் பார்த்து நீ முஃனாபிக் என்று சொல்லக் கூடாது .  இந்த சுன்னத் ஜமாத்தில் உள்ளவர்கள்  பிடிவாதமாக இந்த செயலை செய்கிறார்கள் . வருடத்தில் ஒரு முறை  மட்டும் இப்படி செய்து வந்தால் போதும் என்று அவர்கள் எண்ணுகிறார்களா?  வருடத்தில் ஒரு முறை மட்டும் அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை நினைவு கூர்ந்தால் போதும் என்று சொல்கிறார்களா ?   ஒரு கூட்டம் சொல்கிறது  .. ரமலான் மாதத்தில் மட்டும் ரமலான் பற்றி பேசுகிறோம் . ஹஜ் காலத்தில்  ஹஜ்ஜைப் பற்றி பேசுகிறோம் . உம்ரா காலங்களில் உம்ரா பற்றி பேசுகிறோம்   . ஏன்  ரபி உல் மாதம் வந்தால் மட்டும் அண்ணல் நபி [ஸல்] அவர்களைப் பற்றி  பேசக் கூடாது அல்லது வேறு விதமாக கூறி இருந்தார்கள்.  எங்கள் கேள்வி  அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை வருடத்தில் ஒரு முறை  மட்டும் புகழக் கூடியவர்களா ??  ஒரு முறை மட்டும் நினைக்கக் கூடியவர்களா?  இல்லை  அன்பு சகோதரர்களே !  அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நம்மோடு கலந்தவர்கள்  , நம் உணர்வோடு கலந்தவர்கள் , நமக்கு வாழ்க்கை நெறிகளை கற்று தந்தவர்கள்  , நபியையும் நம்மையும் பிரித்து பார்க்க முடியாது . அண்ணல் நபிகள்  நாயகம் [ஸல்] அவர்கள் மீது தினதோறும் சலவாத் கூற வேண்டும்  .  தினம்தோறும் நபிகளாரின் life style  நம் வாழ்க்கையில் இருக்க வேண்டும் .  ஒரு  முஸ்லிம்  காலையில் எழுந்ததிலிருந்து மாலை தூங்கும் வரை  நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வழிமுறைகள் இருக்கின்றன.  ஒவ்வொரு நாளும் அண்ணலாரைப் பற்றி இந்த உலகம்  புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது . பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்  . அவர்களின் வாழ்க்கை நெறிகளை கண்டு வியந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

50 நாடுகளில் மௌளது ஓதப்படுகிறது என்று விளம்பரம் செய்கிறார்கள் . இது ஒன்று ஆதாரம்  வைத்து நாம் பின்பற்ற முடியுமா ? அண்ணல் நபி [ஸல்] அவர்கள் காட்டி தந்த  வழிமுறைகள் செயல்கள் மட்டும் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும் .

அல்லாஹ் மிக்க அறிந்தவன். 
keywords -சலவாத் salavaath

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!