ஞாயிறு, மார்ச் 22, 2015

ஆடம்பரம் தேவைதானா...? சிந்தித்துப் பாருங்களேன்...!

ஆடம்பரம் தேவைதானா..? சிந்தித்துப் பாருங்களேன்!
 அல்லாஹ்வின் திருபெயரால் ......

மனித வாழ்க்கையின் அனைத்து நடைமுறைகளையும், இஸ்லாம் எப்படியெல்லாம் செயலாற்ற வேண்டும் என்ற அழகான நல்வழியை காண்பித்திருக்கின்றது . அதன் வழிவந்த இறைவனின் பல்லாயிரக்கணக்கான உத்தம திருத்தூதர்கலாம் நபிமார்களும், கணக்கிலடங்கா சத்திய சஹாபாக்களும் மற்றும் மார்க்க ஈடுபாடுடைய பெரியோர்களும், இன்னும் நல்லடியார்களும் வாழ்க்கை எனும் பாதையை மிகமிக எளிமையான முறையில் வாழ்ந்து வல்லோனின் திருப்பொருத்தத்தை அடைந்தார்கள். எந்த ஒரு செயல்களிலும் அவர்களிடம் ஆடம்பரம் இருந்தது கிடையாது. இதற்கு சாட்சியாக சான்றுகளும், சம்பவங்களும் இஸ்லாமிய வரலாற்றினை புரட்டி பார்த்தால் பாங்காய் எடுத்து இயன்புகின்றது.


நம் அனைவர்களின் மனதில் நித்தம் நித்தம் சலவாத்தாக உலா வரும் எம்பெருமானார் நபிகள் நாயகம் ரசூலே கரீம் [ஸல்] அவர்களும் ஆடம்பரம் செய்வதை மிகவும் வெறுத்து வன்மையாக கண்டித்தார்கள்.

ஆனால் , இன்று ஒவ்வொரு வீடுகளிலும் நடந்க்கின்ற நிகழ்ச்சிகளில் எப்படி எல்லாம் இருக்கின்றன என்பதை அனுபவப்பூர்வமாக நாம் அனைவரும் பார்த்து இருக்கலாம். மார்க்கம் மிகவும் எளிமையான முறையில் செய்யச் சொல்லும் சுன்னத்தான திருமணம் , வீண் செலவுகளும், வேடிக்கை நிகழ்ச்சிகளாலும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆடம்பரமான திருமணத்தை செய்யக் கூடாது என்று    அங்காங்கே நமது கண்ணியத்திற்குரிய உலமாக்கள் பயான்கள் மூலம் தெளிவாய் சொல்லி வருகின்றார்கள். எழுத்துக்களின் வாயிலாக நமது சன்மார்க்க இதழ்களும் ஆடம்பரத்தினை தவிர்க்க வேதனையாய்  கட்டுரைகளை எழுதிக் கொண்டுதான் இருக்கின்றது. இருந்தும்... இன்று  நிகழ்ச்சிகளிலும் கூட   நம்மவர்கள் ஆஅடம்பரம் செய்து வருவதினை பார்க்கும்போது , மனம் வேதனைப்படுகிறது. அப்படி என்னதான் ஆடம்பரம் செய்கிறார்கள் என்ற சந்தேகம் உங்கள் அனைவரின் மனதில் எழுந்திருக்கும் அல்லவா? இதோ அந்த ஆடம்பரத்தினைப்  பற்றிய சிறு தகவல்கள்!

பிள்ளைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் 

சிறு குழந்தைகளுக்கு பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் சில வீடுகளில் வீட்டில் இருக்கும் ஆண்  பிள்ளைகளுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் கூட கொண்டாடப்படுகின்றன . பிறந்த நாள் பெயரைச் சொல்லி, இதற்காக வேண்டிய புத்தம் புதிய ஆடைகளை எடுக்கின்றார்கள்.  வண்ணமயமான கேக்குகள் கிலோ கணக்கில் அவர்களின் பெயர்களுடன் அலங்கரிக்கப்படுகின்றது. அந்த கேக்கை வெட்டும் போது கூடவே போட்டோவும் எடுக்கிறார்கள். வசதி நிறைந்த வீட்டில் வீடியோவிற்கும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. அன்று காலையில் குடும்பத்தாரும், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்களுடன் டிவியின் முன் அமர்ந்து தாங்கள் விளம்பரம் கொடுத்து பிள்ளைகளின் புகைப்படத்துடன் , வாழ்த்துக்களும் வருகின்றதா என்பதைப் பார்க்க மிகுந்த ஆர்வமும் பெருமையும் காட்டுகின்றனர்.

