அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், பிப்ரவரி 12, 2015

தொழுகை மார்க்கத்தின் தூணாகும் [தொடர்ச்சி..]

அல்லாஹ்வின் திருபெயரால் ..............

இன்ஷாஅல்லாஹ் நாம் தொழுகையின் சிறப்பைப் பற்றி தொடர்ச்சியாக பார்க்கப் போகிறோம் . நீங்கள் தொழாதவர ? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மறுமை நாளில் முதல் கேள்வி '' தொழுகைப் பற்றிதான்''  இன்ஷாஅல்லாஹ்  இந்த கட்டுரையைப் படித்து விட்டு தொழக் கூடியவர்களாக ஆவீர்கள் .


உபை இப்னு கஅப் [ரலி] அவர்கள் கூறினார்கள்.. அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை  தவறவிட மாட்டார். அவரிடம், ''நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார் .. ''நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் ஒவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி [ஸல்] அவர்கள், ''[உமக்கு நீர் விரும்பும்] அது அனைத்தையும் ஒன்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக! '' என்று கூறினார்கள்.
ஆதாரம்.. முஸ்லிம்]


தங்களது இல்லங்கள் மச்ஜிதிளிருந்து வெகு தூரத்தில் இருப்பதை எண்ணி பள்ளிக்கு அருகிலேயே தங்களது இல்லங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நபி [ஸல்] அவர்கள் இந்த வெகுமதியை வழங்கினார்கள். பள்ளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களது செயலேட்டில் எழுதப்படும் என்பதையும், பள்ளியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட அதிகமான எட்டுக்கள் வீணடிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார்.
ஆதாரம் .. புகாரி]

அன்றைக் காலத்தில் , எந்த ஒரு விளக்குகளும் இருந்ததில்லை. இருப்பினும் உத்தம சகாபாக்கள்  நன்மையை நாடி இருளிலும் , கடுமையான வெயிலிலும் பள்ளிக்கு தொழக் கூடியவர்களாக இருந்தார்கள் . எண்ணி பார்க்கும்போது உடல் சிலிருக்குது .  அவர்களின் உறுதியான ஈமான் எங்கே ! நம் ஈமான் எங்கே..? சில பள்ளிகளில் கூட  வசதி செய்து கொடுக்கிறார்கள்  ஏசி போட்டு சுகமாக தொழுவதற்கு. சுப்ஹானல்லாஹ்!!!  இன்று, நாம் பள்ளிக்கு தொழப் போனால் வாகனத்தில் தான் போகிறோம்  . இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்............

ஃ பஜர்  மற்றும் இஷா தொழுகையை இமாம் ஜமாஅத்துடன்  நிறைவேற்றுவதை வலியுறுத்தும் எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன.  அவைகளில் நபி [ஸல்] அவர்கள் இவ்விரு தொழுகையையும் ஜமாஅத்துடன்  நிறைவேற்றுபவர்கள் அடையும் மகத்தான நன்மைகளை விவரித்துள்ளார்கள். அதில் இரண்டை மட்டும் காண்போம்..

1] உஸ்மான் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் .. ''இஷா தொழுகையை ஜமாஅத்துடன்  நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். ஃ பஜர் தொழுகையையும் ஜமாஅத்துடன்  தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.''
ஆதாரம்.. ,முஸ்லிம்]

2] அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .. ''நயவஞ்சகர்களுக்கு ஃபஜர் மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டில் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள் '' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்.. புகாரி]

மறுமை வாழ்வில் மகத்தான வெற்றியை அடைய ஆவல் கொண்ட இறையச்சமுள்ள முஸ்லிம் இரவு பகலில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ந ஃ பில்கள் தொழுவதைத் தவறவிட மாட்டார்,. அதிகமாக நஃ பில் தொழுவது அடியானை அல்லாஹ்வின் அருகில் இட்டுச் செல்கிறது. அந்த முஸ்லிமை உயர் அந்தஸ்துக்கு கொண்டு சென்று இரட்சகனின் நேசத்தையும் திருப்பொருத்ததையும்  பெற்றுத் தருகிறது. அது உண்மையிலேயே மகத்துவமிக்க உன்னதமான அந்தஸ்தாகும். அந்த நிலையை அடைந்தவரை அல்லாஹ்  தனது வல்லமையால் அருளுக்குரியவராக தேர்ந்தெடுக்கிறான். அவரது செவிப்புலனாக, அவரது பார்வையாக, அவரது கரமாக மாறி விடுகிறான். இதற்கு ஹதீஸ் குத்ஸி சான்றளிக்கிறது.

''எனது அடியான் நஃபிகளின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.''
ஆதாரம்.. புகாரி] 

''எனது கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது .'' ஆதாரம் .. நஸாயி ]

நபி [ஸல்] அவர்கள் தங்களது பாதங்கள் வீங்குமளவு இரவு நேரங்களில் நின்று வணங்கினார்கள். அவர்களிடம் அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அது குறித்து ''அல்லாஹ்வின்  தூதரே! ஏன்  இவ்வாறு தொழுகிறீர்கள்? உங்களது முன் பின் பாவங்களை அல்லாஹ்  மன்னித்துவிட்டானே'' என்று கேட்டபோது ''நான் நன்றியுள்ள அடியாராக ஆக வேண்டாமா? '' என நபி [ஸல்] அவர்கள் பதிலளித்தார்கள்.
ஆதாரம்.. புகாரி, முஸ்லிம்]

அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் எப்பொழுது அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக மாறுவது??  இன்று நம்மில் சிலர் தொழுகைக்காக பல சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம். இந்த சாக்கு போக்கு அல்லாஹ்விடம் கூற முடியுமா என்று சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்! 

இந்த கட்டுரையை படிக்கும் அன்பு சகோதர/ சகோதரிகளுக்கு அல்லாஹ் யாருக்காவது  தொழும் பாக்கியத்தை கொடுப்பான் என்றால் அல்ஹம்துலில்லாஹ்! 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
தொழுகை மார்க்கத்தின் தூணாகும் முதற்பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.**       http://islam-bdmhaja.blogspot.com/2015/02/tholukai.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!