செவ்வாய், ஜனவரி 27, 2015

சீமான் ஆக்கிய ஈமான் [தொடர்ச்சி ]

சீமான் ஆக்கிய ஈமான் [தொடர்ச்சி ]
அல்லாஹ்வின் திருபெயரால் ...........

ஒருவரின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது ''சோம்பேறி '' முயற்சி நம்முடையது வெற்றியை கொடுப்பது இறைவனுடையது ! 

ஹசன் பாய் அல்லாஹ்வின் கிருபையால் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே போகிறார்... அடுத்த ஓராண்டில் பேங்கு லோன் போட்டு  'சீதேவி ' பழமுதிர் சோலை , அதுவும் நல்ல இடத்தில் திறந்தார். கல்லா நிரம்பி வழிந்துக் கொண்டேயிருந்தது . அடுத்த லாபகரமான தொழில் ஒன்றை யோசித்தார். அவருக்கு நினைவுக்கு வந்தது டீ ஸ்டால் . டவுனில் நாலைந்து இடங்களில் டீ ஸ்டால் ஆரம்பித்தார்.


ஹசன் பாய் யார் என்றே முன்னே பின்னே தெரியாத போது , ஒரு சீதேவி ஆயிரம் ரூபாய் தந்து உதவியதால் தானே , தனக்கு இந்தளவு முன்னேற்றம் . அதனால் பெயர் தெரியாத அந்த பெண்ணை  'சீதேவி ' என்று நினைக்க ஆரம்பித்தாரோ, அது முதலே அவர் ஆரம்பிக்கும் ஒவ்வொரு வியாபாரமும் அந்த சீதேவியின் பெயரையே வைக்க ஆரம்பித்து விட்டார். அடுத்து ஹசன் பாய் , ஏன் உதவி கேட்போருக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார் என்றால், உழைக்க தயங்காத யாராக இருந்தாலும் நிச்சயம் தன்னைப் போல் உயர்நிலைக்கு வர இந்த ஆயிரம் ரூபாய் போதும் என்பதால்தான்.

ஆயிரம் ரூபாயில் யாரும் பெரிய கம்பெனி திறக்க முடியாது. பெரிய வியாபாரமும் செய்ய முடியாது. அடுத்தவனிடம் கையேந்தி வருபவன் ஏழை தானே. வசதி இல்லாதவன்தானே . அவனுக்கு இந்த ஆயிரம் ரூபாய் மிகப் பெரிய தொகை . இந்த ஆயிரம் ரூபாயில் எவ்வளவு செய்யலாம் . காய்கறி , பழம் , பூ போன்ற வியாபாரம் செய்யலாம். சைக்கிளில் டீ கொண்டு போய் விற்கலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.....

முதல் இல்லாத லாபகரமான ஒரு வேலை , குடிநீர் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் ஒரு தள்ளு வண்டியை வாடகைக்கு வாங்கி தண்ணீர் அடைக்க வழியில்லாமல் வீணாக போய்க் கொண்டிருக்கும் குழாயிகளில் குடங்களில் தண்ணீரை பிடித்து சில கடைகளுக்கு வைத்தாலும் மாதம் ஒரு நல்ல தொகையை எதிர்ப்பாக்கலாம்.

வாழ நினைத்தால் வாழலாம் . வழியா இல்லை  பூமியில் ' உழைக்க அச்சம், வெட்கம், சோம்பேறித்தனம் இவைகள் இல்லை என்றால் உழைப்பதற்கு வழியா இல்லை. தண்ணீரில் தத்தளிக்கறவன் ஒரு மரத்துண்டை பிடித்து கரை சேருவதில்லையா ? அதுபோல்தான் பிழைக்க உதவி கேட்டு வருபவனுக்கு இந்த ஆயிரம் ரூபாய். இந்த ஆயிரம் ரூபாய் அவனுக்கு போதாமல் இருக்கலாம். ஆனாலும் இதை வைத்து முன்னுக்கு வருபவன்தான் உண்மையில் நல்ல திறமைசாலி. அப்படிதான் நான் கணித்து உதவி செய்கிறேன்.

மின்தடையால் நிழற்படம் பாதியில் நிற்பது போல வேறு எதோ நினைவால் மௌனமானார் ஹசன் பாய் . '' என்ன ஹசன் பாய் ? மௌனமாய் விட்டிர்கள் ! '' என்ற அப்துல்லாஹ் குரல் கேட்டு , ''எங்கே விட்டேன் '' என்றார் ஹசன் பாய்

''ஆயிரம் ரூபாய் தர்றதை பற்றி சொல்லிட்டு இருந்தீங்க.''
''அதனாலே ஆயிரம் ரூபாய் மட்டமாய் நினைக்காதே அப்துல்லாஹ்! இதுபோதுமா , இல்லை இன்னும் ஏதாவது கேட்கணுமா , அப்படி இருந்தாலும் இப்பவே கேட்டுகொள். மனசுலே எதையும் போட்டு குழப்பிக்காதே '' என்றார் ஹசன் பாய்.

''எவ்வளவு உதவிகளை நம்மிடமிருந்து பெற்றுக் கொண்டு நன்றி விசுவாசம் இல்லாமே நடந்துக் கொள்ளும் சொந்தக்காரங்கள் இருக்காங்கள்  . ஆனா நீயோ  யாரு எவருன்னு தெரியாத ஒரு அம்மா தந்த ஆயிரம் ரூபாயை உன் சொந்த உழைப்பாலே பெருக்கிக்கிட்டே போயும்  கூட , அந்த அம்மா செய்த உதவியை நீ மனதார நன்றியோடு பெருமையோடும் சொல்றது மட்டுமில்லாமே , அவங்களை சீதேவி அந்தஸ்த்துக்கு உச்சதி அந்த பெயரையே உன் ஒவ்வொரு வியாபாரத்துக்கும் வைத்து அழகு பார்க்கிறாயே  உன்னை எப்படி பாராட்டனும் புகழனும்  எனக்கு தெரியலப்பா- அந்த அம்மாவின் உதவியை ஈமானோடு இன்றளவுக்கும் நினைத்து பார்ப்பது , அந்த ஈமான் தான் உன்னை சீமான் ஆக்கியிருப்பது  இப்போ நான் புரிந்துக் கொண்டேன் . என்று சொன்னே போதே  , அப்துல்லாஹ் மனதில் இவ்வளவு நல்ல மனிதர் சகவாசத்தை நாம் எப்போதும் நம்மோடு வைக்கணும் நிச்சயமாக என் மகளை இவர் வீட்டில் நிக்காஹ் செய்து கொடுத்தால் மட்டுமே  முடியும். இனி அதுக்கான காரியத்தில் இறங்க வேண்டும்  என்று மனதில் நினைத்துக் கொண்டு , ஹசன்  பாய்க்கு சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அப்துல்லாஹ்..
முற்றும் . அல்ஹம்துலில்லாஹ்!!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி .. ஹாஜியா .S . சான்பேகம்
நன்றி.. நர்கிஸ்
அல்லாஹ் அவர்களுக்கு  நற்கிருபைச் செய்வானாக !!!
முதற்ப் பகுதி கட்டுரையை வாசிக்க இதை கிளிக் செய்யவும்  .www.islam-bdmhaja.blogspot.com/2015/01/seemaan-iimaan.html  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!