அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

மீண்டும் சுனாமி வரும் [தொடர்ச்சி ]

உலகம் அழிவின் பால் சென்றுக் கொண்டிருக்கிறது.
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.........
சென்ற இதழிலின் தொடர்ச்சி .................
நடந்தவை நமது சிந்தனைக்கு ..........

''சமூது கூட்டத்தார் ஒரு பெரிய சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள். ஆது கூட்டத்தார்களோ , அதி வேகமாக விரைந்து செல்லும் [புயல்] காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.


எழு இரவுகளும், எட்டுப் பகல்களும், தொடர்ச்சியாக அவர்கள் மீது அவன் அதை வீசச் செய்தான்.'' [69.. 5,,6,7]

என்னுடைய பொருள் எதுவும் எனக்குப் பலன் அளிக்கவில்லையே என்று [கதறுவான்]

கொலை, கொள்ளை, சூது- வாது , பொய்- பித்தலாட்டம், ஏமாற்றுதல், கேலி செய்தல், புறம் பேசுதல், அளவை நிறுவையில் ஏமாற்றுதல், அபகரித்தல், அநியாயம் செய்தல், லஞ்சம் இன்னும் பஞ்சமா பாதகங்கள் இப்படி இன்னும்-இன்னும் எத்தனை- எத்தனையோ புறம்பான செயல்கள் மலிந்துவிட்ட உலகில், இறைவனின் கோபப்பார்வையால் புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற சோதனைகள் ஏற்படும்.

இன்று தண்ணீர் பஞ்சம் உலகம் முழுவதும் இருக்கின்றது. ஒரு பக்கம் தண்ணீர் பஞ்சம் , மற்றொரு பக்கம் வெள்ளத் தண்ணீரால் கண்ணீர் விட்டு அழும் அழும் கோலம். பஞ்சம் , பசி, பட்டினி, வறுமை இவைகளெல்லாம் இறைவனின் கோபத்தால் ஏற்படும் கோரங்கள் . இவைகளெல்லாம் இயற்கை என்றும்,  கால மாற்றத்தால் ஏற்படுபவை என்றும் கூறி ஆன்மீகக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதோர் , மேற்காணும் சீற்றங்கள் ஏற்படாமல் இருக்க எந்த முன்னேற்பாட்டு கண்டுபிடிப்பையும் செய்ததாக இல்லை .

இறைவனின் கோபப் பார்வையிலிருந்து மீளும் வழிமுறைகளை மேற்கொண்டால், அதுவே மனிதர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்பதை நினைவில் கொள்ளட்டும்.

ஆண்  -ஆணிடமும், பெண்- பெண்ணிடமும் இன்பம் காணும் கயமைத் தனத்தை  சில நாடுகள் ஆதரிக்கிறது. அதற்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இத்தகைய நாற்றச் செயலைச் செய்த  லூத் நபி கூட்டத்தார்.  எச்சரிக்கையை எள்ளி நகையாடியதால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள். எனவே சிந்தியுங்கள். இறைவனின் கோபம் ஏற்படாதவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கருணையாளனிடமே கையேந்துங்கள் 

மக்களின் தீய செயல்களுக்கு இறைவனின் தண்டனைகளான கடல் திடலில் ஏற்படுபவைகலான புயல், பூகம்பம், கடல் கொந்தளிப்பு போன்றவைகள் மிகச் சிறிய அளவிலான படிப்பினைகளே ஆகும். அன்றி , அவன் முழுமையாக சோதித்தால் உலகில் எந்த உயிரனமும் இருக்க முடியாது  .

அல்லாஹ் கூறுகிறான் .........

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி [த்துத் தண்டி] ப்பதாக இருந்தால் , உயிர்பிராணிகள் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்,, ஆனால் ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை [ப்  பிடிக்காத] பிற்படுத்துகிறான்- அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும், [தண்டனை பெறுவதில்] அவர்கள் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள்.  அல்குர்ஆன் ..61,,16]

அல்லாஹ்வின் பிடி ரொம்ப கடுமையானது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் சோதிக்க நாடிவிட்டால் , நல்லவர்கள்-கெட்டவர்கள் என்று  பார்க்க மாட்டான். நல்லவர்களும் அந்த சோதனைகளை அனுபவிக்க நேரிடும்.  ஒரு ஹதீஸின் கருத்து.. ஒருவர் தீமைகள் நடப்பதைப் பார்த்தால் அவர் கரத்தால் தடுக்கட்டும் அல்லது வாயால் தடுக்கட்டும்  அல்லது மனதினால் வெறுத்து  விடட்டும் . இதுதான் ஈமானின் கடைசி பகுதி.

