புதன், ஏப்ரல் 29, 2015

ஒரு அழகிய உபதேசம் !!!

ஒரு அழகிய உபதேசம் !!!
 மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். அவை ..

1. தற்பெருமை கொள்ளுதல்
2. பிறரைக் கொடுமை செய்தல்
3. கோபப்படுதல்
4. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6. பொய் பேசுதல்
7. கெட்ட சொற்களைப் பேசுதல்
8. நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9. புறம்பேசுதல்
10. தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11. பாரபட்சமாக நடத்தல்
12. பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13. பொய்சாட்சி கூறுதல்
14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15. வாக்குறுதியை மீறுதல்
16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17. குறை கூறுதல்
18. வதந்தி பரப்புதல்
19. கோள் சொல்லுதல்
20. பொறாமைப்படுதல்
21. பெண்களை தீய நோக்குடன் பார்த்த

 436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள். குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மலஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் எனவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அறிவிப்பாளர் ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள், தம் தந்தை அபூஸாயிதா (ரஹ்) அவர்கள்தாம் அந்த பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன் எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 2. தூய்மை
 சொர்க்கத்துக்கு வழி எது?
உரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும, நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா அன்ஹு ரளியல்லாஹு, நூல் : அபூதாவூத் 4167)
 அஸ்ஸலாமு அலைக்கும் ( வரவப ),

ஒவ்வொரு மனிதனின் மரணமும் எமது கபர் வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் ஞாபகபடுத்துகின்றன💢👌👌👇

ஒவ்வொரு மனிதனும்  எமது உள்ளத்தில் சில கேள்விகளை தொடுப்போம்?

❓❓❓❓❓


 👉  ஃபஜ்ர் தொழுகையை பள்ளியில் போய் ஜமாஅத்தோடு தொழுதால் அன்றைய பொழுது அல்லாஹ்வுடைய பொருப்பிலே வருகிறோம்.

❓ தினமும் தொழுகிறோமா?


👉 ஐங்காலத் தொழுகையை ஜமாத்தோடு தொழுதால் 27 நன்மைகள்

❓ தினமும் ஐமாத்தோடு தொழுகிறோமா?


👉 குர்ஆனிலே ஓரு எழுத்தை ஓதினால் 10 நன்மை

❓தினமும் எத்தனை சூராக்களை ஓதுகிறோம்?


👉 தினமும் 12 ரக்அத் சுன்னத் தொழுதால் அல்லாஹ் சுவனத்தில் ஓரு வீட்டை கட்டுகிறான்

❓தினமும் தவறாமல் தொழுகிறோமா?


👉 ஓரு சுப்ஹானல்லாஹ் சொன்னால் அல்லாஹ் சுவனத்தில் ஓரு மரத்தை நடுகிறான்

❓ஓரு நாளைக்கு எத்தனை சுப்ஹானல்லாஹ் சொல்கிறோம்?


👉ஓரு தடவை அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு என்று சொன்னால் 30 நன்மை

❓ஓரு நாளைக்கு எத்தனை நபர்களுக்கு ஸலாம் சொல்கிறோம்


👉 ஓரு நோயாளியை காலையில் போய் சந்தித்தால் மாலை வரை 70,000 மலக்குமார்கள் எமக்காக துஆச் செய்கிறார்கள்

❓ ஓரு நாளைக்கு எத்தனை நோயாளியை நாம் சந்திக்கிறோம்?


👉 தொழுகையை எதிர் பார்த்தநாம் பள்ளியில் அமர்ந்து இருக்கும் போது எமது பாவங்கள் மரக்கிளைகளின் இலைகள் உதிர்வது போல் பாவங்கள் எம்மைவிட்டு உதிர்கின்றன.

❓எத்தனை முறை நாம் தொழுகைக்காக பள்ளியில் காத்து இருந்திருப்போம்?


👉நன்மையை ஏவி தீமையை தடுத்தால் அல்லாஹ்விடத்திலே அதிகமான நன்மைகள் உள்ளன.

❓எத்தனை பேருக்கு நன்மை ஏவி இருப்போம் தீமையை தடுத்திருப்போம்?


👉 ஓவ்வொரு நாளும் கோடிக்கனக்கான நன்மைகளை பெற அல்லாஹ் எமக்கு அவகாசம் தந்துள்ளான்.ஓவ்வொரு நாட்களும் எம்மை விட்டு பிரிந்தால் எமது மண்ணறை எம்மை நோக்கி வருகிறது.

