அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், பிப்ரவரி 18, 2015

உண்மையான முஸ்லிம் [சிறுகதை]

உண்மையான முஸ்லிம் [சிறுகதை]

அல்லாஹ்வின் திருபெயரால் ........................

தோளில் மாட்டிய லெதர் பேக் ஒரு சிறிய சூட்கேஸ் சகிதம் கேட்டைத் திறந்துக் கொண்டு நுழைந்தான் யாசர் .
ஏராளமான செடிகளோடு, பறந்து விரிந்த பச்சை புல் தரையாலும் சூழப்பட்டிருந்தது அந்த பங்களா.
யாசர் தயங்கி நடந்தான் . புல் தரையில் பிரம்பு நாற்காலி போட்டு காற்றோட்டமாய் அமர்ந்து அன்றைய காலைப் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தார் ஷஹாப்புத்தீன் . நிழலாட நிமிர்ந்தார் யாரோ ஓர் இளைஞன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து பத்திரிகையை மடித்து வைத்துவிட்டுத் திரும்பினார்.


''அஸ்ஸலாமு அழைக்கும் ''  'வஅழைக்கும் ஸலாம் ' நீங்க?  ''நான் குடியாத்த்திலிருந்து  வருகிறேன் . என் பேர் யாசர் . வாப்பாதான் என்னைய உங்களைப் பார்க்க சொல்லி அனுப்பினார்.  ''அடடா .. வகாருடைய மகனா நீங்க?' ''ஆமாம் சார்! ''உட்காருங்கள் தம்பி ' என எதிர் இருக்கையைச் சுட்டிக் காட்டினார். சூட்கேசையும், பேக்கையும் தரையில் வைத்துவிட்டு அமர்ந்தான் யாசர்.

''வகார் என் சிறுவயது நண்பர் . நீங்கள் குழந்தையா இருந்தபோது உங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்ப வளர்ந்து நிக்கிறீங்கள். வகார் போன் பண்ணியிருந்தார் , உங்களைப் பற்றியும் சொன்னார். என்ன படிச்சிருக்கீங்க?'  '' கம்ப்ப்யூட்டர் சைன்ஸ்ல டிகிரி வாங்கியிருக்கிறேன். வேலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைச்சிருக்கு. வீட்டை விட்டு வெளியே வருவது இதுவே முதல் முறை . புது இடம் , புது ஜனங்க. அதான் வாப்பா உங்களைப் பார்க்கச் சொன்னார்.

உங்களுக்காகவே ஓர் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன்.'' என்றவர் திரும்பி குரல் கொடுக்க வேலைக்காரன் ஓடி வந்தான். ''தம்பியைக் கூட்டிக்கிட்டுப் போய் மாடியில் ஏற்பாடு செய்த அறையைக் காட்டுங்க '' என உத்தரவிட்டு விட்டு , நீங்கள் போய் குளித்துவிட்டு ஓய்வு எடுங்கள். இவ்வளவு பெரிய பங்களாவுல நான் மட்டும் தான் தனியா இருக்கேன் வேலைக்காரர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. இப்பொழுது நீங்கள் எனக்கு பேச்சுத் துணைக்கு கிடைச்சிருக்கீங்க '' என்றார்.

யாசர், ஷஹாப்புத்தீன் பங்களாவில் தங்கி இருந்து வேலைக்குப் போய் வந்தான். காலை ஒன்பது மணிக்கு போய் , மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவான். அவனையும் , அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் இரு விழிகள் கூர்ந்து கவனித்து வருவது அவனுக்குத் தெரியாது.

  அன்று  ஞாயிற்றுக் கிழமை  . விடுமுறை தினம் என்பதால் யாசர் வீட்டிலேயே இருந்தான் . அவன் அறைப்பக்கம் போனார் ஷஹாப்புத்தீன் . அவரைப் பார்த்ததும் எழுந்து வந்தான் யாசர். ''வாங்க சார் ...'' அறைக்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தார் . ''என்ன தம்பி ... வேலையெல்லாம் எப்படி போகுது? ''ரொம்ப நல்லாவே போகுது சார்'' .. ''இந்த இடம் எப்படி? உங்களுக்குப் பிடிச்சிருக்கா..?? ''அலுவலகத்துல எப்படி?''
நான் ஒருத்தன்தான் சார் முஸ்லிம்.  எல்லோரும் நான்முஸ்லிம் .'' அப்படியா..??
 அதிகமா இருப்பதால் கேண்டீன்ல கூட வெஜ்தான் . அசைவம் சாப்பிட்டுப் பழகிப் போன எனக்கு தினம் சைவம் சாப்பிட ஒரு மாதரியாத்தான் இருக்கு. என்ன சார் செய்வது ? ஒரே ஒரு முஸ்லிம்க்காக  அவங்க நான்வெஜ் போடுவாங்களா என்ன..? '' சிறிது நேரம் பொதுவான விஷயங்களை அலசிவிட்டு விஷயத்துக்கு வந்தார் ஷஹாப்புத்தீன்.

