அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஏப்ரல் 18, 2015

தவ்பா எனும் பாவமீட்சி

சீதேவித் தனத்தின் அடையாளங்கள் நான்கு!
தான் செய்துவிட்ட பாவங்களை மறவாதிருப்பது !
செய்த நன்மைகளை மறந்துவிடுவது!
தீனின் விஷயத்தில் தன்னைவிட மேல்நிலையில் உள்ளவனைப் பார்ப்பது!
உலக வாழ்க்கையில் தனக்குக் கீழ் உள்ளவனைப் பார்ப்பது!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.........
அல்லாஹ் வேதனைகளை இறக்குவது மக்கள் செய்யும் பாவத்தின் காரணமாகத்தான் . பாவங்களை அழிப்பது நன்மைகளை கொண்டுதான்! அல்லாஹ் தன் அருள் மறையில்..

ஈமான் கொண்டவர்களே!  [நீங்கள்] இறைவனிடம் கலப்பற்ற தவ்பா [எனும்] பாவமீட்சித் தேடிக்கொள்ளுங்கள்! என்பதாகக் கூறுகிறான்.
[அல்குர்ஆன் ]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

''உங்கள் பாவங்களுக்காக இறைவனிடம் தவ்பா செய்து நற்செயல்களின் பால் மீளுங்கள். நான் நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்புக் கோரி வருகின்றேன்.
ஆதாரம்..புகாரி]


ஒருவன் ஒரு தீய செயலைச் செய்தவுடன் வானவர் அதை எழுதுவதில்லை. ஒரு மணி நேரம் வரை காத்திருக்கின்றார். ஏனெனில் அம்மனிதர் தவ்பா செய்கின்றானா இல்லையா என்று எதிர்பார்க்கின்றார். அவன் தவ்பா செய்யாவிடின் அந்தத் தீய செயலை எழுதுகின்றார்.

அறிவுக்கடல் இமாம் கஸ்ஸாலி [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்..

'தவ்பா ' என்னும் பாவமீட்சி என்பது இறைவழியில் அடி எடுத்து வைக்கும்  ஓர் இறையடியானுக்கு முதன்மையானதாகவும் நம்முடைய ஆதிபிதா ஆதம் [அலை] அவர்களைப் பின்பற்றும் நர்செயலாகவும் அமைந்துள்ளது. ஆதம் [அலை] அவர்கள் துவக்கத்தில் ஒரு தவற்றைச் செய்து விட்டுப் பின்னர் அதை எண்ணி வருந்தி பாவமீட்சி தேடிக் கொண்டார்கள். அல்லாஹூ தஆலாவும் அவர்களின் பிழையினை மன்னித்து தவ்பாவையும் ஏற்றுக் கொண்டான்.

ஆனால் ஷைத்தான் பாவம் செய்துவிட்டு பின்னர் பாவமீட்சி தேடாதிருந்த காரணத்தால் நரகநெருப்பிற்குரியவன் ஆனான்.

ஆதம் [அலை] அவர்கள் தாம் செய்து விட்ட பிழையை கை சேதம் வருத்தம் என்னும் நெருப்பால் கருத்து அதைத் தூய்மை செய்து கொண்ட காரணத்தால் நரக நெருப்பில் இருந்து காக்க பெற்றார்கள்.

எனவே நீ பாவம் செய்துவிடின் அவர்களைப் போன்று பாவமன்னிப்புக் கோரி பிழை பொறுக்கத் தேடிகொள்வாயாயின்  அவர்களைப் பின்பற்றியதன் காரணமாக அவர்களின் வழி வந்தோனாக  ஆகி விடுகின்றாய். அவ்வாறின்றி தவறு செய்வதில் அவர்களை பின்பற்றி பாவமீட்சி தேடுவதில் அவர்களைப் பின்பற்றாதிருப்பாயாயின் , நீ ஷைத்தானின் வழித்தோன்றலாய் ஆகிவிடுவாய்.

அறிந்து கொள்!

ஆதம் [அலை] அவர்களைப் படைக்கப் பயன்படுத்தப்பட்ட களிமண்ணால் நன்மையுடன் தீமையையும் கலந்து குழைக்கப்பட்டு  உருவாக்கப்பட்டது. எனவே அந்த  'ஷர்ரு ' என்னும் தீங்கை அழிக்கவேண்டுமாயின் வருத்தம் எனும் நெருப்பால் அல்லது நரகமெனும்  நெருப்பால்தான் சுட்டுக் கரிக்க முடியும்!