❓  என்ன இருக்கிறது அந்த மண்ணறை வாழ்க்கைக்கு எம்மிடத்தில் சிந்தித்துப் பார்ப்போமா?


👉 எத்தனை ஜனாஸாக்கள் எம்மை கடந்து செல்கின்றன.

 ❓அது எம்மை கடக்கும் போது அந்த ஜனாஸாவாக நாம் இருந்தால் அந்த மண்ணறைக்கு எம்மிடத்தில் என்ன உள்ளது நாம் சிந்தித்து பார்த்தோமா?


👉 நாம் மரணித்தபின் மண்ணறை வாழ்க்கை உண்டு நரக வாழ்க்கை உண்டு சொர்க்க வாழ்க்கை உண்டு எல்லாம் நன்றாக அறிந்து வைத்துள்ளோம்.

❓அதற்குண்டான முயற்ச்சி மட்டும் எம்மிடத்தில் இல்லை ஏன்?


👉 சினிமா மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.

❓ஆனால் பார்க்கிறோம் நரகத்தின் வேதனையை தேடியா?


👉 சினிமா பாட்டுக்கள் மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.

❓ ஆனால் கேட்கிறோம். நரகத்தின் வேதனையை தேடியா?


👉 சீரீயல்கள் மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.

❓ஆனால் குடும்பத்தோடு பார்க்கிறோம்.ஏன் குடும்பமே நரக வேதனையை உணரவா?


👉 ஆயிரம் ஜனாஸாக்கள் கண்முன்னே கடந்து சென்றாலும் எமது வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் வரவில்லை என்றால்

❓ எமது மண்ணறைக்கு யார் பதில் சொல்ல முடியும்?


👉 அல்லாஹ்வுடைய தூதர் ஹபீப் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் கப்ரிலியே நடக்ககூடிய வேதனையை மட்டும் நான் உங்களுக்கு எடுத்துச் சொன்னால் உங்களில் யாரும் எந்த ஜனாஸாவையும் அடக்க கப்ருஸ்தான் பக்கமே வரமாட்டீர்கள் என்று.


👉 ஓவ்வொரு வினாடியும் நம்மை விட்டு பிரிந்து சென்றால் திரும்ப வரப்போவதில்லை.
இன்னும் எத்தனை நிமிடங்கள் அல்லாஹ் எம்மை இந்த உலகத்தில் வைத்திருப்பான் என்பதற்க்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை.


👉 தினமும் உறங்கும்
போது 10 நிமிடங்கள் எமது கப்ரை நாம் சிந்தித்துப் பார்த்தால் ஓரு நொடிப்பொழுதைக்கூட எம்மால் பாழாக்க முடியது.


👉ஆனால் நாம் கப்ரை சிந்தித்து பார்ப்பதில்லை காரணம் உயிரோடு படுத்து இருப்பது கட்டில் மெத்தையில்

நிரந்தரமாக படுக்க போகும் இடத்தை தினமும் எண்ணிப்பார்த்தால்

எமது ஈமானும் தக்வாவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


👉 வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ் புக்கிலும் அமர்ந்து கொண்டு 24 மணி நேரமும் உலக காரியங்களையும்  மக்கள் குறைகளையும் ஆராய்ச்சி செய்யக்கூடிய நாம்.

👉 ஓரு வினாடி அடுத்து நாம் சந்திக்கப்போகும் எமது மண்ணறையை ஆராய்ச்சி செய்தால் தெளிவான விடையும் கிடைக்கும்

👉அதற்கான நன்மைகளையும் விரைந்து செயல்படுத்தலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

👉 நாம் வேண்டுமென்றால் மண்ணறையை மறந்து வாழலாம் அது ஓரு நாள் எம்மை நினைக்கத்தான் போகிறது.

👉 நாம் வேண்டுமென்றால் மண்ணறை வாழ்க்கையை விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அது ஓரு நாள் எம்மை விரும்பத்தான் போகிறது.

👉 ஒவ்வொரு ஜனாஸாவும் எம்மை கடந்து செல்லும் போது எமக்கு அல்லாஹ்வுடைய அச்சம் அதிகரிக்க வேண்டும்.

கப்ர் வாழ்க்கை கண்ணில் தோன்ற வேண்டும்.
நரகத்தின் வேதனைகள் எம்மை அமல்களால் பாதுகாக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!