அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், பிப்ரவரி 16, 2015

இறையருளைப் பெறும் வழிகள்
அருள் புரியக் கூடியவன் அல்லாஹ். அவனால் மட்டுமே அதைச் சாத்தியப்
படுத்தலாம். அல்லாஹ்வின் அருள் பல்வேறுபட்ட வடிவங்களில் எம்மை
வந்தடைகின்றது. அவற்றில் இலகுவாகப் பெற முடியுமானவற்றைப் பெறுவதற்கான
முயற்சிகளில் மட்டுமே நாம் முனைப்புடன் செயல்படுகிறோம்.
அவற்றில் அல்லாஹ்விடம் வாயினால் கேட்டுப் பெறும் முறையும் ஒன்றாகும்.
அல்லாஹும்மர் ஹம்னா (இறைவா எங்களுக்கு அருள் புரிவாயாக) என்பது அதற்கு
ஓர் உதாரணமாகும். ரமழான் மாத ஆரம்பப் பத்துத் தினங்களிலும் அதை நாம்
பெறுவதற்காக நாவைப் பயன்படுத்துகின்றோம்.

இரு முஸ்லிம் சகோதரர்கள் தமக்கிடையே ஸலாமைப் பரிமாறிக் கொள்ளும் பொழுது
இருவருமே ரஹ்மத் என்னும் அருளைப் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும்
உண்டாகட்டும்) என்று ஸலாம் கூறும் பொழுது கூறப்பட்டவர்க்கு ரஹ்மத்தும்.
பதில் ஸலாம் கூறும் பொழுது ஸலாத்தைக் கொண்டு ஆரம்பித்தவருக்கு ரஹ்மத்தும்
கிடைக்கும் வாய்ப்பு உண்டாகின்றது.
இருவர் வெவ்வேறு விதமாக பரிமாறிக் கொள்ளும் பொழுது அவ்விருவரில்
ஒருவருக்கு ரஹ்மத் என்னும் அருள் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.
தும்மல் விட்டவர் அல்-ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று
கூற அதை செவிமடுத்துக் கொண்டிருந்தோரில் ஒருவரோ அல்லது பலரோ யார்
ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உனக்கு அருள் புரியட்டும்) என்று பிரார்த்திப்பார்.
மரணித்தோருக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டு.
ஜனாஸாத் தொழுகையில் மூன்றாம் தக்பீருக்குப் பின்னால் அல்லாஹும் மஃபிர்லஹு
(ஹா) வர்ஹம்ஹு (ஹா) (யா அல்லாஹ் அவருக்கு மன்னிப்பும் வழங்கி அருளும்
புரிவாயாக) என்று பிரார்த்தனை செய்கின்றோம்.
தனி நபர் செயற்பாட்டின் மூலம் அதனைச் செய்பவர் அருளை அடைந்து கொள்ளலாம்.
‘அஸர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களைக் கொண்ட ஸ¤ன்னத்துத் தொழுகையை
நிறைவேற்று வோருக்கு அல்லாஹ் அருள்புரியட்டும் என்று நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்னை செய்துள்ளார்கள். நூல் – ரி. ஸா. 1117,
அபூதாவூத் – 1271, திர்மிதி 430.
தொழுகை விடயத்தில் இரு தரப்புக்கும் அருள் பெறும் சந்தர்ப்பம் உண்டு.
இரவு நேர (தஹஜ்ஜுத்) தொழுகையை நிறைவேற்றுவதற்காக விழித்து அத்தொழுகையை
நிறைவேற்றிவிட்டு தனது மனைவியை எழுப்பியவனுக்கு அல்லாஹ் அருள்
புரியட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை
செய்துள்ளார்கள்.
மனைவி எழும்ப மறுத்துவிட்டால் அவரின் முகத்திலே கணவன் தண்ணீரைத்
தெளிப்பார். தொடர்ந்து சொன்னார்கள் இரவுத் தொழுகையை நிறைவேற்ற எழுந்து
தொழுகையை நிறைவேற்றவிட்டு தனது கணவனை எழுப்பியவருக்கு அல்லாஹ்வின் அருள்
கிடைக்கட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை
செய்துள்ளார்கள். கணவன் எழும்ப மறுத்துவிட்டால் அவரின் முகத்தில் மனைவி
தண்ணீரைத் தெளிப்பார்.
ரிஸா – 1180, அபூதாவூத் – 1308, இப்னு மாஜஹ் – 1336
வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு சார்பாக இருக்கும் பொழுது
ரஹ்மத்துக்கு உரித்துடையோராக மாறுகின்றனர்.
வாங்குதல், விற்றல், கொடுத்த கடனை மீளப் பெறுதல் ஆகிய அம்சங்களில்
மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்போருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக என்று
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
ரி.ஸா 1365, புகாரீ – 4 : 260, திர்மிதி – 1320
அல்லாஹ்வின் அருள் சமாதானப் பிரியர்களுக்கும் கிடைக்கின்றது.
அல்-குர்ஆனின் மூலமாக அதை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
உங்கள் சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள், நீங்கள்
அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அருள் கிடைக்கும். 49 : 10
மேற்கூறப்பட்ட சந்தர்ப்பங்களைப் போல் இன்னோரன்ன பல சந்தர்ப்பங்களில்
அல்லாஹ்வின் அருள் கிடைக்கின்றது.
மனிதன் மனிதனுக்கு இரக்கம் காட்டும் பொழுது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்
கொள்கின்றான். ரி. ஸா. 227, புகாரீ – 13 : 303, முஸ்லிம் – 2319.
ஸாலிஹீன்களை நினைவு கூரும் பொழுது அருள் என்னும் ரஹ்மத் இறங்குகிறது
என்று ஸ¤ப்யானுப்னு உயைனா ரஹ்மதுல்லாஹீ அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.
அல்-மகாஸிதுல் ஹஸனா – 720.
சொற்பொழிவுகள் மூலம் ஸாலிஹீன்கள் நினைவு கூரப்படுகின்றார்கள். மெளலிதுகள்
மூலமும் அவர்கள் நினைவுகூரப் படுகின்றார்கள். எந்த வடிவத்தில் நினைவு
கூரப்பட்டாலும் ரஹ்மத் இறங்குவதில் தடைகள் ஏற்படமாட்டாது.
நிச்சயமாக ரஹ்மத் என்னும் அருள், நன்மை செய்வோருக்கு மிக்க சமீபத்தில்
இருக்கிறது- 7 : 56.
என்னுடைய அருளோ எல்லாவற்றையும் வியாபித்துவிட்டது. ஆகவே எனக்குப்
பயப்படுவோருக்கும் ஸகாத் கொடுப்போருக்கும் எமது வசனங்களை நம்புவோருக்கும்
அதை நான் குறிப்பாக்கி விடுவேன். – 7 : 156.
ரஹ்மத் என்னும் அருளுக்கு ஏகபோக உரிமையாளனான அல்லாஹ் தஆலா தன்னகத்தே
தொண்ணூற்று ஒன்பது ரஹ்மத்களை மறுமையிலே தன்னடியார்கள் மீது
பயன்படுத்துவதற்காக அவற்றைப் பூரண தயார் நிலையில் வைத்துள்ளான். அதுபற்றி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் நிச்சயமாக
அல்லாஹ்விடத்தில் நூறு ரஹ்மத்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரேயொரு
ரஹ்மத்தைத் தான் ஜின், மனிதன், விலங்குகள், பூச்சிகள்
ஆகியவற்றுக்கிடையில் பகிர்ந்தளித்தான்.
 மெளலவி M.K.M. SUHAIL, புதிய தெரு, வெலிகம -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!