ஆண் பிள்ளைகளுக்கு சுன்னத் [கத்னா ]

மார்க்கம் ஆண்பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகளில் ஒன்றுதான் சுன்னத் [கத்னா] என்ற சிறிய நிகழ்ச்சி . இதிலும் கூட பல வீடுகளில் ஆடம்பரத்துடன் செய்கின்றார்கள். சில கிராமங்களில் நடக்கும் சுன்னத் நிகழ்ச்சியில் இன்றும் கூட ஆண்பிள்ளைகளை பூமாலைகலால்  அலங்கரித்து, காரில் ஏற்றி ஊர் முழுதும் சுற்றி ஊர்வலம் வரும் பழக்கம் இருந்து வருகின்றது. இதைப் போலவே பெண்பிள்ளைகளுக்கு காது குத்தும் போது  கூட அப்படியே செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது.

பெண் பிள்ளை வயதுக்கு வந்தால்... அப்பப்பா ...! இந்த நிகழ்ச்சியில் நடக்கும் வைபவங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதை ஒரு 'மினி' திருமணம் போல் செய்யும் அளவுக்கு ஆடம்பரம் சேர்க்கின்றனர்.

என்ன தாய்மார்களே! உங்கள் குழந்தையின் பிறந்த நாளா? அழகாக ஒளுச் செய்து விட்டு, இரண்டு ரக்க அத்  நஃபில் தொழுது, படைத்த இறைவனிடம் இரு கையேந்தி, யா அல்லாஹ் ! என் குழந்தையின் ஹயாத்தை நீடித்துப் போட்டு, அவர்கள் எங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க கிருபை செய்வாயாக' என்று மிக மன ஓர்மையுடன் துஆ கேட்கலாம். அந்த பிள்ளையையும் அப்படி துஆ கேட்கும் பழக்கம் உள்ளவர்களாக ஆக்கலாம். அந்த பிள்ளையின் எதிர்காலம் இருக்கு,  நல்ல சாலிஹான பிள்ளையாக வர வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாம். இதெல்லாம் பெற்றோர்களுக்கு தோன்றுதோ இல்லையோ, அடுத்தவர்களைப் பார்த்து நல்ல காப்பி அடிக்கணும், அவர்களைப் போல் நாமும் நம் பிள்ளைகளுக்கு சிறப்பாக கொண்டாடனும் என்ற எண்ணம் மட்டும் தான் உதிக்கிறது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்!  மேலே கூறியதைப் போல் எத்தனை தாய்மார்கள் இருக்கிறார்கள்? கூறுங்கள் பார்க்கலாம். மார்க்கத்தில்  இல்லாததை எல்லாம் செய்து ஏன்  இப்படி நடந்து கொள்கின்றீர்கள்? இறைவன் செய்யச் சொன்னத்தை தவிர்த்து விட்டு உங்கள் மனம் போன போக்கில் நடந்தால் நாளைய தினம் உங்கள் மனம் குளிர உங்கள் பிள்ளைகள் நடப்பார்களா? நன்றாக சிந்தியுங்கள்! பல முதியோர்களின் கண்களில் கண்ணீர் தவழ்கின்றது. காரணம் கேட்டால் தான் பெற்ற பிள்ளைகள் செய்த்த புறக்கணிப்பை வேதனையை சொல்கின்றார்கள்.

எனவே , சின்னச் சின்ன நிகழ்ச்சிகளில் வீண் விரயமான அனாச்சாரத்தை தவிர்த்து , அதன் காரணமாக அந்தச் செலவுகளை, தாய்மார்களே! வரதச்சணை   கொடுமையால் திருமணம் ஆகாத எத்தனையோ பெண்களுக்கு கொடுத்து முடிந்த அளவு உதவி செய்யலாமே? கரையேறாத ஏழைக் குமர்களின் கண்ணீர் துளிகளும், பெருமூச்சும் வீட்டின் மூலைகளில் எதிர்ரொலிக்கிரது . தீன்குலத்தின் கண்மணியாம் பெண்மணிகளே!  ஆடம்பரத்தை தவிர்த்து நல்ல காரியங்களில் செயல்பட்டால் எல்லாம் வல்ல இறைவனின் திருப்பொருத்தம் உங்களுக்கும் கிடைக்கும் அல்லவா?  சிந்தித்துப் பாருங்கள்!

நம் பணம்தானே என்று நம் இஷ்ட்டத்துக்கு செலவு செய்ய முடியாது. மறுமையில் அல்லாஹ்விடம் நாம் எல்லாத்துக்கும் கணக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்!  இங்கே பல சாக்கு போக்குகள் சொல்லிவிடலாம் , அல்லாஹ்விடம் இந்த சாக்கு போக்குகள் செல்லாது .
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி.. எக்ககுடி சீனி இப்ராஹிம்ஷா- ஆந்திரா.
நன்றி.. நர்கிஸ்
சத்திய பாதை இஸ்லாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!