அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, மார்ச் 15, 2015

நாகரீகம் என்ற பெயரால் .....

நாகரீகம் என்ற பெயரால் .....
அல்லாஹ்வின் திருபெயரால் ............
இன்று நம் முஸ்லிம் சமூகத்தில் நாகரீகம் என்ற பெயரால் நடப்பது . மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடத்தில் புகுந்துவிட்டது. நிறைய சொல்லலாம்.........
ஆனால், நீண்ட கட்டுரையாக ஆகிவிடும் என்ற அச்சத்தில் சுர்க்கமாக சிலவற்றைக் கூறுகிறேன்..... பிறந்த நாள் இது பெரும்பாலும் வீட்டில் சிறப்பாக நடக்கிறது. அந்த நிகழ்சிகளை புகைப்படம் எடுத்து, முகநூளில் போட்டு சிலர் ரசிக்கிறார்கள் . திருமண நாளும் [weddingday ] அதுவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இன்னும் என்ன என்ன நாகரீகம் என்ற பெயரில் நடக்கிறது .


ஆண்களிடமுள்ள மிருகத்தனத்தைக் குறைத்து அவர்களிடமுள்ள குழந்தைத்தனத்துக்கு பயிற்சியளிப்பது குடும்பப் பெண்ணின் கடமையாகும்.

பண்புள்ளவர்களையே பழக்கத்துக்குரியவர்கலாகக் கொள்ள வேண்டும். தாறுமாறான நடத்தையும், ஊர் வம்பைக் கொட்டியளக்கும் வழக்கமும் உள்ளவர்களை அறவே விலக்க வேண்டும்.

டிவி மோகம் வெறியாக வளர்ந்து எத்தனையோ பேருடைய இல்லற அமைதியைக் குலைத்திருக்கிறது. பொழுது போக்கு என்ற அளவில் ஓரளவு அதற்கு மதிப்புத் தரலாமேயன்றி, ஒரேடியாக அதிலே மயங்கிவிடக் கூடாது.

நாலுபேரைப் போல் நாமும் இருக்க வேண்டும் என்று எண்ணும்போது குணவதிகளைப்  பின்பற்றி நடக்க முயல்வதில் தவறு இல்லை. நாகரீகம் என்ற பெயரில் தடுமாறித் தவிப்பவர்களைப் பின்பற்ற நினைப்பது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

வசதியையும், வாய்ப்பையும் ஒட்டியே தேவை இருக்க வேண்டும். இன்றியமையாதனவற்றுக்கு முதல் இடம் கொடுத்து, வாழ்க்கைத் தேவைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். வேண்டாதவற்றில் விருப்பம் கொண்டு, அதனை அடைய முடியாமை குறித்து வேதனை கொள்வது கூடாது.

சபலபுத்திதான் குடும்பத்தில் சஞ்சலம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம். குடும்ப நல்வாழ்வை லட்சியமாகக் கொண்ட திடசித்தம் அமைத்து விட்டால், இல்லறம் இனிதே நடக்கும். தொல்லை தரும் சுமையாக இராது. மன அமைதி தரும் சிறந்த அமைப்பாக விளங்கும்.

கட்டுப்பாடற்ற பேச்சுதான் பல கஷ்டங்களுக்கு மூல காரணம். வாயை அடக்கக் கற்றுக் கொள்வது வாழ்வில் வளம்பெற அவசியம். வெட்டிப் பேச்சிலே பொழுதைக் கழிக்கும் வீணர்கள் தொடர்ப்பை அறவே விலக்க வேண்டும்.

பொழுதைப் போக்க  மேற்கொள்ளும் காரியங்கள் அறிவையும் திறமையையும் வளர்ப்பதாக இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். காலத்தை வீணாக்குவதுடன், கஷ்டங்களையும் தேடிக் கொள்வதாக அவை இருக்க வேண்டாம்.
இன்று பெரும்பாலும்  மக்கள்கள் அவர்களின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள், முகநூளில் , வாட் ஸ் அப் , இன்டர்நெட் , கேம் இப்படி பொழுதுப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். just time pass !!!
அல்லாஹ் நம் அனைவரையும்  தீமையான காரியத்தை விட்டும் காப்பாற்றுவானாக  ! நாகரீகம் என்ற பெயரில் செய்யும் காரியத்தில்லிருந்து பாதுகாப்பானாக!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
காலம் பொன்போன்றது !
நன்றி... நர்கிஸ்
மேல்குறிப்பு .. சத்திய பாதை இஸ்லாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!