அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

ஞாயிறு, ஜனவரி 25, 2015

சீமான் ஆக்கிய ஈமான்

அல்லாஹ்வின் திருபெயரால் .......

இந்த கட்டுரை நமக்கு ஒரு பாடத்தை தருகின்றன. எதுவேண்டுமானாலும் அல்லாஹ்விடம் கேளுங்கள் , அவன் இருகரத்தை விரித்தவன்னமாக இருக்கின்றான் . அவன் தான் எல்லோருக்கும் உணவளிப்பவன் !


ஹசன் பாய் மிகப் பெரிய பணக்காரர் . தக்காளி கமிஷன் மண்டி, பழ கமிஷன் மண்டி , பழமுதிர்சோலை , ஆங்காங்கே டீ ஸ்டால்கள் என்று வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.  'ஹசன் பாயா? தங்கமான மனிதர்.  இல்லேன்னு உதவி தேடி போனால் போதும் . ஆயிரம் ரூபாய் எடுத்து தந்துடுவாரு . தொழுகையாளி , தீன்தாரி / மார்க்கெட்டில் உள்ள பள்ளிவாசலுக்கு தலைவர்'  இப்படி ஹசன் பாயை பற்றி மக்கள் அடுக்கிக் கொண்டே போவார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஹசன் பாய் நன்றி மறக்காத மனிதர் என்பதுதான் உண்மை.


ஒருநாள் ஹசன் பாயிடம் , அவர் மகனை தன்  மகளுக்கு நிக்காஹ் செய்ய மனதில் நாடிக் கொண்டிருக்கும் அப்துல்லாஹ் பேச்சுவாக்கில் ,
''நான் கூட உன்கிட்ட ரொம்ப நாளாகவே கேட்கணும்னு  ஒரு விஷயத்தைப் பற்றி நினைப்பேன் . அது உன்னோடு சொந்த விஷயம் அதில் நாம் தலையிடக் கூடாது என சும்மா இருந்து விடுவேன். ஆனாலும் இந்த மனசு ஒன்னை நெனச்சுட்டா அதைப்பற்றி தெரியும் வரைக்கும் அமைதியாய் இருக்க மாட்டேங்குது . அதனாலே எதுனாலும் சரி இன்னைக்கு உன்கிட்டே கேக்கலாம்னு தான் '' என்று பீடிகை போட்டார்.

''இப்படி ரொம்ப நாளா மனசுலே போட்டுத் தவிக்கிறதுக்கு  பதிலாக இப்போவாவது பட்டுன்னு கேட்க வேண்டியதானே . அப்படி என்னத்தை கேட்கப் போகிறாய் என்றுதான் பார்ப்போமே !' என்றார் ஹசன் பாய் .

''இரண்டு விஷயமப்பா . ஒன்னு நீ ஏன் ரமலான்லே சிலருக்கு ஆயிரம் ஆயிரம் ரூபாய் தர்றே ? இரண்டாவது .. நீ எந்த கடையோ , வியாபாரமோ ஆரம்பித்தாலும் ஏன்  ''சீதேவி ன்னு பேர் வைக்கிறே ? உன் பேரோ அல்லது உன் குடும்பத்தார் பேரோ, இல்லை வேறு ஏதாவது பேர் கூட வைக்கலாமே? இது தாம்ப்பா என் மண்டைக்குள்ளே கொடஞ்சுட்டு இருந்த கேள்விங்க.

ஹசன் பாய் சொல்ல ஆரம்பித்ததும் , பழைய நிகழ்ச்சிகள் நிழற்படமாய் அவர் மனக்கண் முன் ஓட ஆரம்பித்து  விட்டது. ஆரம்ப காலத்தில் ஹசன் பாய் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று வந்தார்  . காலையில் தள்ளுவண்டி எடுக்கும்போது அக்கம் பக்கத்தில் நூறோ இருநூறோ கடம் வாங்கினால்  , வியாபாரம் முடிந்ததும்  அல்லது மாலையில் நூற்றுக்கு இருபத்தி அஞ்சு ரூபா போட்டு , நூற்று இருபந்தைந்தாக தர வேண்டும்.

இதுமாதரியான கஷ்ட்டத்தில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் உறவினர்  ஒரு பெண்மணி , அதுவும்  ஒரு ரமலான் மாதத்தில் ஹசன் பாயிடம் ஆயிரம் ரூபாயை தந்து,  ''இந்தாங்க இந்த பணத்தை வச்சு வியாபாரம் பண்ணி  நல்லபடி பிழைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

''பணத்தை எப்பொழுது திருப்பித் தரனும் ? என்று கேட்டார் ஹசன் பாய்.
''நீங்கள் திருப்பித் தர வேண்டாம் . இந்த பணத்திலே வியாபாரம் செய்யுங்கள் . ஒரு வேளை  வியாபாரம் சூடுபிடித்து நீங்க நல்லா சம்பாதித்தால், உங்களை மாதரியான வசதி இல்லாத இருவருக்கு இந்த ஆயிரம் ரூபாயை கொடுத்து உழைத்து பிழைத்துக் கொள்ள  சொல்லுங்கள் '' என்று சொல்லி விட்டு போய்விட்டார்.

அல்லாஹ் , ஹசன் பாய் ரிஸ்க்கை அந்த பெண்ணின் கைகளில் தந்திருந்தார் போலும். ஒரே வாரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வந்தது. காய்கறி தள்ளுவண்டியில் அப்பளம் ம் சேமியா ம் மசாலா பொருள் பாக்கெட்டுகள் என்று உடனடியாக கெடாத பொருட்கள் இடம் பிடித்தன. குடும்ப செலவு போக லாபத்தை சேமித்து வைத்தது.  தான் தக்காளி எடுக்கும் மண்டியில் பங்குதாரராய் சேர சேமிப்புத் தொகை உதவியது. ஓராண்டில் தக்காளி மண்டியின் உரிமையாளராகவும் ஆனார்.

அதிக உழைப்பு , அளவான திட்டமிட்ட செலவு. எப்படியோ தீனில் நாட்டம் கூடி ஐவேளை தொழுகையாளியும் ஆகி விட்ட நேரத்தில் பழ கமிஷன் மண்டி ஒன்றை  கைமாற்றி தர ஒருவர் முன்வந்தார். ஆக இப்போ ஹசன் பாய் தக்காளி மற்றும் பழ  கமிஷன் மண்டி உரிமையாளராகவும் ஆகிவிட்டார்.

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும் ...........
அல்லாஹ் மிக்க அறிந்தவன்..   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!