அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, மார்ச் 08, 2015

அல்லாஹ்வின் அழைப்பு


அல்லாஹ்வின்  திருபெயரால் .........

மறுமையில் முதல் முதலாக விசாரிக்கப்படும் தொழுகையைப் பற்றி ,அது சீராக இருந்தால் மற்ற காரியங்கள் சீராகிவிடும் . இல்லையெனில் ...???

பொதுவாக முஸ்லிம்களில் பலர் மனிதர்களைக் கண்டு அஞ்சும் அளவிற்கு, அல்லாஹ்விற்கு அஞ்சுவதில்லை. எடுத்துக்காட்டாக சொல்லப் போனால், அரபு நாடுகளில் சென்று வேலை செய்யும் முஸ்லிம்கள் அங்கு ஐவேளைத் தொழுகையையும் தவறாமல் தொழுகின்றனர். ஆனால் தாய் நாட்டிற்கு வந்து விட்டாலோ அவர்களில் 99 சதவிகிதம் பேர்களுக்குப் பள்ளி வாசல் எங்கிருக்கிறது என்று கூடத் தெரிவதில்லை. இதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால், அரபுநாடுகளில் வேலை செய்வோர், கண்டிப்பாக, அதாவது முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைகளையும் விடாது தொழ வேண்டும். இல்லையேல் , அங்கு காலந்தள்ள முடியாது. ஆயிரக்கணக்காக பணம் சம்பாதிக்க முடியாது.எனவே அரபு ஷேக்குக்கு அஞ்சி அவர்கள் அங்கு தொழுதார்கள் . தாய் நாட்டிற்கு வந்து விட்டால் அவர்கள் யாருக்கு அஞ்ச வேண்டும்? அல்லாஹ்வுக்கா ? அந்த அச்சம் வந்துவிட்டால் தான் எல்லாம் வந்து விடுமே.ஒரு சம்பவத்தை பார்க்கலாம் . பாகிஸ்தானில் முன்னாள் அதிபர்  அய்யூப்கானின்  வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. அவர் அதிபர் ஜியாவுல் ஹக்கைப் போன்றே மார்க்கப் பற்று உடையவர். தொழுகை முதலான மார்க்கக் கடமைகளில்  பேணுதல் உடையவர். அய்யூப்கான் , தாம் அதிபராக இருந்த பொழுது ஒரு முறை ஒரு சிற்றூருக்குச் சென்றார். தொழுகை வேளை வந்த பொழுது, அவர் அவ்வூரிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்றார்.

அங்கு தொழுகை நேரமாகியும் கூட முஅத்தினைத் தவிர்த்து வேறெவரும் இருக்க வில்லை. அது கண்ட அவர் முஅத்தினைப் பார்த்து,  ''பாங்கு சொல்லியாகி விட்டதா?'' என்று வினவ, அதற்கவர்  , ''ஆம் '' என்று பதிலளித்தார் . உடனே அய்யூப்கான் , '' அவ்வாறாயின், இன்னும் தொழுகைக்கு ஒருவரும் வரவில்லையே? '' என்று கேட்க, அதற்கு முஅத்தின் , ''உண்மைதான், இப்பொழுது அவர்கள் தங்கள் வேளைகளில் ஈடுப்பட்டிருப்பார்கள். இரவில் மட்டும் சிலர் தொழ  வருவார்கள் '' என்று கூறினார்.

அதுவரை தம்மை எவரேன அறிமுகப்படுத்திக் கொள்ளாத அந்த அதிபர் , அப்பொழுது , தம்மைப் பற்றி தெரிவித்து, அவ்வூர் முஸ்லிம்களை அழைத்து வருமாறு கூற , அவர் சென்று அவ்வாறே அழைக்க, அவர்கள் அனைவரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.  அப்பொழுது அவர்களை நோக்கி,  ''சற்றுமுன் அல்லாஹ் அழைத்தானல்லவா ?'' என்று கேட்க, அதற்கவர்கள் ''ஆம்'' என்றனர்.

அது கேட்ட அவர் , ''அப்பொழுது நீங்கள் அவனுக்கு அஞ்சி பள்ளிவாசலுக்கு ஓடி வரவில்லை. இப்பொழுது அந்த அல்லாஹ்வின் மிகச் சாதாரண அடிமைகளில் ஒருவனான நான் அழைத்ததும் ஓடோடி வருகிறீர்கள்!'' என்று இடித்துரைக்க, அவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிந்து பேசாமல் இருந்தனர். அப்பொழுது அவர்  , ''இனிமேல் பாங்குச் சத்தம் கேட்டவுடன் அல்லாஹ்வின் அழைப்பாக கருதி அன்றாடம் பள்ளிக்கு வந்து தொழ வேண்டும். மார்க்கக் கடமைகளைத் தவறாது ஒழுகி வரவேண்டும்'' என்றும் அறிவுரை பகர்ந்தார்.

இன்று சில ஊர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு மட்டும்தான் பள்ளிக்கு சென்று ஜமாத்தாக தொழுகிறார்கள் . வயதான நபர்கள் தான் தொழுகைக்கு வருகிறார்கள் . வாலிபர்கள் எங்கே போகிறார்கள்?? அல்லாஹ்  நம் அனைவரையும் மரணம் வருவரை தொழக் கூடிய கூட்டத்தில் ஆகிவைப்பானாக ..
நன்றி S . முஹம்மது பஷீர்
நன்றி..நர்கிஸ்
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!