அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், ஜனவரி 14, 2015

சிந்திக்க சில முத்துக்கள்!!!

அல்லாஹ்வின் திருபெயரால் ......**********

நல்ல விஷயங்கள் கிடைக்குபோது அவைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் . நழுவ விடாதீர்கள் ! 

அடுத்தவன் மீது குற்றம் கண்டு பிடித்து விட, வேண்டுமென்றே இல்லாத ஒன்றை  [வீண்பழி] சுமத்துபவனை அல்லாஹ் நரகத்தில் தூக்கி எறிவான்.

செல்வந்தனாக வேண்டும் என்று பேராசைக் கொள்ளாதீர்கள். அது உங்களை நேர்மையை விட்டும் தூரமாக்கி விடும் .


மதுவைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர்கள் ! நிச்சயமாக அது மருந்து அல்ல ! நோயை தான் கொண்டு வந்து சேர்க்கும் .

பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது ,, நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.

குர் ஆனை தினமும் ஓதுங்கள்,, மனப்பாடம் செய்யுங்கள்,, ஏனென்றால் குர்ஆனை  உள்ளடக்கிக் கொண்டிருக்கும் இதயத்தை அல்லாஹ் வேதனை செய்வதில்லை .

எவன் போதை தரும் பொருளை அருந்துகிறானோ , அவனுக்கு மறுமையில் நரகவாசியின் சீல் , வியர்வை முதலியவற்றை அருந்துச் செய்வதாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.

உலகம் வெளி அழகை காட்டி ஓடிக் கொண்டிருக்கிறது,, மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது ,, இந்த இரண்டுக்கும் வெவ்வேறு மனிதர்கள் இருக்கின்றனர். நீங்கள் மறுமையின் மனிதர்களாக ஆகி விடுங்கள் . உலக மனிதர்களாக ஆகி விடாதீர்கள்.
*********************************************************************************
பெண்களே , இது உங்களுக்காக ...!
ஆடம்பரத்தில் மயங்காதீர்கள்!

வீடு  தேடி வருபவரிடம் முகங்கொடுத்துப் பேசாமல் இருப்பது தவறு. வந்த விவரத்தை சுமுகமாகக் கேட்டு நல்ல முறையில்  பதில் சொல்லி அனுப்ப வேண்டும்.

நல்லது, கெட்டதற்கு  நாலு பேர் வேண்டும் . எனவே அக்கம் பக்கத்தாருடன் சுமூகமான பழக்கம் இருப்பது அவசியம்.

கணவன்  கோபித்தால் அடங்கிப் போய்விட வேண்டும். சாந்தமாகப் பேசி சமாதானம் செய்யத் தெரியாவிட்டால்,  பேசாமல் இருந்து விடுவதே நல்லது. அடக்க முடியாமல் ஆத்திரம் வந்தால், அந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டும். வாக்குவாதத்தால் வன்மம் வளரும்.

விருப்பத்தை வேளையரிந்து  வெளியிட வேண்டும் . சமயம் அறியாது கூறி சண்டைக்கு அடிகோலக்  கூடாது. புத்திசாலித்தனமாக நடந்து கணவனிடம் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தெரியாத பெண்கள்தான் திருப்தியடையாத உள்ளத்துடன் வாழ்வார்கள்.

என்றோ நடந்ததை எண்ணிப் பொருமிக் கொண்டு இருக்கக் கூடாது  . அவ்வப்போது இடித்துப் பேசி கணவன் மனம் புண்படச் செய்வது தவறு. அதை அன்றோடு மறந்து விட வேண்டும். சிடுமூஞ்சி தனத்துக்கு இடமே தரக்கூடாது.

செலவழிக்கும் ஒவ்வொரு காசும்  அதன் பூரணப்பயனை அளிப்பதாக இருக்க வேண்டும்.  ஆடம்பரத்தில் நாட்டம் , அடுத்த வீட்டுப் பெண் வாங்குவதை எல்லாம் தானும் வாங்குவது, தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது , போன்றவற்றைக் குடும்பப் பெண்  செய்யக்கூடாது.

செலவைக் குறைப்பது சிக்கனம்  ஆகாது . செலவழிக்கும் பணத்தை அதிகப் பயன்படுபடி செய்வதே சிக்கனம்  ஆகும்.

ஒவ்வொரு மாதத்துக்கும் ஆரம்பத்திலேயே குடும்பப் பெண்  செலவுத் திட்டம் தயாரித்துக் கொள்ள வேண்டும்  . அதில் இன்றியமையாத செலவுகளுக்கு முதலிடம் தர வேண்டும்.

நன்றி  .. நர்கிஸ்
இதை எழுதியவருக்கு அல்லாஹ்  அருள் செய்யட்டும் !
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.keywords -சிந்தனை sinthanai