அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், மார்ச் 12, 2015

மாநபியின் விண்ணுலகப் பயணமும்,மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினையும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வ பராக்கத்துஹு
  படிப்பினைகள்
  அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை
கடமையாக்கினான். பின்பு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவுரையின்
பேரில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன்
பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு
கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான்.


இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை
நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில்
பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள்
மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை
காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில்
நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை
நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.
 இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" நான்
(மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன்.
அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும்
எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக்
கண்டேன். (நூல்: புகாரி, எண் 3241)
 படிப்பினைகள்:
 எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை
நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று
அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள்
வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக
பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு
தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும்
திடலிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது
சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம்
செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என
எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள்.

 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள்
அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக
இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து
கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை
விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக்
கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று
பெண்கள் கேட்டனர்
 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக்
கருதப்படவில்லையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு
குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;
ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு
விடுவதில்லையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள்
மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்"
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி
ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி, எண் 304)


 இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று
செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்
 மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச்
சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு
செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும்,
மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே!
இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின்
இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக்
கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள்: அபூதாவூத் 4235,
அஹ்மத் 12861)
 படிப்பினைகள்
புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில்
விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக
செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி
விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!

 அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும்
தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என்
தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர்
பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன்
கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள்
ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]

 இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர்
தடுக்கப்படுவார்கள்.


 இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை
நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு
என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை
நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என்
சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள்
உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச்
சென்றார்கள்' என்று கூறப்படும். (நூல்: புகாரி, எண் 7048)

 இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு
நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம்
அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும்
என்று பொருளல்ல.
மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த
ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும்
வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு
எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர்
தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை
தேடுகின்றனர்.

 அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால்
முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து
வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு
சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி
செல்வதாகும்.
எனவே மார்க்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு முற்று பெற்று
விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் எவர் எதை
சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து
விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள்
முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி
சொர்க்கம் செல்லவும் முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக
பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல்
செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக.
நன்றி.. IPCKWT .BLOGSPOT .COM 
தலைப்பு /// மாநபியின் விண்ணுலகப் பயணமும்,மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினையும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!