அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, ஜனவரி 23, 2015

நடைமுறையில் வாழ்வில் மனிதநேயம் [தொடர்ச்சி ]இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம் !

அல்லாஹ்வின் திருபெயரால் ....

நடைமுறை வாழ்வில் மனிதநேயம் என்ற தலைப்பில் சென்ற இதழில் வட்டியைப் பற்றி பார்த்தோம். இன்ஷாஅல்லாஹ்  இப்போது நாம் பார்ப்பது வியாபார அணுகுமுறைகளில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை அறிந்து கொள்வோம். உண்மையான இறை விசுவாசம் கொண்ட வியாபாரியின் நிலையைப் பார்ப்போம்...


அளவை- நிறுவை குறித்து இறைவசனம்..

''நிறைவாக அளந்து கொடுங்கள். யாருக்கும் நஷ்ட்டத்தை ஏற்படுத்தாதீர்கள் . மேலும் சரியான தராசு கொண்டு எடை போடுங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் அராஜகம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள். '' [26..181-183]

சிறிதளவு பணம் கொடுத்து பொருளைப் பெறச் சக்த்தியுள்ள ஏழை , எளியவர்கள் அப்பணத்திற்கு நிறைவானப் பொருளைப் பெற்று மனநிறைவு கொள்ள வேண்டுமெனில் , பொருளை விற்க்ககூடிய வியாபாரியானவன் மனசாட்சியும், மனிதநேயமும் உடையப் பெற்றவனாக திகழ வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம் [ஸல்] அவர்களும் வியாபார அணுகுமுறைகளைப் பற்றி பின்வருமாறு அருளியுள்லார்கள் .

அறிவிப்பாளர் .. ஜாபிர் [ரலி] , ''நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றுள்ளார்கள்  கொள்முதல் செய்வதிலும் , விற்பனை செய்வதிலும் , கடனைக் கோருவதிலும் மென்மையுடனும் , நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக ! ' [ஆதாரம்.. புகாரி]

'தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல், உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன். மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றை  பதுக்கி வைப்பவன் இறைவன் சாபத்திற்குரியவனாவான் .'
ஆதாரம். இப்னுமாஜா]

இஸ்லாமிய பார்வையில் மனசாட்சியும்  , மனிதநேயமும் ஒரே நேர்கோட்டில் இணைந்திருக்கக் கூடியவை. அதனால்தான் சக ஆன்மாவிற்கு இழைக்ககூடிய  அநியாயங்கள் . அது எவ்வளவு சிறிதாயினும் இஸ்லாம் அதனை ஆதரிக்கவில்லை.  ''பணம் சம்பாதிப்பது '' என்கிற குறுகிய மனப்பான்மையை விட்டொழித்து , வாழ்வின் ஒவ்வொரு நடைமுறைகளிலும் மனிதநேயத்தை பேணுவது அவசியமாகும்.

நடைமுறையில் வாழ்வில் நாம் காணக்கூடிய இன்னொமொரு அவலம்  ''இலஞ்சம்  ''  நியாயமாக ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கோரும்போது கூட அநியாயமாக சில ஆயிரங்களை அதிகாரிகளுக்கு அழ  வேண்டியிருக்கிறது.  இல்லாரை ஏய்க்கும் இத்தகையோருக்கு மனசாட்சியும், மனிதநேயமும் எங்கேயிருக்கப் போகிறது.  ஏழைகளின் கண்ணீர் இவர்களின் கல்நெஞ்சைக்  கரைப்பதில்லை. அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காண விழையும்  இவர்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள் ..  'இலஞ்சம் வாங்குபவர் , கொடுப்பவர், அதற்கு ஏற்பாடு செய்பவர் ஆகியவர் மீது இறைவனின் சாபம் உண்டாகும்  .  ' [அஹ்மது]

இறைவனின் சாபத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு செயல் எத்துனை இழிவானதாக இருக்க முடியும்.  சக மனிதனின் வேதனையை இரட்டிப் பாக்கக் கூடிய  இந்த இழிசெயலை , மனிதநேயமற்ற அநியாயத்தை அல்லாஹ் விலக்கியிருக்கிறான் .

நடைமுறை வாழ்வில் மனிதர்கள் சந்திக்கக்கூடிய பொதுவான சில பிரச்சனைகளில் இஸ்லாமிய மனிதநேயம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை சிந்திக்கக்கூடியவர்கள் தெளிவார்கள். தெளிந்தவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் ! முற்றும்...
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி .. டாக்டர் சல்மா ஆரிபா -சென்னை
நன்றி.. நர்கிஸ்
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!