அழிவுகள் ஏற்படும் என்பதை குர்ஆன் , ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது. அவைகளை எந்த விஞ்ஞானமும் , ஆராய்ச்சியும் தடுத்துவிட முடியாது. அழிவுகளிலிருந்து பாதுகாப்பு வளையம் அமைத்தாலும், இறைவன் விதித்துவிட்டவைகளை தடுத்து விட முடியாது.

''அச்சம், பசி, பொருட்சேதங்கள், உயிரிழப்புகள், விளை  பொருட்சேதங்கள் மூலம் உங்களை நாம் சோதிப்போம்'' என்ற இறைவசனம் உண்மையானது. உண்மையாக்கிக் கொண்டிருக்கிறது.இனியும் உண்மையாகும்.

எனவே , மனிதர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, பாவமன்னிப்புக் கோர வேண்டும். மீண்டும் தவறு செய்ய மாட்டோம் என்று மன உறுதி கொள்ள வேண்டும். நேர்மை, நியாயம், ஒழுக்கத்தின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்து அல்லாஹ்வின் அன்பைப் பெற  வேண்டும். தீமைகளின் பக்கம் போகாமல், நன்மைகளின் பக்கம் மட்டுமே மனிதன் கவனம் செலுத்தினால் இறைவனின் கருணைப் பார்வை கிடைக்கும்.

அழிவுக்குக் காரணம் அநியாயங்கள்தான்! 
-அண்ணல் நபியின் அறிவிப்புகள்..

* சூதாட்டம் வியாபாரமாக நடக்கும். * நீதி விற்கப்படும் * அநியாயம் செய்வது பெருமையாகக் கருதப்படும்  * செல்வந்தர்களிடமே செல்வம் குவியும்* உணவில்,  நாகரீகம் தோன்றும்* மார்க்கப் பேணுதல் குறையும்* பத்தினித்தனம் இல்லாமல் போகும்* சர்வாதிகாரம் நடக்கும்.
* ஒரு ஆண்டு ஒரு மாதம் போலும், ஒரு மாதம் ஒரு வாரம் போலும், ஒரு வாரம் ஒரு நாள் போலும், ஒரு மணி  நேரம் ஒரு நிமிடம் போலும் விரையும். * வட்டி அதிகமாகும்* பொய் சத்தியம் செய்வர்* நிறுவை அளவையில் ஏமாற்றுதல் நடக்கும்* பெண்களின் ஆடை நிர்வாணமாயிருப்பது போல் இருக்கும்* பெண்கள் ஆட்சி செய்வர்* வகுப்பு துவேசங்கள் வளரும் * விபச்சாரம் அதிகமாகவும், பகிரங்கமாகவும் நடக்கும்* ஹலால்- ஹராம் என்ற பாகுபாடு இல்லாமல் போய்விடும்* ஆண் , ஆணையும், பெண் பெண்ணையும் விரும்புவார்கள்* வீண் குழப்பங்கள், சண்டை சச்சரவு, வெட்டுக் குத்துக்கள் நடைபெறும்* உள்ளம் ஒன்றும் புறமொன்றும் பேசும் தலைவர்களும், மக்களும் இருப்பார்கள்* பொதுச் சொத்துக்கள் அபகரிக்கப்படும்* தொழுகை சடங்கு போல் நடைபெறும்* பூகம்பங்கள் அதிகமாகும்* நெருப்பு, புயல், பூகம்பம் ஆகியவைகளால் நகரங்கள் நாசமாகும்.

நீங்களே இவைகளை இப்பொழுது இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் !
அல்லாஹ் நம் அனைவரையும் ஈமான் உள்ளவர்களாக வாழச் செய்து, ஈமானுடம் மரணிக்கும் கூட்டத்தில் ஆக்குவானாக  . நல்லவர்களுடன் மறுமையில் எழுப்புவானாக . ஆமீன்...........
முற்றும் *
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி.. நர்கிஸ்
நன்றி.. மௌலவி. அல்ஹாஜ். ஜம்பை ஜப்பார் தாவூதி
சத்திய பாதை இஸ்லாம் .      

மீண்டும் சுனாமி வரும் முதல் பகுதிப் பார்க்க இதைக் கிளிக் செய்யவும்..
http://islam-bdmhaja.blogspot.com/2015/04/sunaami.html
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!