''ஏன் தம்பி ... அடிக்கொரு தரம் உங்களை முஸ்லிம்னு சொல்லிக்கிறீங்களே எப்படி?'' திடுகிட்டான் யாசர்.  ''சார்.. சார்.. நீங்க என்ன சொல்றீங்க? நான் உங்கள் நண்பர் வகாருடைய மகன் , என் பேரு யாசர் . அப்படி இருக்க நான் முஸ்லிம் இல்லாம வேறு யாரு?

''வெறும் பெயர் வைத்துக் கொண்டால் முஸ்லிம் ஆகிவிட முடியுமா?'' ''சார் புரியலை.  '' நான் சொல்கிறேன் , உங்கள் பெயர் யாசர். இதை யார் கேட்டாலும்  உங்களை ஒரு முஸ்லிம் என்றுதான் சொல்வார்கள் . ஆனால்,  நீங்கள் உண்மையான முஸ்லிமா? இல்லையே . உங்களை வந்ததிலிருந்தே நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு முறை கூட உங்களை தொழுது நான் பார்த்ததில்லை. பாங்கு சொல்லியும், நீங்கள் பள்ளிக்கு செல்லாமல் லேப்டாப்பில் கம்ப்ப்யூட்டர் கேம் விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓர் உண்மையான முஸ்லிம் முதலில் ஐந்து  கடமைகளையும் நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டும். புனித ஹஜ் கடமையைப் பிற்பாடு நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் தினமும் ஐந்து வேளை தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும்  கட்டாயக் கடமையாக்கப்படுருக்கிறது. கலிமா, தொழுகை, நோன்பு,ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்து கடமைகள்தான் நம்மை மற்ற மதத்தினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது . இவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத நீங்கள் , எப்படி உங்களை ஒரு முஸ்லிமாகச் சொல்லிக் கொள்ளலாம்.'' சுரீர் என சுட்டது ஷஹாப்புத்தீன் வார்த்தைகள்.

அவருடைய உபதேசம் அவனுடைய அறிவுக் கண்களைத் திறக்கச் செய்தது. வெட்கித் தலை குனிந்தவன், உறுதியுடன் நிமிர்ந்து,  ''என்ன மன்னிச்சு விடுங்க சார்  . இத்தனை நாளும் என் வாப்பவையே ஏமாத்திக் கொண்டிருந்தேன். ஆனா, நீங்கள் இவ்வளவு உரிமையோடு என்னைக் கண்டிக்கிற விதத்துல நல்ல அறிவுரையை வழங்கி இருக்கீங்க. இன்ஷாஅல்லாஹ் , இனி நானும் ஓர் உண்மையான முஸ்லிம் என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்'' என்றான். அவனுடைய உறுதியைக் கண்டு மனம் மகிழ்ந்தார் ஷஹாப்புத்தீன்.
இந்த யாசர் போன்ற எத்தனையோ முஸ்லிம்கள்  ''நான் ஒரு முஸ்லிம்'' என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்  .    சிலர் வாரம் ஒருமுறை தொழுவது. இன்னும் சிலர் வருடம் இருமுறை தொழுவார்கள். இவர்களும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் '' நாங்கள் முஸ்லிம்'' என்று. நம்மில் சிலர் எல்லா விடயத்துக்கும்  நேரத்தைச் செலவு செய்கிறார்கள். தொழுகை என்று சொன்னால் . அதற்க்கு மட்டும் நேரம் இல்லை என்று பதில் வரும். முஸ்லிமாக பிறந்தோம்! பெயரளவில் முஸ்லிமாக வாழ்கிறோம் ! மரணிக்கும்போது எப்படி மரணிப்போம்?  சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி..ஜி ஆசிப் அலி -துபாய் /மற்றும் நர்கிஸ்
அல்லாஹ் அவர்களுக்கு  அருள் செய்வானாக!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!