ஓ ! ஆதமுடைய மகனே!

இவ்வுலகில் நீ எவ்வாறு [உன் விருப்பபடி] நடக்க வேண்டும் என்று என்னுகின்றாயோ அவ்வாறே நடப்பதற்கு உனக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது நீ அறிவாளியாக இருப்பின், நீ செய்த விட்ட பாவத்தை வருத்தம் எனும் நெருப்பால் சுட்டுக் கரித்து  , நரக நெருப்பிலிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக! அப்பொழுதுதான் ஆதம் [அலை] அவர்களின் வழி வந்தோன்  ஆவாய் ! அவாரின்றி பாவத்தைச் செய்து விட்டு பிழை பொறுக்கத் தேடாதிருப்பாயாயின் நீ ஷைத்தானின் இனத்தைச் செர்ந்தோன் ஆவாய்!

மரணம் என்பது எந்த நேரத்தில் நம்மை அணுகும் என்பதை நாம் அறியோம். எனவே நீ விரைவாகப் பாவமீட்சி தேடிக்கொள்!  அல்லாஹூத் தஆலா  தன் அடியான் செய்யும் தவ்பாவின் காரணமாக மகிழ்ச்சி கொள்கிறான்.

தூய உள்ளத்துடன் பாவமீட்சி தேடி நற்செயல் ஆற்றுபவர்களின் பிழைகளைப் பொறுப்பதுடன்  முன்செய்த பாவங்களையும் கூட நன்மைகளாக மாற்றி விடுகிறான்.

மேலும் பாவங்கள் செய்வதை நிறுத்தாமல் அவற்றைத் தொடர்ந்து செய்வதிலேயே காலத்தைக் கடத்தி பாவமீட்சி தேடுவதை விட்டுவிலகி நின்று விடும்  பாவிகளைப் பார்த்து நீங்கள் மிகுதியான பாவங்களைச் செய்து விட்ட காரணத்தால் நான் அவைகளைப்  பிழை பொறுக்கமாட்டேன் என்று எண்ணி நன்றி கொன்ற நிலையில் என் அருளை விட்டும் விரக்தி கொண்டு விடாதீர்கள். அவ்வாறு நீங்கள் என் அருளில் [பிழை பொறுக்குதலில் ] விரக்தி அடைந்து விடுவீர்களாயின், அதுபொழுது உங்களை அழித்து  விட்டு உங்களுக்கு பகரமாக வேறு    ஒரு கூட்டத்தினரை உண்டாக்கி அவர்கள் பாவங்கள் செய்ததன் காரணமாக அக்கூட்டத்தவர்கள் அப்பிழைகள்கள் எண்ணி வருந்தி சஞ்சலப்பட்டு முனங்கிடும் முனகலாகிறது, வானவர்கள் செய்திடும் தஸ்பீஹ் களின்  இனிமையான ஒலிகளை விட எனக்கு அப்பாவிகளின் வேதனை முனகல்கள் உவப்பானவைகலாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் தவ்பா என்னும் பாவமீட்சி தேடுவது பற்றித் திருக்குர்ஆனிலும்  , நபிமொழிகளிலும் நிரம்ப சிறப்பித்த்துச் கூறப்பட்டுள்ளன.
எனவே தூய உள்ளத்துடன் அல்லாஹ்வினிடம் பாவமீட்சித் தேடி அவனது அருளைப் பெற்றுக் கொள்வோமாக.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

ஒருவன் தான் செய்த பாவத்தை விட்டும் தவ்பா செய்து மீண்டு விட்டால் அவன் பாவமே செய்யாதவன் போலாவான்.   

அறிந்துகொள் !

தவ்பா என்னும் பாவமீட்சிக்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன..
செய்து விட்ட தவறுகளை எண்ணி வருந்துவது*
இனி எந்தப் பாவத்தையும் செய்வதில்லை என்று உள்ளத்தில் உறுதிகொள்வது *
எந்நிலையிலும் பாவத்தின்பால் மீளாதிருப்பது , அதை விட்டும் நீங்கியிருப்பது

அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!